என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: டெங்கு ஒழிப்பு பணி தீவிரம் Intensification of dengue eradication work"

    • தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள் ளது.
    • அடிக்கடி ஆய்வு செய்து, மருந்து தெளித்து கொசுக்களை அழித்து வருகின்றனர்.

    ஏற்காடு:

    மழை காலம் தொடங்கி விட்டால் ெகாசுக்கள் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதி களவில் பரவ வாய்ப்புள்ளது.

    ஆய்வு

    தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள் ளது. இதனால் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக் கள் ஒழிப்பு பணி சுகாதார துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஏற்காடு மலை கிராமங்களில் சுகாதார துறை ஊழியர்கள் தீவிர மாக கண்காணித்து வரு கின்றனர். குறிப்பாக அங்குள்ள குளம், குட்டை, கிணறுகள் போன்ற நீர்நிலைகளிலும், வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் போன்றவைகளிலும் அடிக் கடி ஆய்வு செய்து, மருந்து தெளித்து கொசுக்களை அழித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூச்சியியல் வல்லுநரும் மாவட்ட சுகாதார அலுவலருமான திருமலை வெங்கடேசன் ஏற்காடு பகுதியில் உள்ள கொண்டையனூர், முளுவி, நாகலூர் கிராமங்கள், ஏற்காடு அரசு மருத்துவ மனை மற்றும் பள்ளி , அங்கன்வாடி மையம் ஆகிய பல பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டுள்ள தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் கேன்களில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சுகாதார மேற்பார்வையா ளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஸ், சுரேஷ், புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×