search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal leaders"

    • மதுரை அருகே பேரூராட்சி தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • பேரூராட்சியில் அமைந்துள்ள தெருக்கள், வீடு, கடைவீதி ஆகியவை பற்றிய வரைபடம், அட்டவணை குறித்து கணிணி திரை மூலம் விளக்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அலங்காநல்லூர். பாலமேடு பரவை, எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து 2 நாள் புத்தாக்க பயிற்சி ஆண்டியமேடு அடர்வன காடு பகுதியில் நடந்தது. பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார்.

    பேரூராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரைமரி குப்பை வாகனங்கள் அந்தந்த வார்டில் உள்ள 200 வீடுகளுக்கு ஒரு தள்ளு வண்டி வீதம் கணக்கிட்டு குப்பைகளை சேகரிப்பது, பேரூராட்சியில் அமைந்துள்ள தெருக்கள், வீடு, கடைவீதி ஆகியவை பற்றிய வரைபடம், அட்டவணை குறித்து கணிணி திரை மூலம் விளக்கப்பட்டது.

    மக்கும் குப்பைகள் விண்ட்ரோ முறையில் உரமாக்குதல் குறித்து செயல் முறை விளக்கமும், வள மீட்பு பூங்காவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், குருசாமி, ஜெயராமன், கலாமீனா, சுமதி, ரேணுகாஈஸ்வரி, துணை தலைவர் லதாகண்ணன், செயல் அலுவலர்கள் சுதர்சன், பசீர் அகமது, ஜெயதாரா, ஜீலான் பானு, பூங்கொடிமுருகு, தேவி, உதவி பொறியாளர் கருப்பையா, பேரூராட்சி பணியாளர் சங்க மாநில நிர்வாகி பிச்சைமுத்து, கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், கொத்தாளம் செந்தில், குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுந்தராஜன், வினோத்குமார், எலட்ரீசியன் பாலமுருகன், பூவலிங்கம், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×