என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் மேலும் பல பெண்களை மயக்கினாரா? போலீஸ் விசாரணை
    X

    விஸ்வா

    சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் மேலும் பல பெண்களை மயக்கினாரா? போலீஸ் விசாரணை

    • விஷ்வா வயது 24, இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
    • அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல் பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம், ஆக.9-

    கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24), இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.

    ஜவுளிக்கடை ஊழியர்

    அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல் பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதால் 2 பேரும் திருமணமான 7 மாதங்களில் பிரிந்தனர்.

    பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பழக்கடையில் விஸ்வா வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியில் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 25 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து விஸ்வா அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்தினார். பின்னர் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். தொடர்ந்து அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்ட விஸ்வா அந்த பெண் மற்றும் குழந்தைகளுடன் அம்மாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.

    இந்த நிலையில் விஸ்வா வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வந்து சென்றார். இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே விஷ்வாவின் குடும்பத்தினரும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் நெருங்கி பழகினர். மேலும் விஷ்வா அந்த பெண்ணுக்கு பண உதவிகளும் செய்து வந்தார்.

    சிறுமியிடம் அத்து மீறல்

    இந்த நிலையில் 40 வயது பெண்ணிடம் ஒரே வீட்டில் வசித்தால் வாடகை மிச்சம் ஆகும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நேரத்தில் விஸ்வாவின் பார்வை 1 6 வயது சிறுமியின் பக்கம் திரும்பியது. இதையடுத்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி தனது வலையில் சிக்க வைத்தார்.

    தொடர்ந்து அந்த சிறுமியையும் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தாய்க்கும், விஸ்வாவுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் அவர் வேறு வீட்டிற்கு சென்று குடியேறி விட்டார்.

    சிறையில் அடைப்பு

    இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விஷ்வாைவ பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் இது போல வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×