என் மலர்
சேலம்
- தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள் ளது.
- அடிக்கடி ஆய்வு செய்து, மருந்து தெளித்து கொசுக்களை அழித்து வருகின்றனர்.
ஏற்காடு:
மழை காலம் தொடங்கி விட்டால் ெகாசுக்கள் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதி களவில் பரவ வாய்ப்புள்ளது.
ஆய்வு
தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள் ளது. இதனால் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக் கள் ஒழிப்பு பணி சுகாதார துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஏற்காடு மலை கிராமங்களில் சுகாதார துறை ஊழியர்கள் தீவிர மாக கண்காணித்து வரு கின்றனர். குறிப்பாக அங்குள்ள குளம், குட்டை, கிணறுகள் போன்ற நீர்நிலைகளிலும், வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் போன்றவைகளிலும் அடிக் கடி ஆய்வு செய்து, மருந்து தெளித்து கொசுக்களை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூச்சியியல் வல்லுநரும் மாவட்ட சுகாதார அலுவலருமான திருமலை வெங்கடேசன் ஏற்காடு பகுதியில் உள்ள கொண்டையனூர், முளுவி, நாகலூர் கிராமங்கள், ஏற்காடு அரசு மருத்துவ மனை மற்றும் பள்ளி , அங்கன்வாடி மையம் ஆகிய பல பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டுள்ள தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் கேன்களில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதார மேற்பார்வையா ளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஸ், சுரேஷ், புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயதுமதிக்க தாக்க நபர் குளித்துக் கொண்டிருந்தார்
- நீரில் மூழ்கியவரின் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் 4 ரோடு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயதுமதிக்க தாக்க நபர் குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரின் வேத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் பரிசல் மூலம் சென்று நீரில் மூழ்கியவரின் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ஜலகண்டாபுரம் அருகே சவூரியூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பது தெரியவந்தது.
- கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம்:
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.
மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.
மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
- சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ராணி வயது (63), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது மகன் இளங்கோவன் (47). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் ரெயில் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது கால் துண்டானது. இதையடுத்து அவருக்கு மரத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் மது போதைக்கும் அடிமையானார். இதனால் அடிக்கடி குடிபோதையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாய் ராணியின் பெயரில் உள்ள 1, 822 சதுர அடி காலி வீட்டு மனையை உறவினர் ஒருவருக்கு விற்று விடலாம் என இளங்கோவன், ராணியிடம் கூறினார். அப்போது ராணி கையெழுத்திட மாட்டேன் என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் தனது செயற்கை காலை கழற்றி, ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் ராணிக்கு தலை உள்பட பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் மண்டையில் பலமான அடி விழுந்ததால் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை கைது செய்தனர். சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது.
- போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயங்கி வருகிறது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் இங்கு தினமும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை நேரத்திலேயே இங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர்.
விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுக்கு விடிய, விடிய காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இறக்கிவைக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் அடைந்து வருவதால் தங்கத்தை பாதுகாப்பது போல் வியாபாரிகள் தக்காளியை பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி பல இடங்களில் தேடிப்பார்த்தும் தக்காளியை காணவில்லை. விசாரணையில் யாரோ 75 கிலோ தக்காளியையும் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் தற்போது சிவகாமி (50) என்ற வியாபாரி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் பூத் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட 2 கிரேடு தக்காளியை வைத்து இருந்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது 50 கிலோ தக்காளியும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, இரவு நேரத்தில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் தொடரும் தக்காளி திருட்டால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
- நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
- பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நித்தியானந்தம் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நகைகளை திருடியதாக மணியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40) வெள்ளி பட்டறை தொழிலாளி.
- இவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வெள்ளிக்கு பயன்படுத்தும் சல்பர் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40) வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வெள்ளிக்கு பயன்படுத்தும் சல்பர் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதமாக இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- முகேஷ். இவரது மனைவி புவனேஸ்வரி (19). இவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.
- கணவன், மனைவி 2 பேரும் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். உடையாப்பட்டி அரசு பள்ளி எதிரே வந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களின் மீது மோதியது.
சேலம்:
சேலம் ஆச்சாங் குட்டப்பட்டி அருகே உள்ள கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி புவனேஸ்வரி (19). இவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இன்று காலை கணவன், மனைவி 2 பேரும் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். உடையாப்பட்டி அரசு பள்ளி எதிரே வந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களின் மீது மோதியது. இதில் முகேஷ் லேசான காயமடைந்தார். புவனேஸ்வரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
- இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட் களுக்கு வீரபாண்டி, தலைவாசல், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மன்னார் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வட மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்ததால் அங்கு இருந்தும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ 200 வரை விற்கப்பட்டது.
சேலம் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 160 ரூபாய் வரை உழவர் சந்தைகளில் அதிகபட்சமாக 135 வரையும் தக்காளி விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி செல்கிறார்கள் சிலர் தக்காளி வாங்குவது இல்லை.
இந்த விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகரில் 20 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது .
ஒரே நாளில் இந்த ரேஷன் கடைகள் மூலம் ஒரு டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி ஒரு டன் தக்காளி விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார். 2-வது நாளாக இன்றும் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.
- பிரபு (40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு வீராணத்தில் நடந்த கொலை வழக்கில் விசாரணை கைதியாகவும் சிறையில் உள்ளார்.
சேலம்:
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு என்ற மாங்காய் பிரபு (40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை வழக்கு
இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு வீராணத்தில் நடந்த கொலை வழக்கில் விசாரணை கைதியாகவும் சிறையில் உள்ளார். இது தவிர மேலும் ஒரு கொலை வழக்கும் அவர் மீது உள்ளது.
இந்த நிலையில் இன்று வீராணம் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டுக்கு போலீசார் அவரை அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மத்திய சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாட்டிலில் பழங்களை ஊற வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் நேற்று என்னை நிர்வாணமாக்கி தாக்கினர். மேலும் அந்த ஊறலை நான் வைத்ததாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.
நான் அதற்கு மறுத்ததால் சிறை சூப்பிரண்டு உட்பட அதிகாரிகள் என்னை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சிறையில் நடக்கும் அனைத்து குற்றச்சம்பவங்களுக்கும் அதிகாரிகள் தான் உடந்தையாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கண்ணீர் விட்டு கதறினார்.
இதனால் பரபரப்பு நிலவியது.
- சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.
- பேரூராட்சில் சார்பில் அள்ளப்படும் குப்பைகளை மாநகராட்சி எல்லையும் பேரூராட்சி நுழைவாயிலும் கொட்டப்பட்டு வந்தது.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பு பேரூராட்சில் சார்பில் அள்ளப்படும் குப்பைகளை மாநகராட்சி எல்லையும் பேரூராட்சி நுழைவாயிலும் கொட்டப்பட்டு வந்தது. தற்போது இந்த குப்பைகள் கொட்டி கொட்டி குப்பைமேடாக மாறிவிட்டது.
அங்குள்ள கழிவுநீர் கன்னங்குறிச்சி ஏரிக்கு சென்றது. தற்போது இந்த பகுதியை சுற்றிலும் வீடுகள் அதிகரித்து விட்டது. இதனால் கழிவு நீர் செல்லமுடியாமல் குடியிருப்புகளை சுற்றி குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் குப்பைமேட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது:-
கன்னங்குறிச்சி செல்லும் பொதுமக்கள் பேரூராட்சி நுழைவுவாயில் குப்பை மேட்டில் இருந்து வரும் துர்நாற்றம் விசுவதால் முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒவ்வாரு நாளும் துர்நாற்றத்தை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி உள்ள குட்டையில் எருமை மாடுகள் படுத்து உருளுவதால் அந்த துர்நாற்றத்திற்கு அதிகளவு கொசு உற்பத்தி அதிமாகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் தூங்கமுடியாமல் தவித்து வருகிறோம். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சேலம் மாநகராட்சி சார்பில் ஏரியை சுற்றுலா தளமாக மாற்றி வருகிறது. கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து அந்த குப்பைமேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), கவுதம் கோயல் (வடக்கு), கூடுதல் கமிஷனர் ரவிசந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மனநல டாக்டர்கள், விவேகானந்தன், தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று மன அழுத்தத்தை போக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.






