search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டையாம்பட்டி பெண் கொலையில்கைதான ரவுடியின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை
    X

    ஆட்டையாம்பட்டி பெண் கொலையில்கைதான ரவுடியின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை

    • லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கோபிசெட்டிப்பாளை யத்தில் உள்ள ெசாத்தை அடகு வைத்து சீரகாபாடியில் ரூ.7 லட்சத்தில் லட்சுமிக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்தேன்.

    நான், சிறையில் இருக்கும்போது அவர், இன்னொரு வாலிபருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். இதனை என்னிடமே கூறினார். சம்பவத்தன்று நள்ளிரவு வெளியே போய் விட்டு லட்சுமி வந்தார். எங்கே போய் விட்டு வருகிறாய் என்று கேட்டபோது, தொடர்பு வைத்துள்ள வாலிபரை பார்த்து விட்டு வருவதாக தைரியமாக கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நான் வாங்கிக் கொடுத்த நிலத்தை கொடு என கேட்டபோது, லட்சுமி மறுத்து தப்பி ஓட முயன்றார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொன்றேன் என ரகு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

    பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை

    இந்த நிலையில் சரண் அடைந்த இவரது கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசார் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி, 2 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்களை அழைத்துச் சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு அம்லா அட்வின், இன்ஸ்ெபக்டர் அம்சவல்லி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, வேறு கொள்ளை, கொலை உள்ளிட்ட ஏதாவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×