search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refresher training"

    • நீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி வழங்கினார்.
    • குடிநீரை முறையாக கையாள்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு, குடிநீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி வழங்கினார்.

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சுகாதார நலக்கல்வியாளர் ஆர். ராஜ்குமார், மாவட்ட புகையிலை தடுப்பு சமூக சேவகர் வி.பிரவீன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம்.ராஜேந்திரன், வட்டார சுகாதார புள்ளியியலாளர் டி.பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.கதிரவன், என்.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வின் போது போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்து விடும் பொழுதும் சரியான அளவில் குளோரின் சேர்ப்பது மற்றும் 15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்றவை உறுதி செய்வதால் நீரினால் பரவும் நோய்களான காலரா, சீதபேதி, வாந்தி, வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கட்டுபடுத்த முடியும் மற்றும் குடிநீரை முறையாக கையாள்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம் என்று வட்டார மருத்துவ அலுவலர் டி. ராஜலட்சுமி எடுத்து கூறினார்.

    • போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), கவுதம் கோயல் (வடக்கு), கூடுதல் கமிஷனர் ரவிசந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மனநல டாக்டர்கள், விவேகானந்தன், தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று மன அழுத்தத்தை போக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

    • மதுரை அருகே பேரூராட்சி தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • பேரூராட்சியில் அமைந்துள்ள தெருக்கள், வீடு, கடைவீதி ஆகியவை பற்றிய வரைபடம், அட்டவணை குறித்து கணிணி திரை மூலம் விளக்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அலங்காநல்லூர். பாலமேடு பரவை, எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து 2 நாள் புத்தாக்க பயிற்சி ஆண்டியமேடு அடர்வன காடு பகுதியில் நடந்தது. பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார்.

    பேரூராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரைமரி குப்பை வாகனங்கள் அந்தந்த வார்டில் உள்ள 200 வீடுகளுக்கு ஒரு தள்ளு வண்டி வீதம் கணக்கிட்டு குப்பைகளை சேகரிப்பது, பேரூராட்சியில் அமைந்துள்ள தெருக்கள், வீடு, கடைவீதி ஆகியவை பற்றிய வரைபடம், அட்டவணை குறித்து கணிணி திரை மூலம் விளக்கப்பட்டது.

    மக்கும் குப்பைகள் விண்ட்ரோ முறையில் உரமாக்குதல் குறித்து செயல் முறை விளக்கமும், வள மீட்பு பூங்காவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், குருசாமி, ஜெயராமன், கலாமீனா, சுமதி, ரேணுகாஈஸ்வரி, துணை தலைவர் லதாகண்ணன், செயல் அலுவலர்கள் சுதர்சன், பசீர் அகமது, ஜெயதாரா, ஜீலான் பானு, பூங்கொடிமுருகு, தேவி, உதவி பொறியாளர் கருப்பையா, பேரூராட்சி பணியாளர் சங்க மாநில நிர்வாகி பிச்சைமுத்து, கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், கொத்தாளம் செந்தில், குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுந்தராஜன், வினோத்குமார், எலட்ரீசியன் பாலமுருகன், பூவலிங்கம், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தினமும் செய்தித்தாள்களை வாசிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

    கோவை

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 13-ந் தேதி எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் 1,212 அரசு பள்ளிகளும், 177 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 654 தனியார் பள்ளிகளும் என 2,043 பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பியதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்து பேசி, கட்டித்தழுவி மகிழ்ந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் சார்பிலும் உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டது. முதல் நாளில் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது.




     

    பள்ளிகள் திறந்ததும் ஒருவாரம் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறி வுரை கூறியிருந்தது.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலுமே புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கொரோ னாவை எதிர்கொள்வது, பாதுகாப்பாக இருப்பது போன்றவை குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

    இதுகுறித்து கோவை ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தீபா கூறியதாவது:-

    எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் உளவியல் ரீதியான மற்றும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

    வழக்கமான பாட வேளைகள் படியே, ஒவ்வொரு பாட வேளையாக பிரித்து, ஒவ்வொரு மாதிரியான புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

    இந்த புத்துணர்வு பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு படம் வரைந்து வண்ணம் தீட்டுதல், நன்னெறி மற்றும் நீதிக்கதைகள் கூறுதல், தனி நடிப்பு, விளையாட்டு, பாடல் பாடுவது என சொல்லி கொடுக்கப்படுகிறது.

    ஆசிரியர்களாகிய நாங்களும் எங்களுக்கு தெரிந்த கதைகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறுகிறோம். அதேபோன்று மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த அல்லது தங்கள் முன்னோர்கள் கூறிய நன்னெறி கதைகளை தாங்களாக முன்வந்து சொல்கின்றனர்.

    இதுதவிர மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நல்ெலாழுக்கம் குறித்தும் எடுத்து கூறி வருகிறோம்.



     



    மாணவர்களும் இந்த வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்று கதைகள் கூறுவது, படங்கள் வரை வது, பாடல்கள் பாடுவது என தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி யையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது.

    இதுதவிர மதிய வேளை களில் மாணவர்களுக்கு செய்தித் தாள், புத்தகங்கள் வாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த புத்துணர்வு பயிற்சியானது ஒரு வார காலத்திற்கு நடைபெறும். அதன்பிறகு வழக்கமான பாடங்கள் நடத்தப்படும்.

    ×