என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்வி-மதிப்பெண் சான்றிதழ்களைலேமினேஷன் செய்ய வேண்டாம்
- பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10-ம் வகுப்பு, பிளஸ்- மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
- லேமினேஷன் செய்யாமல் இருந்தால் மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பணிகளில் எதிர்காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திைர வைக்கவும் முடியும்.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மாறும்போது மாற்று சான்றிதழ் வழங்கப்படும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10-ம் வகுப்பு, பிளஸ்- மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழும் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்களை மாணவர்கள் பலர் லேமினேஷன் செய்வதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆசிரியர்கள் வழியாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.
அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களை சிலர் லேமினேஷன் செய்வதாக தெரிகிறது. சான்றிதழ்களில் தண்ணீர் அல்லது வேறு தூசிகளால் கிழிந்து விடாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர்.
ஆனால், சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல் இருந்தால் மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பணிகளில் எதிர்காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திைர வைக்கவும் முடியும். அந்த நேரத்தில் லேமினேஷனை பிரிக்க நேர்ந்தால் சான்றிதழ் சிதைந்து விடும். எனவே, சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல், அதன் அசல் தன்மையுடன் பாதுகாப்பது சிறந்தது.
இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.






