என் மலர்
சேலம்
- ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்:
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
வளையல் அலங்காரம்
சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அதிகாலையில் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் 1 லட்சம் வளை யல்களைக் கொண்டு அம்மன் சிலை முழுவதும் வளையல்களால் அலங்கா ரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் பிரகாரம் அனைத்து இடங்க ளிலும் வளையல்களால் அலங்க ரிக்கப்பட்டது. அம்மனை காண அப்பகு தியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
தங்க கவசம்
இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. பெரிய எல்லை பிடாரி கருவறை அம்மனுக்கு முத்துக்களால் ஆன அங்கியை கொண்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்சனைகள் நடை பெற்றது. இதில் அப்பகு தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெத்திமேடு தண்ணீர் பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் பவள கற்கள் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. குறிப்பாக மணியனுர் காளியம்மன் கோவிலில் ஆயிரம் கண் அலங்காரம் செய்திருந்தனர். 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனை வருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- சேலம் மாவட்டத்தில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநி லங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
- இது தவிர மினி லாரிகள், டெம்போக் கள், தனியார் பஸ்கள், கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்:
Salem District News,
ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்
டிரைவர்கள் லைசென்ஸ் எடுப்பது, புதுப்பிப்பது, வாகனங்க ளுக்கு அனுமதி வாங்குவது, வாகனங்களை பதிவு செய்வது, புதிய நம்பர் வாங்குவது, எப்.சி. காட்டுவது உள்பட பல்வேறு பணிகளும் ஆர்.டி.ஓ. அலு வலகங்களில் நடைபெறு கிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, தெற்கு, கிழக்கு, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 6 இடங்களில் ஆர்.டி.ஒ. அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவல கங்களில் மேட்டூர், சேலம் கிழக்கு, தெற்கு, மேற்கு அலுவலகங்க ளில் பணி புரிந்த ஆர்.டி.,ஓ.க்கள் அடுத் தடுத்து கடந்த சில மாதங்க ளில் ஓய்வு பெற்றனர்.
4 பணி இடங்கள் காலி
இதனால் இந்த பணி யிடங்கள் தற்போது காலி யாக உள்ளது. மேலும் ஆத்தூர் ஆர்.டி.ஓ. சேலம் மேற்கு அலுவலக பொறுப் பையும், சங்ககிரி ஆர்.டி.ஓ. மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவல கத்தையும், தர்மபுரி ஆர்.டி.ஓ. சேலம் கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தையும் கூடுதலாக கவனித்து வரு கிறார்கள். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆர்.டி.ஓ.க்கள் நிரந்தரமாக இல்லாததால் ஒவ்வொரு பணிகளும் கால தாமதமா கிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு பணிக்கும் பல முறை அலை யும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவு, அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது.
கோரிக்கை
எனவே வாகன உரிமை யாளர்களின் நலனை கருத் தில் கொண்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 4 ஆர்.டி.ஓ. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஓமலூர் அருேக கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
- குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் 37, இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஷோபனா தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாகரன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் சிவில் துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக ஜெயபிரபாகரன் (வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார். அதே துறையில் இவரது மனைவி ஷோபனா (31) உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் வருடம் திருமணம் முடிந்து மகரன் (4), ரெணத் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
ஜெயபிரபாகரன் தனது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் ஷோபனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.
இதனிடையே நேற்று இரவு கல்லூரி குடியிருப்பில் உள்ள வீட்டில் ஜெயபிரபாகரன் திடீரென மனைவியின் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது வீட்டில் தங்களது மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். உடனடியாக மகனின் உடலை கீழே இறக்கி இதுபற்றி கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாகரன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் வசித்து வரும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
நேற்று முன்தினம் நீர்வரத்து 388 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 154 கன அடியாக சரிந்தது.
இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 131 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை 61.26 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 60.11 அடியாக குறைந்தது. அணையில் 24.76 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
- அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்விலும் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நன்னாளில் காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். மேலும் காவிரி கரையோர மக்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகளையும் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நீராட்டி மீண்டும் மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்வார்கள்.
அந்த வகையில், காவிரி கரையோர மக்கள் இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரிக்கு சாரை சாரையாக வர தொடங்கினர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. பெரும்பாலான பக்தர்கள் மேட்டூர் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.
மேலும் பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி மேள தாளங்கள் முழங்க மேட்டூருக்கு பக்தர்கள் புடை சூழ நடந்தே வந்தனர். அவர்கள் சாமி சிலைகளை காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேளதாளங்களுடன் எடுத்து சென்றனர்.
புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
மேட்டூருக்கு வந்த பக்தர்களில் சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை சமைத்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினர்.
அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டூரில் பூங்கா சாலை, கொளத்தூர் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காட்சி அளித்தது. அணை பூங்காவிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.
மேட்டூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
திருடர்கள், குற்றவாளிகளை கண்காணிக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவவையொட்டி ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
- பாசன பகுதிக்கு ஏற்றவாறு நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர இந்த அணையின் மூலம் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர், பாசனத்துக்கு முக்கியமாக விளங்கி வரும் மேட்டூர் அணைக்கு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொழிந்து நீர்வரத்து அதிகரிக்கும்.
அந்த காலகட்டங்களில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். மேலும் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
அதேநேரம் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பாசன பகுதிக்கு ஏற்றவாறு நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 61.26 அடியாக இருந்தது. அணைக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேலும் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை முதல் 12ஆயிரத்தில் இருந்து 10ஆயிரம் கனஅடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஆடிப்பெருக்கு அன்று மேட்டூர் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் மேட்டூர் 16 கண் பாலம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
- நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் ‘லிப்ட்’ இயக்கப்படுகிறது.
- லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்துார் அரசு ஆஸ்பத்திரி 4 மாடி கொண்ட புது கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் 'லிப்ட்' இயக்கப்ப டுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் 3 நோயாளிகள் ஆஸ்பத்திரியின் லிப்டை பயன்படுத்தி உள்ளனர்.
அப்போது லிப்ட் எந்த தளத்திலும் நிற்காமல் மேலும், கீழும் சென்று வந்தது. இதனால் லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து அறிந்த மருத்துவ பணியாளர்கள், ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிப்ட்டில் சிக்கியிருந்த 3 பேரையும் அரை மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் ஜெய லட்சுமி கூறுகையில், லிப்ட்டிற்குள் சென்ற நோயாளிகள் லாக் பட்டனை தவறுதலாக அழுத்தியுள்ளனர். இதனால் மேலும், கீழும் சென்றது. அவர்கள் உடனே மீட்கப்பட்டனர். லிப்ட் பழுது எதுவும் இல்லை என்றார்.
- மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார்.
- கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் தாதாகப்பட்டி கார்ப்பரேசன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா வயது 54, இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார். இதனால் அங்கு காதர்பாஷா அடிக்கடி சென்று வந்தார். அப்போது கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியான பள்ளி மாணவி ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினார். தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளான 2 சிறுமிகளுக்கும் காதர்பாஷா ப ாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து காதர்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
- மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை
- தீரன் சின்னமலை நினைவு மண்டபத்திலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை
சங்ககிரி:
சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சூழ்ச்சி காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18 அன்று, சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
மலர்வளையம்
அவர் தூக்கிலிடப்பட்ட 218-வது நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும், அதேபோல் ஈரோடு -– பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்திலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சின்ராஜ் எம்.பி., சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எஸ்.பி., சிவக்குமார், சங்ககிரி ஆர்.டி.ஓ. லோகநாயகி, தாசில்தார் அறிவுடைநம்பி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சுந்தரம், சம்பத்குமார், சங்ககிரி ஒன்றிய செயலாளர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மணிமொழி முருகன், நகர செயலாளர் முருகன், செயல் அலுவலர் சுலைமான்சேட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டியும், மக்கள் நல்வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டி பூஜை
- வரிசையில் வாழப்பாடி புதுப்பாளை யம் கிராமத்தில் ஆடி பவுர்ண மியை யொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடு
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இன்றளவிலும் முன்னோர் கள் வழியில் மரபு மாறாமல் பல வினோத வழிபாட்டு முறை களை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.
வழிபாடு
குறிப்பாக வறட்சி நிலவும் தருணத்தில் காவல் தெய்வங் களுக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை வழி பாடு நடத்து தல், அம்மனுக்கு கூழ் ஊற்று தல், வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்துதல், கிராமத்தின் எல்லையில் எல்லைச் சாமிக்கு பன்றி பலி கொடுத் தல் போன்ற வினோத வழிபாடுகளை தொடர்ந்து வருகின்றனர்.அந்த வரிசையில் வாழப்பாடி புதுப்பாளை யம் கிராமத்தில் ஆடி பவுர்ண மியை யொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
அப்போது வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டியும், மக்கள் நல்வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டியும், வயதில் மூத்த கைம்பெண் களை வர வழைத்து சுமங்கலி பெண்கள் பாத பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்ச்சி அப்பகுதி யில் கூடியிருந்த பக்தர் களுடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறப்பு பூஜை வழி பாட்டினால் இப்பகுதியில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவ தாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
- தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள் ளது.
- அடிக்கடி ஆய்வு செய்து, மருந்து தெளித்து கொசுக்களை அழித்து வருகின்றனர்.
ஏற்காடு:
மழை காலம் தொடங்கி விட்டால் ெகாசுக்கள் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதி களவில் பரவ வாய்ப்புள்ளது.
ஆய்வு
தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள் ளது. இதனால் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக் கள் ஒழிப்பு பணி சுகாதார துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஏற்காடு மலை கிராமங்களில் சுகாதார துறை ஊழியர்கள் தீவிர மாக கண்காணித்து வரு கின்றனர். குறிப்பாக அங்குள்ள குளம், குட்டை, கிணறுகள் போன்ற நீர்நிலைகளிலும், வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் போன்றவைகளிலும் அடிக் கடி ஆய்வு செய்து, மருந்து தெளித்து கொசுக்களை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூச்சியியல் வல்லுநரும் மாவட்ட சுகாதார அலுவலருமான திருமலை வெங்கடேசன் ஏற்காடு பகுதியில் உள்ள கொண்டையனூர், முளுவி, நாகலூர் கிராமங்கள், ஏற்காடு அரசு மருத்துவ மனை மற்றும் பள்ளி , அங்கன்வாடி மையம் ஆகிய பல பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டுள்ள தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் கேன்களில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதார மேற்பார்வையா ளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஸ், சுரேஷ், புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.






