என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கருத்தரங்கு நடந்தது.
    • நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் விடுதியில் பா.ஜ.க. சார்பில் தேச பிரிவினை நாள் கருத்தரங்கு மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட பார்வை யாளர் முரளி தரன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் பவர் நாகேந்தி ரன், மணிமாறன், அஜ்மல் கான், கவுன்சிலர் முருகன், மாவட்ட துணைத் தலை வர்கள் சங்கீதா, குமார், லண்டன் கேசவன், கலையரசி, நகர் தலைவர், ஒன்றிய தலைவர் சண்முக நாதன், சிவசங்கர், ராஜ்குமார், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அகண்ட பாரதத்தின் தேச ஒற்றுமை குறித்து விளக்கி பேசினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன் செய்திருந்தார். நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • 30 ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கேட்டு மீனவர்கள் போராடி வருகின்றனர்.
    • அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நகர் லாஞ்சியடி பகுதியானது விசைப்படகு மீனவர்கள் வசிக்கும் கடலோர கிராம மாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்ற னர்.

    இங்கிருந்து ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய், மீன் போன்ற கடல் உணவுப் பொருட்களை கேரளா போன்ற வெளி மாநிலங்க ளுக்கு மற்றும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இங்கு உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு மீன் துறை மூலமாக ஆழ்கடல் சென்று மீன் பிடிக்கும் டோக்கன் எனப்படும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. வாரத்தில் சனி, திங்கள், புதன் கிழமைகளில் கட லுக்கு சென்று மீன் பிடித்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் கிழமைகளில் கரை திரும்புவர். அவ்வப் போது புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடலுக்கு செல்ல முடிவதில்லை.

    மேலும் வருடத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடி தடைக் காலத்தில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் 30 ஆண்டுகளாக சாலை, குடிநீர் போன்ற எந்தவித அடிப்படை வசதியில்லா மலும், வீட்டு மனை பட்டா கூட இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வாழ்வாதாரம் கேட்டு பல ஆண்டுகள் போராடி எந்த பயனும் இல்லாததால் தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க திட்ட மிட்டுள்ளனர். அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளனர்.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர் விபூதி, அரிசி மாவு, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடிகளால் நந்திக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அபிஷேக பால் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • அரியனேந்தல் ஊராட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது.
    • இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    2021-2022-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை யில், சுகாதாரத்தில் சிறப் பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு முன் மாதிரி கிராம விருது, பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன் மாதிரி கிராம விருது, கேடயம், தலா ரூ.15 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் படி, 2022 - 23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடு களுக்கான முன் மாதிரி கிராம விருது ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட அரிய னேந்தல் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கு.மணி முத்துவிடம் மாநில அளவி லான கிராம விருது, பரிசுத் தொகையாக ஊராட்சிக்கு ஊக்க நிதியாக ரூ. 15 லட்சம் மற்றும் கேடயத்தினை வழங்கினார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 19, 20-ந்தேதிகளில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
    • வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும், நியாய விலைக் கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக 326 நியாயவிலைக் கடைகளில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது.

    2-ம் கட்டமாக 449 நியாயவிலைக் கடைகளில் கடந்த 5-ந்தேதி முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாமில் குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தவறியவர்கள் கடைசி 2 நாட்களில் வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்க ளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் 15, 16-ந்தேதிகளில் நடைபெறும் விடுபட்ட வர்களுக்கான விண்ணப்பப் பதிவை வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடை பெறும். சிறப்பு முகாம்களில் சேர்த்து நடத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், 2 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் உள்ள 775 மையங்களிலும் நடை பெற்றுள்ள முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அவரவர் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட மையங்களில் 19,20-ந்தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். இந்த முகாம்களில் 21 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள், தகுதிவாய்ந்த இதர மகளிரில் ஒருவர் விண்ணப் பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண் டோ, திருவாடா னை தொகுதி எம்.எல்.ஏ. ராம.கருமாணிக்கம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்லதுரை அப்துல்லா, மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் மாவீரன் வேலுச்சா மி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மூத்த நிர்வாகிகள் துல்கீப் கான், ஆர்ட் கணேசன், காவனூர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோடனூர் கணேசன், தட்சிணா மூர்த்தி, மனோகரன், சுப்பிர மணியன், அன்வர் அலி நத்தர், கந்தசாமி, சேது பாண்டியன், கிருஷ்ண மூர்த்தி, சுப்பிரமணி, சுரேஷ் காந்தி, நகர் காங்கிரஸ் தலைவர்கள் கோபி, ராஜீவ் காந்தி, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் காத்த ராஜா, முகமது காசிம் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி தலைவர்கள், மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சாம்பகுளம் அழகர்சாமி, அபிராமம் கர்ணன் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் ஒன்றிய துணை செயலாளரும் வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி சேர்மன் சுந்தர பாண்டியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் சங்கர பாண்டியன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனிய சாமி பேசுகையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். மாநாட்டிற்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் விளங் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கனக வள்ளி முத்துவேல், சாம்பகுளம் அழகர்சாமி, அபிராமம் கர்ணன் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் பங்கேற்பு: மண்டபத்தில் விழா பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி வருகிறார். அன்று ராமநாதபுரத்தில் நடக்கும் தி.மு.க. பாகமுகவகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    மறுநாள் 18-ந் தேதி மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டை யொட்டி அங்கு விழா பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.100-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மண்டபம் முகாம் அருகே மணல்மேடாகவும், பள்ளங்களாகவும் இருந்த பகுதி முழுமையாக பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டது.அதோடு அந்த இடத்தில் இருந்த செடி,கொடிகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.இன்னும் மூன்று நாட்களுக்குள் விழா மேடை பந்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர். துணை செயலாளர் கருப்பையா வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசு கையில், ராமநாதபுரம் தொகுதியில் யார் யாரோ போட்டியிட போவதாக கூறுகிறார்கள். யார் போட்டியிட்டாலும் தி.மு.க. தான் வெற்றி பெரும். தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை தேர்தலில் நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த முறை இழந்த தேனி பாராளும ன்ற தொகுதியிலும் இந்த முறை வெற்றி பெற வேண்டும்.

    முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை கடந்த காலங்களில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முன்னேறிய தொகுதியாக உள்ள முதுகுளத்தூரில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம். கிராமங்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பாக முகவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசுகையில், ராமநாதபுரத்திற்கு வருகை தரஉள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 34 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. மாவட்டத்தில் 1371 பாக முகவர்கள் உள்ளனர். இதில் 385 பாகமுகவர்கள் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி களிலும் வெற்றி பெற பாகமுகவர்கள் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தூவல் லெட்சுமி, ஒன்றியெ லாளர்கள் சண்முகம் ,பூபதி மணி, கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்று தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
    • பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

    பரமக்குடி

    பாராளுமன்ற கூட்டத் தொடரில் நாட்டில் கால் நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியின் விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப் பட்ட கிராமங்களின் விப ரங்கள், அந்த திட்டம் செயல் படுத்துவதற்கான காலக் கெடு ஆகியவை குறித்து தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய இணை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்தை மேம்படுத்து வதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பால் பதப்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான திட்டம் பால் கூட்டுறவு மற்றும் உழவர் உற்பத்தி யாளர் அமைப்பு களுக்கு பால் நடவடிக்கை களில் ஈடுபடுதல், தேசிய கால்நடை மிஷின், கால்நடை வளர்ப்பு, உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடைகள் உடல் நலம் மற்றும் நோய் கட்டுப் பாடு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய மந்திரி கவுசல் கிஷோர் பதில ளிக்கையில், 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ஒரு நகரத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக ரூ.100 கோடி என்ற அடிப்படையில் சமமான நிதியை மாநில அரசு, மற்றும் நகர் புற உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கும்.

    100 ஸ்மார்ட் நகரங்களில் 7,978 திட்டங்களை செயல் படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதில் 5,909 திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ளன என்றார்.இது குறித்து பரமக்கு டியில் நிருபர்களிடம் தர்மர் எம்.பி. கூறுகையில், மத்திய அரசின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்தி னாலே நன்றாக இருக்கும். தமிழக மக்களுக்காகவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்ப டுத்தவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

    • நெக்ஸான் எண்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடக்கிறது.
    • முதல்வர் சோமசுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் உடனடியாக அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு பயிற்சி வழங்கும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம் முகமது சதக் சென்டரில் நடந்த நெக்ஸான் என்டர்பிரைசஸ் திறப்பு விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனருமான பி.ஆர்.எல்.ஹாமீது இபுராகிம் தலைமையில் முகம்மது சதக் அறக்கட்டளை சி.இ.ஒ. டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் கல்வி நிறுவனங்கள் ஆலோசகர் சுமதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நெக்ஸான் செயல்பாடுகள் குறித்து வர்த்தக மேலாண்மை அலுவலர் நிஷா கூறுகையில், ெசன்னையில் தொடங்கப்பட்ட நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி நிறுவனமானது 2 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து பயிற்சியை வழங்கி வருகிறது. இதுவரை ஆயிரம் பேர் தனியார் நிறுவ னங்களிலும், அரசு துறைகளிலும் பணியில் சேர்ந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் அனைவரும் தகுந்த வேலையில் சேர்வதற்கு நாங்கள் ஒரு படிக்கட்டாக செயல்படுகிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார், ராஜசேகர், ஷேக் தாவூது, கல்வியல் கல்லூரி முதல்வர் சோம சுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 15-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராமசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்த விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது. இதனால் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×