என் மலர்
சேலம்
- விஷ்வா வயது 24, இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
- அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல் பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம், ஆக.9-
கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24), இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
ஜவுளிக்கடை ஊழியர்
அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல் பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதால் 2 பேரும் திருமணமான 7 மாதங்களில் பிரிந்தனர்.
பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பழக்கடையில் விஸ்வா வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியில் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 25 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து விஸ்வா அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்தினார். பின்னர் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். தொடர்ந்து அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்ட விஸ்வா அந்த பெண் மற்றும் குழந்தைகளுடன் அம்மாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.
இந்த நிலையில் விஸ்வா வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வந்து சென்றார். இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே விஷ்வாவின் குடும்பத்தினரும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் நெருங்கி பழகினர். மேலும் விஷ்வா அந்த பெண்ணுக்கு பண உதவிகளும் செய்து வந்தார்.
சிறுமியிடம் அத்து மீறல்
இந்த நிலையில் 40 வயது பெண்ணிடம் ஒரே வீட்டில் வசித்தால் வாடகை மிச்சம் ஆகும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நேரத்தில் விஸ்வாவின் பார்வை 1 6 வயது சிறுமியின் பக்கம் திரும்பியது. இதையடுத்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி தனது வலையில் சிக்க வைத்தார்.
தொடர்ந்து அந்த சிறுமியையும் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தாய்க்கும், விஸ்வாவுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் அவர் வேறு வீட்டிற்கு சென்று குடியேறி விட்டார்.
சிறையில் அடைப்பு
இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விஷ்வாைவ பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் இது போல வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நங்கவள்ளி மற்றும் தும்பல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (10-ந்தேதி) நடைபெற உள்ளது.
- எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (10-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல் தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் மற்றும் இந்த துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
- தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
- மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது.
மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மேட்டூர் தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீயணைப்பு நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
- ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை தனபாக்கியம் ஒடித்துக் கொண்டிருந்தார்.
- தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலகூர் கிராமம். இங்கு ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் கிராம பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை கொலகூர் மிதுவகாடு பகுதியில் வசிக்கும் ஜெயமணி என்பவரது மனைவி தனபாக்கியம் (48) வீட்டிற்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்.
அந்த மரத்திற்கு அருகே காட்டெருமை படுத்திருந்தது. இதை கவனிக்காமல் தனபாக்கியம் தொடர்ந்து மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டெருமை அவரை முட்டி தாக்கியது.
இந்த நிலையில் தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது. இதனிடையே தனபாக்கியத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
பலத்த காயமடைந்து இருந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
- கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 5,065 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,654 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் குறித்த காலத்தில் தென்மேற்கு பருவமழை இல்லாததால் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்காததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 56.39 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 22.07 டி.எம்.சி.யாக உள்ளது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலைக்கான முழு காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (36) கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ரஞ்சித் (22) என்ற மகனும், நந்தினி (20), அஞ்சலி (17) என மகள்களும் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம் போல் அஞ்சலியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் விட்டில் இருந்தனர்.
மாலையில் அஞ்சலி வீட்டிற்கு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேக மடைந்த அஞ்சலி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது பெற்றோர் ராஜா-சரஸ்வதி ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அஞ்சலியின் சத்தத்தை கேட்டு அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கதவை உடைத்து பிணமாக கிடந்த ராஜா, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது-
ராஜாவுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவரும் சரியாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜா, சரஸ்வதிக்கு சாணி பவுடர் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் கேபிள் வயரால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது எடை தாங்காமல் கேபிள் வயர் அறுந்து விழுந்துள்ளது. இதையடுத்து ராஜா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
மேலும் தற்கொலைக்கான முழு காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர்களது தற்கொலைக் கான முழு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- விஷ்வா (25). இவர் கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
- இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்வா (25). இவர் கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை குழந்தையுடன் அழைத்து வந்து அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் அருகே வீடு பார்த்து குடியேறி வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் 40 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணின் 16 வயது மகளுடன் பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விஷ்வாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது.
- இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சேலம்:
சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு இருந்த 6 கிலோ காப்பர் பைப்பை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து சரவணன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த முகமது அசின் ஷெரீப், விஸ்வநாதன் 2 பேரும் காப்பர் பைப் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
- இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் மாணவி வீட்டின் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக வந்த மாணவியின் உறவினர்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உறவினர்களிடம் பேசி வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 26-வது கோட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 8 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட குழியை சரிப்படுத்தாத நிலையில் புதிய சாலை அமைத்து தருவதாக கூறி ஏற்கனவே இருந்த சாலையில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகராட்சி 26-வது கோட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மாநகரின் மையப்பகுதி மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 8 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட குழியை சரிப்படுத்தாத நிலையில் புதிய சாலை அமைத்து தருவதாக கூறி ஏற்கனவே இருந்த சாலையில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாத தால் குழி பறிக்கப்பட்ட நிலையிலேயே இன்று வரை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கும், வெளியில் இருந்து வீட்டிற்குள் செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் சாலையின் அவலத்தை குறிப்பிடும் விதமாக நோட்டீஸ் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
- சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
- 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக நலத்துறை ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, சமூக நலத்துறையின் கீழ், பதிவுறு எழுத்தர் பதவியில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பக் கடிதத்துடன் உரிய படிவத்தையும் பூர்த்தி செய்து சமூக நலத்துறை ஆணையரகத்துக்கு வருகிற 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






