என் மலர்
ராமநாதபுரம்
- கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின கொண்டாடப்பட்டது.
- ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
சாயல்குடி
கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஆத்தி, கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், பிச்சை, முருகவள்ளி மலைராஜ், குஞ்சரம் முருகன் பங்கேற்றனர்.
சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தேசிய கொடியை ஏற்றினார்.
கடலாடி இதம்பாடல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மங்களசாமி, கடுகு சந்தை ஊராட்சி காளி முத்து, செஞ்சடைநாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ். வாகைக் குளம் ஊராட்சி தலைவர் ஜெய லட்சுமி வடமலை, எஸ். தரைக்குடி ஊராட்சித் தலைவர் முனியசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.
பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், காணிக்கூரில் ஊராட்சி தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், கண்டிலான் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம், ஏ.புனவாசலில் ராஜேந்திரன் ஆகியோர் கொடியேற்றினர்.
பெரியகுளம் ஊராட்சி முத்துமாரி, பொதிகுளம் கிராமத்தில் லட்சுமி திரு வாப்பு, கொத்தங்குளம் ஊராட்சி கணேசன், மாரியூர் ஊராட்சி கன்னி யம்மாள் சண்முகவேல், நரிப்பையூர் ஊராட்சி நாராயணன், கன்னிராஜபுரம் ஊராட்சி சுப்பிரமணியன், செவல்பட்டி ஊராட்சி சொரிமுத்து ஆகியோர் கொடியேற்றினர்.
கொக்கரசன் கோட்டை ஊராட்சி அப்பணசாமி, எஸ்.கீரந்தை ஊராட்சி பாலகிருஷ்ணன், பீ.கீரந்தை ஊராட்சி ஆனந்தம்மாள் அற்புதராஜ், கடலாடி ஊராட்சி ராஜமாணிக்கம் லிங்கம், மூக்கையூர் ஊராட்சி தொம்மை, டி.வேப்பங்குளம் ஊராட்சியில் முருகன், மேலச்செல்வனூர் ஊராட்சி மகரஜோதி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியேற்றினர்.
வாலிநோக்கம் ஊராட்சி பீர்முகம்மது, சிக்கல் ஊராட்சி பரக்கத் ஆயிஷா சைபுதீன், கருங் குளம் ஊராட்சி காளிதாஸ், ஓரி வயல் ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம்
- இணையதளத்தில் தவறான கருத்துக்கள் பதிவு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று ராமநாதபுரம் செல்ல இருக்கிறார். ராமநாதபுரம் செல்லும் முதல்வர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை வழங்க இருக்கிறார்.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து இணையதளத்தில் தவறான கருத்துக்களை பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் பதிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராமநாதபுரம் செல்ல இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முத்துலிங்கம் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொண்டியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் பால சுப்பிரமணியன் கொடியேற்றினர்.நகர் தலைவர் காத்த ராஜா இனிப்பு வழங்கினார். தனியார் மின் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவுரவ தலைவர் ஜவஹர் அலிகான் தேசிய கொடியை ஏற்றினார். பாவோடி ஆட்டோ சங்கம், அக்ரஹாரம் குடியிருப்போர் சங்கம் சார்பில் தேசியகொடி ஏற்றப்பட்டது. கிங் பீட்டர் இனிப்பு வழங்கினார்.
திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தேசியகொடி ஏற்றினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- சிலம்பம் ேபாட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் பி.கே.சி வீர சிலம்பக் கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த 38 மாணவர்கள் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை பிரிவில் கலந்து கொண்டு 11 முதல் பரிசு கோப்பையும், 14 இரண்டாம் பரிசு கோப்பையும், 13 மூன்றாம் கோப்பையையும் வென்று முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- முதுகுளத்தூர் அருகே சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
- சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார். ஆணையாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வெங்கல குறிச்சி கிராமத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
- கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
- தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.
ராமேசுவரம்:
காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.
கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கடந்த 12-ந்தேதி முதல் நாளை வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
ஆடி அமாவாசையான இன்று சுவாமியை வழிபட நேற்று முதலே தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர். இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுபடித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படித்துறைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்து எள்ளும் நீரும் இறைத்தனர்.
குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதனால் பாபநாச நாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். உவரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தூத்துக்குடியில் கடற்கரையோரங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து மக்கள் தர்ப்பணம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல் குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பலி தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர்.
- பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள்.
ராமநாதபுரம்:
நாடு முழுவதும் சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல் படையினரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி கடல், கடற்கரை, கப்பல்களில் தேசியக்கொடி ஏற்றினார்கள்.
மூழ்கு நீச்சலில் (ஸ்கூபா டைவிங்) நிபுணத்துவம் பெற்ற கடலோர காவல் படை வீரர்கள் 4 பேர் இணைந்து, தேசியக்கொடியுடன் கடலுக்குள் நீந்திச்சென்றனர். 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர். தொடர்ந்து, தேசியக் கொடியானது கடலுக்கு மேல்பரப்பில் பறந்தது. அப்போது கடலுக்குள் இருந்தபடியே கடலோர காவல் படை வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களில் நின்றபடி, அனைத்து வீரர்களும் தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி, சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மேலும் இந்திய கடல் எல்லையில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் கடலோர காவல் படை வீரர்கள் இந்தியாவின் வரைபடம் போல் அணிவகுத்து நின்று, தேசிய கொடியை உயர்த்தி மரியாதை செலுத்தினர்.
பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள். இதுகுறித்த வீடியோவை இந்திய கடலோர காவல் படையின் டுவிட்டர் பக்கத்திலும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
- மண்டபம் பகுதியில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று (புதன்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை செல்கிறார்
விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவைதொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மதியம் 1 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென்மண்டல அளவிலான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பின்னர் ராமேசுவரம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் மண்டபம் கலோனியல் பங்களா அருகில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாவுக்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல மண்டபம் பகுதியில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 77-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டப்பட்டது.
- கலெக்டர்கள் தேசியக்கொடியேற்றி தியாகிகளை கவுரவித்தனர்.
ராமநாதபுரம்
இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாக–லமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடை–பெற்ற சுதந்திர தின விழா–வில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், தேச ஒற்று–மையை வலியுறுத்தும் வித–மாக சமாதான புறாக்க–ளை–யும் பறக்க விட்டார்.
பின்னர், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவ–குப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை யைச் சேர்ந்த 29 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 124 அலுவலர்களுக்கும் நற் சான்று பாராட்டுச் சான்றி–தழ்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக் கலைத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தாட்கோ, வேளாண்மை துறை சார் பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை, தையல் எந்திரம், முதலமைச் சர் பொது நிவாரண நிதி, இலவச வீட்டு மனைப்பட்டா,
சரக்கு வாகனம் வாங்க மானியக் கடன், தூய்மைப்ப–ணியாளர் நல வாரிய உறுப் பினர்களுக்கு வீடு வழங்கு–தல் என 57 பேர்களுக்கு ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 783 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 49 காவல் துறை அலுவலர்கள், பல் வேறு அரசு துறைகளைச் சார்ந்த 288 அலுவலர்கள் என மொத்தம் 337 அலுவ லர்களுக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.
விழாவையொட்டி 700 மாணவ, மாணவிகள் பங் கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) அபீதா ஹனீப், மாவட்ட வருவாய் அலுவலர், ராமநா தபுரம் வருவாய் கோட்டாட் சியர் உள்பட பல்வேறு அர சுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மைதானத்தில், இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, சமாதானத்தை விளக்கும் வகையி, வெண்பு றாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.
விழாவில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, பேரூராட்சி துறை, ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், உள்பட பல்வேறு அரசுத்து றைகளின் சார்பில் மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 200 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
70 காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற் சான்றிதழ்கள் மற்றும் கேட யங்களை கலெக்டர் வழங்கி னார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம் பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காவல் துறையில் சிறப் பாக பணிபுரிந்த 70 போலீ சாருக்கும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர் கள் மற்றும் பணியாளர்க ளுக்கு சான்றிதழ்களும், வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், சிவகங்கை எம்.எல்.ஏ. பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை), மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர் கள், காவல் துறை அலுவ லர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்தி தின விழா கொண்டாடப் பட்டது. கலெக்டர் ஜெய–சீலன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் கருண் காரட் (அருப்புக் காோட்டை), தனஞ்ஜெயன் (சிவகாசி), ஜெகன்நாதன் (திருச்சுழி), வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், திட்ட இயக்குநர் தண்ட பாணி, ஆர்.டி.ஓ.க்கள் சிவகுமார் (சாத்தூர்), விஸ்வநாதன் (சிவகாசி), கலெக்டர் நேர்முக உதவி யாளர் அனிதா உள்பட 391 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக் டர் வழங்கினார்.
முன்னதாக ஜீப்பில் சென்று கலெக்டர் போலீ–சார் அணிவகுப்பு மரியா–தையை ஏற்றுக் கொண்டார். பள்ளி மாணவ, மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனி வாச பெருமாள், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதிராஜ சேகர் தேசியக் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்ட பஞ்சா யத்து அலவலகத்தில் பஞ்சா யத்து தலைவி வசந்தி மான்ராஜ் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவு தூணில் தேசியக் கொடி ஏற்றப்பட் டது.
கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் தலைவர் பாண்டுரங்கள் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் எம்.பி. அலுவல கத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
- பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.
பரமக்குடி
பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.
வட்டாட்சியர் அலுவ லகத்தில் ரவி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி முத்தரசன், நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கொடி ஏற்றினார். நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா, போகலூர் ஒன்றிய தலைவர் சத்யாகுண சேக ரன், பரமக்குடி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
- நாளை ஆடி அமாவாசை தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ந வபாஷாணத்திற்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், நாளை (16-ந்தேதி) ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்து உள்ள கடல் பகுதி வரை கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழி பாதையாக பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
- சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
பசும்பொன்
கமுதி அருகே அபிராமத்தில் உள்ள டி.எம்.அகடாமியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் சிலம்பம்,கராத்தே, பரத நாட்டியம்,கேரம், சதுரங்கம், ஓவியம் உட்பட பல்வேறு பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேவகோட்டையில், நடைபெற்ற சிலம்பம் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் அபிராமம் டி.எம்.அகடாமி சார்பில் கலந்து கொண்ட 80 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அவர்களை டி.எம்.அகாடமி நிறுவனர் மீனலோசனி மற்றும் சிலம்பம் பயிற்றுனர் ஆறுமுகம் ஆகியோரை பாராட்டினர். மேலும் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.






