என் மலர்
சேலம்
- சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
- 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சேலம்:
சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் (வயது 41). இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், குமரேசனிடம் செல்போனை பறித்த மணியனூர் நேதாஜி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (25), தாதகாப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற மணி (38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் சூரமங்கலம் அடுத்த குரங்குசாவடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனிதா குரங்குசாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அடுத்த குரங்குசாவடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனிதா (வயது 37). இவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குரங்குசாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். சம்பவம் குறித்து இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, சமீப காலமாக வழிபறிக் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. போலீசார் இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
- ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.
- கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.
அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து புகார் அளிக்க வந்த மகேஸ்வரி கூறும்போது, மலைப்பகுதியான ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.
மேலும் கர்ப்பிணி பெண்களை தொட்டிலில் கட்டிக்கொண்டு தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் எங்கள் ஊருக்கு பெண் கொடுக்க மறுக்கின்ற னர். காரணம் சாலை வசதி இல்லாத பகுதியில் பெண்ணை கொடுக்க விருப்பம் இல்லை என தெரிவிக்கின்றனர்.
இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரி களை சந்தித்து மனு வழங்கி யும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக தலையிட்டு எங்கள் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ சித்ரா உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட பல்வேறு இளநிலை பட்டப் படிப்புக்கான முதலா மாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப் பப் பதிவு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்தது. இக்கல்லூரிகளில் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு நடப்பாண்டு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்பித்தனர்.
விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மே மாதம் 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அதன் பிறகு கலந்–தாய்வு நடை பெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக ளுக்கு அட்மிஷன் ஆணை வழங்கப்பட்டது.
இதனால் சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் செயல்படுடும் 22 அரசு கல்லூரிகளில் இடங்கள் நிரம்பின.
இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர்.
பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் வகுப்பு பேராசி யர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.
இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப் பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.
- பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
- இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.
வாழப்பாடி:
நிலத்தடி நீர் காக்கும் பனை மரங்களின் பயன்கள் குறித்தும், உதிர்ந்து விழுந்து வீணாகும் பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலை களிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணம், மாசிநா யக்கன்பட்டி, உடையாப் பட்டி, பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றி ணைந்து, இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.
இக்குழுவினர் ஏற்படுத் திய விழிப்புணர்வால், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி ஏரியில் திரண்ட பள்ளி, கல்லுாரி மாணவ–மாண வியர் மற்றும் தன்னார்வலர் கள், நுாற்றுக்கணக்கான பனை மர விதைகளை சேக ரித்து ஏரிக்கரையில் விதைத்தனர். இக்குழுவின ருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள் ளனர்.
- சேலம் மாவட்டம் தீவட் டிப்பட்டி அடுத்த கே.மோ ரூர் பகுதியை சேர்ந்தவர் குமார் விவசாயி.
- மேச் சலுக்காக கட்டி இருந்த இவரது மாடு, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந் துள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட் டிப்பட்டி அடுத்த கே.மோ ரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(46), விவசாயி. இவர் சொந்தமாக ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மேச் சலுக்காக கட்டி இருந்த இவரது மாடு, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந் துள்ளது. இது சம் பந்தமாக காடை யாம்பட்டி தீய ணைப்புத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் ராஜ சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து, பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). இவரது மகன் கிஷோர் (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பக்ரீத் பண்டிகை விடுமுறைக்காக கிஷோர் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை கிஷோர், தனது பாட்டியை வைகுந்தத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் பெத்தாம்பட்டி கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.
மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், கிஷோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.
- அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் மீது மோதியது.
ஆத்தூர்:
சேலத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே புகுந்தது.
இந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். அப்போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பஸ் பயங்கரமாக மோதி பக்கத்தில் உள்ள சாலையில் புகுந்து சென்றது.
அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் சுற்றுலா பயணிகள் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் படுகாயம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
விபத்தில் சுற்றுலா பஸ்சில் இருந்த பயணிகள், கார் டிரைவர் உள்ளிட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பொதுமக்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் 3 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர்.
- காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர். நேர்த்தி கடனை நிறைவேற்ற ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மீன்களை வாங்கி சுவைத்தும், அண்ணா பூங்காவிற்கு சென்று ஊஞ்ச லாடியும், சறுக்கு விளையாடி யும் மகிழ்ந்தனர். சிறிய வர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லா மல் விளையாடி மகிழ்ந்தனர்.
மான், முயல்கள், பாம்புகள் மற்றும் மீன்காட்சி சாலையும் பார்த்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 7513 சுற்றுலா பணிகள் வந்து சென்றனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 37 ஆயிரத்து 565 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா நினைவு கோபுரத்தை 772 சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.3860 வசூல் ஆனது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழக மற்றும் அண்டை மாநிலங்க ளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
பக்ரீத் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாளான கடந்த 4 நாட்களாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தி ருந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட், சேர்வரா யன் குகை கோவில், லேடிஸ் சீட், ஜெண்ட் சீட் என அனைத்து பகுதிகளிலும் குடும்பத்து டன் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்தி ருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த தால் ஏற்காடு மலை பாதை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ராஜசேகர், கலைவாணி தம்பதியினர் கடந்த 29-ந்தேதி துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சேலம் தாசநாயக்கன் பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
- இந்த தம்பதியினருக்கு தனம் (வயது 12), பூர்ணி ( 10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் செட் டிச்சாவடி ஊராட்சியைச் சார்ந்த ராஜசேகர் - கலை வாணி தம்பதியினர் கடந்த 29-ந்தேதி துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சேலம் தாசநாயக்கன் பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த னர். இந்த தம்பதியினருக்கு தனம் (வயது 12), பூர்ணி ( 10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் 3 பேரும் விநா யகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் படித்து வருகின்றனர். 3 பேரும் அவரது தந்தை வழி பாட்டி உண்ணாமலை பாதுகாப்பில் உள்ளனர். விபத்தில் பெற்றோரை இழந்ததால் ஆதரவின்றி தவித்த 3 பேரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலரால் கவுன் சிலிங் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சேலம் குரும்பப்பட்டி அருகில் உள்ள பாட்டி உண்ணா மலையின் இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் கூறினார். மேலும், குழந்தைகள் 3 பேருக்கும் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
அப்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சேலம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழியாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
- அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை நாமக்கல்லுக்கு அரசு பஸ் சென்று கொண்டி ருந்தது. சேலம், சீலநா யக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழி யாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், லாரியின் பிரேக் திடிரென பழுதானதால், சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர், பஸ் மீது மோதாமல் இருக்கு ஓரமாக நிறுத்த முயன்றபோது, பஸ்சில் உரசியது தெரியவந்தது. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
- இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக் கன்பாளையம் பகுதி கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
பெத்தநாயக்கன் பாளை யம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளி பயிர்களில், இலையின் அடிப்பகுதியில் இருந்து சாறு உறிஞ்சி தாக்கும் செம்பேன் சிலந்தி தாக்குதலால், இலைகள் பழுத்து உதிர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது தோட்டக் கலைத் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பெத்தநாயக்க ன்பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோதைநாயகி, உதவி அலுவலர் மதியழகன் மற்றும் ஏத்தாப்பூர் மர வள்ளி ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை பேராசி ரியர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பெத்தநாயக்க ன்பாளையம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளித் தோட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து இக்குழுவினர் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கினர்.






