என் மலர்
நீங்கள் தேடியது "கோமிங் ஆப்ரேசன்"
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி முதல் இந்த மாதம் 2-ந்தேதி வரை கோமிங் ஆப்ரேசன் மேற்கொள்ள காவல் துறை தலைமையகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதில் சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 28 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 6,533 வாகன ஓட்டிகள் மீது சாலை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதையில் வாகனம் ஓட்டிய 377 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தில் உள்ள 910 ரவுடிகளில் 741 பேரை வரவழைத்து அதிகாரிகள் எச்சரித்தனர். இதுபோல் சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் தலைமையில் மாநகரத்தில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.






