என் மலர்
சேலம்
- தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
- வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
கருப்பூர்:
சேலம் கருப்பூர் அடுத்த உள்ள ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஓசூருக்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
மற்றொரு சம்பவம்
அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுபாஷ் (33). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தி ருந்தார். மனைவியை பார்த்து விட்டு சுபாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
- தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க மகாசபை கூட்டம் நடந்தது. இதில் சங்க உறுப்பினர்கள் குமாரசாமி தலைமையில் கைத்தறி துறை உயரதிகாரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தனியாக தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு ரூ.15,000 வீதம் புற நோயாளி, உள் நோயாளி மருத்துவ சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கடந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு தொகை ஆண்டுக்கு ரூ.37,500 என்ற விகிதத்தில் மருத்துவ சிகிச்சையை கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் பெற்று வந்தனர்.
பிறகு இந்த திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டதால் நெசவாளர் குடும்பத்தினர் நோய்வாய் படும் நேரத்தில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் எம்ஆர்ஐ, ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகளை பெற்று ஆரோக்கியமான வாழ்வுக்கு வழியற்ற நிலையில் உள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெற கடந்த காலத்தை போல தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். மனு கொடுத்தபோது சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணன், பழனிசாமி, மாணிக்கம், ராமசாமி, செங்கோடன், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
- நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.
சேலம்:
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 22-வது கோட்டம் சிவதாபுரத்தில் பெரு மழை காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட ஊருக்குள் தேங்காமல் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பிரச்சனை குறித்து பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. எடுத்துக் கூறினார்.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆய்வு
இந்த நிலையில் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து உடனடியாக நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணியினை தொடங்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுடன் சேர்ந்து நானும் சாலை மறியல் ஈடுபடுவேன் கூறினார். அதன் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் பணியை தொடங்கினார்கள்.
அப்போது அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சமயவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அருண், கோட்டச் செயலாளர் குமார், கோட்ட தலைவர் சுரேஷ், பகுதி அமைப்புச் செயலாளர் கோவிந்தன், மாணவரணி சஞ்சய், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.
- கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டா மணிகண்டன் (வயது 30), பிரபல ரவுடி. திருமணமாகாத இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (32). இவர் மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.
அதற்கு அவர் கார் இப்போது தான் வாங்கியிருக்கிறேன், நானே ஓட்டி கொண்டு வருகிறேன் என்று கூறினார். இதனால் வேறு ஒரு காரில் மேட்டூர் சென்ற மகாவிஷ்ணு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது ரவுடி கிட்டா மணிகண்டன் என்னிடம் காரை கேட்டு விட்டு எதுவுமே சொல்லாமல் போய் விட்டாயே வண்டிக்கு டீசலை போட்டு கொண்டு காத்திருக்கிறேன் என கூறினார்.
முன்னதாக மகாவிஷ்ணுவின் அக்காவிடமும் இவ்வாறு கேட்டு அவர் தகராறு செய்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு அங்கிருந்த இரும்பு ராடால் ரவுடி கிட்டா மணிகண்டன் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்ற மகாவிஷ்ணுவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி கிட்டா மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.
- பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
சேலம்:
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் ராவணன்.இவரது மகன் சுந்தரேஸ்வரன் (வயது 25). இவர்கள் இருவரும் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தரேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் அரிசிபாளையம் ரத்தினசாமி புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (65). இவர் சத்திரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சுப்பிரமணியன் காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
- சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகில் உள்ள குண்டுராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (வயது 75).
இவர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
வாகனம் மோதியது
இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சங்கு ஊதுவதற்காக பாப்பம்பாடி அருகில் உள்ள கொண்டக்காரனூர் பகுதியில் வந்து தங்கியுள்ளார். சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வழக்கு
இது குறித்து குழந்தை கவுண்டரின் மகள் மாதம்மாள் (45 )என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.
- இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்கு, வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.
சாலையோரம்
பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலையோரத்தில் ஆடுகளை வெட்டி, திறந்த வெளியில் கடைவிரித்து இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே வாழப்பாடி பேரூராட்சியில் திறந்த வெளியில் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்றவும், சுகாதாரமான முறையில் இறைச்சி கடைகள் செயல்படவும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
- சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர். தோப்பூர் தம்பி டாக்டர் தெருவை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 60). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
அதே பகுதியில் இவருக்கு சொந்தமான வீட்டில் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (42) என்பவர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து கொண்டு பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வீட்டு வாடகை பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் தனசேகர், பாலுவிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பாலு தனது வீட்டை காலி செய்து கொண்டிருந்தார்.
அப்போது தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலு மரக்கட்டையால் தாக்கியதில் தனசேகர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தனசேகரின் மனைவி சாந்தி அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த தனசேகர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபற்றி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.
- குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
சேலம்:
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும் கர்நாடக அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 15 ஆயிரத்து 260 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 433 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 41.1 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.
- மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.
சேலம்:
சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று மணிகண்டன் காரை வாடகைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மணிகண்டன் காருக்கு டீசல்போட்டு தயாராக வைத்துள்ளார். ஆனால் மகாவிஷ்ணு , மணிகண்டன் காரை எடுக்காமல் வேறு நபரிடம் வாடகை காரை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மகாவிஷ்ணுவின் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார். இது குறித்து மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தனது ஆம்னி வேனில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் தனது ஆம்னி வேனில் மளிகை பொருட்களுடன் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து ஏற்காடு போலீசார் நேற்று மஞ்சகுட்டை கிராமத்தில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது மளிகை சரக்கு கொண்டு வந்த கார்த்திக்கின் ஆம்னி வேனை மஞ்சக்குட்டை கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய ஏற்காடு போலீசார் போதை பொருட்களை கொண்டு வர பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
- ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.
இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.






