என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னங்குறிச்சி குப்பைமேடு / குடியிருப்பு பகுதி அருகில் தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டை.
சேலம் கன்னங்குறிச்சி குப்பைமேட்டை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தல்
- சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.
- பேரூராட்சில் சார்பில் அள்ளப்படும் குப்பைகளை மாநகராட்சி எல்லையும் பேரூராட்சி நுழைவாயிலும் கொட்டப்பட்டு வந்தது.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பு பேரூராட்சில் சார்பில் அள்ளப்படும் குப்பைகளை மாநகராட்சி எல்லையும் பேரூராட்சி நுழைவாயிலும் கொட்டப்பட்டு வந்தது. தற்போது இந்த குப்பைகள் கொட்டி கொட்டி குப்பைமேடாக மாறிவிட்டது.
அங்குள்ள கழிவுநீர் கன்னங்குறிச்சி ஏரிக்கு சென்றது. தற்போது இந்த பகுதியை சுற்றிலும் வீடுகள் அதிகரித்து விட்டது. இதனால் கழிவு நீர் செல்லமுடியாமல் குடியிருப்புகளை சுற்றி குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் குப்பைமேட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது:-
கன்னங்குறிச்சி செல்லும் பொதுமக்கள் பேரூராட்சி நுழைவுவாயில் குப்பை மேட்டில் இருந்து வரும் துர்நாற்றம் விசுவதால் முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒவ்வாரு நாளும் துர்நாற்றத்தை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி உள்ள குட்டையில் எருமை மாடுகள் படுத்து உருளுவதால் அந்த துர்நாற்றத்திற்கு அதிகளவு கொசு உற்பத்தி அதிமாகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் தூங்கமுடியாமல் தவித்து வருகிறோம். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சேலம் மாநகராட்சி சார்பில் ஏரியை சுற்றுலா தளமாக மாற்றி வருகிறது. கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து அந்த குப்பைமேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






