search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்தவெளியில் செயல்படும்  இறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு
    X

    வாழப்பாடி சந்தைப்பேட்டை அருகே தம்மம்பட்டி சாலையில் திறந்தவெளியில் இயங்கும் இறைச்சி கடைகள்.

    திறந்தவெளியில் செயல்படும் இறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு

    • வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.
    • இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்கு, வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.

    சாலையோரம்

    பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலையோரத்தில் ஆடுகளை வெட்டி, திறந்த வெளியில் கடைவிரித்து இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே வாழப்பாடி பேரூராட்சியில் திறந்த வெளியில் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்றவும், சுகாதாரமான முறையில் இறைச்சி கடைகள் செயல்படவும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×