என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து 4,654 கனஅடி வருகிறது: மேட்டூர் அணை நீர்மட்டம் 56.39 அடியாக குறைந்தது
- காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 5,065 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,654 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் குறித்த காலத்தில் தென்மேற்கு பருவமழை இல்லாததால் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்காததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 56.39 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 22.07 டி.எம்.சி.யாக உள்ளது.






