மாணவியுடன் பழகியதால் வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி

மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
மாணவியுடன் பழகியதால் வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் மாணவி வீட்டின் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக வந்த மாணவியின் உறவினர்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உறவினர்களிடம் பேசி வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com