என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூலகர் பணி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
- நூலகப்பணியில் 35 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு
- ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்
சேலம்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாைணயம் ஒருங்கிணைந்த நூலகப்பணியில் 35 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த நூலக பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக கணினி வழி தேர்வானது, நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளான நூலக உதவியாளர், நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை -2 க்கு நாளை (13-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நூலக பாட தேர்வும், மதியம் 2.30 மணிக்கு பொது அறிவு மற்றும் தமிழ் தகுதித்தேர்வும் நடைபெறுகிறது.
அதேபோல் கல்லூரி நூலகர், நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர் பணிக்கு 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு நடைபெறுகிறது.இதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது டி.என்.பி.எஸ்.சி. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.






