என் மலர்
சேலம்
- பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
- இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.
சேலம்:
சேலம் அன்ன தானப்பட்டி நாரா யணபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. கூலி தொழிலாளி. இவ ரது மகள் சிவஜோதி (வயது 19). இவர், பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்க ளது மகளை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மாய மான கல்லூரி மாணவி சிவ ஜோதியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானதற்கு காதல் விவகாரம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
- இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.
எடப்பாடி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி யில், நீண்ட நாள் கோரிக்கை யாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரி யிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதல்-அமைச்சருக்கு அளித்திருந்தார்.
அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.
முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகு தியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலை யில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அப்பகு திக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- திருமணி முத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வீதி உலா நடக்கவில்லை.
சேலம்:
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணி முத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தினையொட்டி சேலம் மாநகரில் சிவன் தேர், பெருமாள் தேர் என அடுத்தடுத்த நாட்களில் தேர்த்திருவீதி உலா நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வீதி உலா நடக்கவில்லை.
இந்த ஆண்டிற்கான தேரோட்ட வைபவம் கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கடந்த 30-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரங்கள்
இதனை தொடர்ந்து, இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் அழகிரிநாத பெருமாள் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோபாலா என முழக்கமிட்டு தேரை இழுத்தனர்.
போக்குவரத்து மாற்றம்
சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். தேரோட்டத்தையொட்டி தேர் செல்லும் சாலையில் மின்சார வயர்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. போக்குவரத்தி லும் மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது.
- இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது. இதன் காரண மாக பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக சேலம் மண்ட லமான சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, திரு வண்ணாமலை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்க ளூருக்கும் இன்று (சனிக்கி ழமை) முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
- புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற மானி யத்துடன் கூடிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
- இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
சேலம்:
தமிழ்நாடு அரசு ஆர்வ முள்ள படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ஆவன செய்யும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற மானி யத்துடன் கூடிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 35-லிருந்து 45-ஆகவும், சிறப்பு பிரி வினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45-லிருந்து 55-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்பொழுது அர சாணை வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்ப டுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனு தவி திட்டமான படித்த வேலையற்ற இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், தகுதியான அதிகபட்ச மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாகவும் உயர்த்தி அர சாணை வெளி யிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணை யதளத்தில் கல்வித் தகு திக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதி வேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வங்கி கிளைக ளுக்கு தகுதியின் அடிப்படை யில் பரிந்துரை செய்யப்படும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வ முள்ள தொழில் முனை வோர்கள் புதிய தளர்வுகளு டன் கூடிய நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் தொடங்கி பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
- வடமன் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் கிரா மத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், மார மங்கலம் பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் வடமன் (45), என்பவரது தோட்டத்தில், கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு எடுத்திருந்தது கண்டுபி டிக்கப்பட்டு, அவருக்கு ரூ.55,000 அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில், எனது தந்தைக்கும் வடமனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் மின்சார துறை அதிகாரிகளிடம் எனது தந்தை தான் இந்த விவரத்தை கூறியிருப்பார் எனக் கருதி, கடந்த 31-ந் தேதி, வடமன் தான் வைத்தி ருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார். அதனால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்ப டையில் ஏற்காடு போலீசார், வடமன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பசு மாட்டை சுட்டு கொன்று விட்டு தலைமறைவாக உள்ள வடமனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
- விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, புளியம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை, ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் அருண்குமார் (வயது 22) என்பதும், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீசார், தொடர்ந்து அவர் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எடப்பாடி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதலமைச்சருக்கு அளித்திருந்தார்.
அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது.
முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகுதியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
- பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் கந்தசாமி (வயது 63), வீரமணி (54), சடையாண்டி ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி (40). இவர்கள் பங்குதாரராக சேர்ந்து பூத நாச்சியார் கோவில் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சதீஷ்குமார் (41), நடேசன் (50), பானுமதி (60) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் காயமடைந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களை நேற்று சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் இறந்து போன 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் காசோலையையும் வழங்கினார்.
இந்த நிலையில் பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மகேஸ்வரிக்கு காயம் அதிக அளவில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கந்தசாமி மற்றும் வீரமணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் மகேஸ்வரி நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் உடையாபட்டியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சாமிக்கு வார பூஜை, மாத பூஜை, வருட பூஜை நடத்தியதாகவும், இதற்காக அபிஷேகப் பொருட்கள் மாலை அலங்கார பந்தல் சீரியல் பல்புகள் அமைத்ததாகவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்ததாக ரூ.12 லட்சம் வரை எடுக்கப்பட்டதாகவும், போலி பில் வைத்து மோசடி செய்யப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்த மோசடி நடந்ததாகவும் அப்போது கோவில் செயல் அலுவலராக சசிகலா என்பவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அப்போதைய செயல் அலுவலராக இருந்த சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையின் நீர்மட்டம் நேற்று 103.70 அடியாக இருந்த நிலையில், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 1,503 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 1,804 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 103.70 அடியாக இருந்த நிலையில், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.
- சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது.
- விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.
சேலம்:
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி யது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.
இரவு நேரத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சுகவனேஸ்வ ரருக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்தியான சுகவனேஸ்வ ரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராஜகணபதி கோவில் முன்பு உள்ள, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்ச னைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருத்தே ரோட்டம் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர் கள் நமச்சிவாயா நமச்சி வாயா என கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேரானது ராஜகண பதி கோவிலில் தொடங்கி, 2-வது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது.
தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருத்தேர் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, இன்று அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






