என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஞ்சு பேல் திருடிய செல்வராஜ், பிரபு.
சங்ககிரி அருகே லாரிக்கு தீ வைத்து ரூ.30 லட்சம் பஞ்சு பேலை திருடி மோசடி
- மெய்யரசன் (27). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
- இதையடுத்து பிரபு தன்னுடைய அண்ணன் செல்வராஜையும், அதே ஊரைச் சேர்ந்த தர்மன் என்பவரையும் அனுப்பி வைத்துள்ளார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி தாலுகா ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மெய்யரசன் (27). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், மேட்டூரில் இருந்து பீஜாப்பூருக்கு யூரியா லோடு ஏற்றிச் செல்ல டிரைவர் இல்லாததால் தனக்கு தெரிந்த ஜாலிகொட்டாயைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் லாரிக்கு டிரைவர் வேண்டும் என கூறியுள்ளார்.
பஞ்சு பேல் லோடு
இதையடுத்து பிரபு தன்னுடைய அண்ணன் செல்வராஜையும், அதே ஊரைச் சேர்ந்த தர்மன் என்பவரையும் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, செல்வராஜ் மற்றும் தர்மன் ஆகிய இருவரும் மேட்டூரில் இருந்து யூரியாவை லாரியில் ஏற்றுக் கொண்டு பீஜாப்பூரில் இறக்கிவிட்டு, கடந்த 2-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பீடுவில் இருந்து 150 பஞ்சு பேல் லோடை ஏற்றிக் கொண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இறக்க சென்றுள்ளனர். 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சங்ககிரி அருகே ஈரோடு செல்லும் வழியில் தாமஸ் காலனி என்ற இடத்தில் லாரியில் திடீரென தீப்பிடித்து அதில் இருந்த பஞ்சு பேல்கள் முழுவதும் எரிந்து விட்டதாக சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பிரபு, லாரி உரிமையாளர் மெய்யரசன் புகார் அளித்தனர்.
லாரி டிரைவரிடம் விசாரணை
இது குறித்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்தார். மேலும் சந்தேகத்தின் பேரில் லாரி டிரைவரான பிரபுவிடம் தீவிர நடத்தினார். இதில் லாரிக்கு தீ வைத்ததை பிரபு ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு அதிகம் கடன் ஏற்பட்டதால் சொந்த லாரியை விற்றுவிட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடனை முழுவதும் அடைக்க முடியாமல் சிரமமப்பட்டு வந்தேன். எனது லாரியில் கிளினீராக வேலை பார்த்து வந்த சூர்யாவிடம் எனது அண்ணன் மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சு பேல் லோடு ஏற்றி வருகிறார். அதில் ஒரு பகுதியை எடுத்து கொடுக்கிறேன். அதை விற்று பணம் கொடுத்தால் எனது கடனை ஓரளவுக்கு அடைத்து விடலாம். உனக்கும் ஒரு தொகை கொடுக்கிறேன் என கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.
அதே போல், திட்டமிட்டபடி சூர்யாவுடன் சேர்ந்து ராக்கிப்பட்டியில் மறைவான இடத்தில் லாரியை நிறுத்தி, அதில் இருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 92 பஞ்சு பேல்களை இறக்கி வைத்துவிட்டு நான் அங்கேயே இருந்து கொண்டேன். சூர்யா, செல்வராஜ் மட்டும் யாருக்கும் சந்தேகம் வராதபடி லாரியை சங்ககிரியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமான தாமஸ் காலனி அருகில் நிறுத்தி தீ வைத்து கொளுத்தி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். அதனை யடுத்து, சங்ககிரி டி.எஸ்.பி ராஜா மேற்பார்வை யில், இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்ஐ ஸ்ரீராமன் ஆகி யோர் பிரபு (36), செல்வ ராஜ்(38) ஆகிய இருவரை யும் கைது செய்த னர். மேலும் ராக்கிப்பட்டி சென்று அங்கு மறைத்து வைத்தி ருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 92 பஞ்சு பேல்களை பறிமுதல் செய்தனர். தலை மறைவான சூர்யா மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.






