என் மலர்
ராமநாதபுரம்
- ரகுநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை உதவி செயற்பொறியாளர் (நகர்)பாலமுருகன் வெளியிட்டுள்ளார்.
மண்டபம்
ராமநாதபுரம்.உதவி செயற்பொறியாளர் (நகர்)பாலமுருகன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரகுநாதபுரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரகுநாதபுரம், தெற்கு காட்டூர், தெற்கு வாணிவீதி, படைவெட்டி வலசை, பூசாரிவலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப் பேட்டை, பெரிய பட்டணம், தினைக்குளம் வள்ளி மாடன்வலசை, வண்ணாண் குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, உத்த ரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திர மாலா, துணைத்தலைவர் தாஹிராபீவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காளீஸ்வரி, தினேஷ்குமார், செல்வி, ரவிச்சந்திரன், நாகராஜ், திருப்புல்லானி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி, துணை தலைவர் சிவலிங்கம், ஒன்றிய உறுப்பினர்கள் சரளாதேவி, ரஞ்சனி, பிரேமா, முனியாயி, சுமதி, நாகநாதன், பைரோஸ்கான், கமலா, கலாராணி, கோவிந்த மூர்த்தி, கருத்த முத்து, திருமுருகன், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஜெகத் ரட்சகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் நாக நாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ண ப்பன், கவிதா, சிவகாமி, கர்ண பூபதி, கமாலியா பேகம், மணிமேகலை, சாமிநாதன், திலீப்குமார், பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான்பீவி, துணை தலைவர் பிரோஸ்கான், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்ரியா ராஜேஷ்குமார், துணை தலைவர் கண்ணகி ஜெகதீசன், தேரிருவேலி ஊராட்சி மன்ற தலைவர் அபுபக்கர் சித்திக், துணை தலைவர் கலாதேவி சேதுராமு, வார்டு உறுப் பினர்கள் மேக வர்ணம், மருதுபாண்டியன், முத்துச்சாமி, ஞானசவுந்தரி, ராமர் செல்வி, கீதா, முருகேசன், சாந்தி, நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணை தலைவர் சண்முகராஜா, வார்டு உறுப்பினர்கள் பெருமாள், வள்ளி, சித்ரா தேவி, மல்லிகா, கார்த்திகா, சாந்தி, சிங்கராஜா, லெபன், தமிழரசன், அஸ்மா பேகம், செல்வராஜ்,
முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், துணை தலைவர் வயணப் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மாரியம்மாள், மீனாள், கருப்பணன், மோகன் தாஸ், நாகூர் மீரா, பாலுச்சாமி, சேகர், தனலட்சுமி, யுவ பிரியா, உம்முதர்தா, ஹிதா யத்துல் பானு, சுந்தரம்மாள், கொத்தங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத் தலைவர் வெங்கட சாமி, வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மும்தாஜ் பேகம், முத்துச்சாமி, கார்த்திக் ராஜா, ராஜா மேகலா, இந்திரா, மங்களேஸ்வரி, சுந்தரம்,
இதம்பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்கலசாமி, துணை தலைவர் தெய்வக்கனி, வார்டு உறுப்பினர்கள் கவுதமன், கனகசபாபதி, கவிதா, தங்கராஜ், மோகன்தாஸ், ஜரினா பீவி, சுலைகா பேகம், முனீஸ்வரி, அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம், துணை தலைவர் மரகதம், ஊராட்சி உறுப்பினர்கள் சித்ரா, ஜெயசித்ரா தேவி, இந்துமதி, அர்ஜூனன், சேதுமணி, காக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் (சகோ) ஜெயமணி, வார்டு உறுப்பினர்கள் சிவகுருநாதன், பெனாசீர் தான், மகமத் பேகம், ஒச்சம்மை, குணபாலன், தாய்லட்சுமி, சாந்தி, மரிய செல்வம், ஜெயமுருகன், குமாரக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணை தலைவர் விஜயநாதன், வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, ஜெ.ராஜேஸ்வரி, நாகஜோதி, காந்தியம்மாள், கிருஷ்ணன், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவல்லி, துணை தலைவர் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் முத்துமாரி, அரியநாயகம், நல்ல தம்பி, கணேசன், தர்ம வள்ளி, பாஸ்கர சேதுபதி, கோமதி, முத்துலட்சுமி, முத்துக்குமார், மஞ்சுளா, பாத்திமுத்து, சீனி செய்யதம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
- மீன்கள் காட்சிக்கூடம், மகளிர் குழு கண்காட்சி அரங்கத்தை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.
- ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி–களை வழங்கினார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடை பெற்ற மீனவர் நல மாநாட் டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து–கொண்டு மீனவர்கள் மற் றும் மகளிர் சுயஉதவிக்குழு–வினர் என 13 ஆயிரத்த 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி–களை வழங்கினார்.
முன்னதாக மாநாடு நடைபெறும் கலோனியர் பங்களாவுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன்கள் காட்சி கூடம், மகளிர் மேம்பாட்டு நிறுவ–னம் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங் குகள்,
மகளிர் சுய உதவிக்குழுவி–னர் தயாரித்த கைவினை பொருட்கள் அரங்கு, சிறு, குறு தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
- அக்காள்மடம் பகுதியில் மீனவர் குடியிருப்புக்கு சென்று முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.
- சிறுவர், சிறுமிகளுடன் படிப்பு பற்றி கேட்டறிந்தார்.
ராமநாதபுரம்
ராநாதபுரம் மாவட்டம், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மீனவ குடும்பத்தை சேர்ந்த வர்களிடம் கலந்துரையாடினார்.
ராமநாதபுரம் பேராவூர் பகுதியில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.
மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணை யம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர் களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபு ரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் அக்காள் மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவ தற்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா? என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதியில் உள்ள மாணவர்களுடன் கலந்துரை யாடி அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்ட றிந்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரி கள், கட்சியினர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரத்தில் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரத்துக்கு வந்தார். மாவட்ட எல்லை மற்றும் முக்கிய பகுதிகளில் தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன்,பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன், ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன், நரிப்பையூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா, சாயல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், நீர்பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய அவைத்தலைவர் சார்லஸ், பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஜலீல், துணை செயலாளர்கள் பழனிச்சாமி, முனியசாமி, மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன், ஒன்றிய துணை செயலாளர் பொன்னுத்தாய்-பாண்டி,
பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வினிதா குப்புசாமி, துணை தலைவர் ஜெயபாலன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் பூமிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளீஸ்வரி, தேன்மொழி, ராமசாமி, முருகேஸ்வரி, கதிரவன், காளிதாஸ்,
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா, துணை தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் சங்கமுத்து, கலைச்செல்வி, காந்திமதி, மங்களேஸ்வரி, சுப்பிரமணியன், சித்ரா , சேதுராமன், அமராவதி, சிவகுமார், தேவி, நதியா, திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமது முக்தார், துணை தலைவர் செல்வி பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மேகலா விஸ்வநாதன், கார்த்திகேயன் ராஜா, சிவா, ஜமால் மைதீன், அருணாசலம், காளியம்மாள், சசிகுமார், சாந்தி செங்கை ராஜன், ஜெயசீலா கண்ணன், முகமது ரிஸ்வான், மதி வாணன், சிவசங்கீதா ராஜாராம், லூர்து மேரி பிரசாத், சாந்தா கணேசன், விஜயகதிரவன், ராவுத்தம்மாள் ராஜதுரை, சுமதி முத்துராக்கு, ஸ்ரீதரன், சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்,
கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அம்பிகா நாகராஜ், ராமநாத புரம் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட அமைப்பாளர் முகமது ஜகாங்கீர், தொண்டி பேரூர் நிர்வாகி நவ்பல் ஆதம், கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், கடலாடி ஒன்றிய செய லாளர் மாய கிருஷ்ணன், கமுதி ஒன்றிய குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், துணை தலைவர் சித்ரா தேவி அய்யனார், ஒன்றிய உறுப்பினர்கள் ஈஸ்வரி மாரிமுத்து, கற்பூர சுந்தர பாண்டியன், பூங் கொடி, கனகஅரசி, பாலு, மகாலட்சுமி, பூபதி ராஜா, சங்கம்மாள், அன்பரசு, உதயனன், கணேசன், கவிதா, பழனியம்மாள், உதயகுமார், முத்துபாண்டி அம்மாள், முத்துலட்சுமி, காளீஸ்வரி, கமுதி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி, ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், துணை தலைவர் உடையார்,
செஞ்சடை நாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லிங்கராஜ், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் மக்சூப்பானு, உறுப்பினர்கள் மாரியம்மாள், முருகேசன், சுமதி, முத்துக்கருப்பன், ராதா, நஸ்ரின் பானு, மகேஸ்வரி, மணிமாறன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், உறுப்பினர்கள் முனீஸ்வரி, ஜோதி மணி, மங்கை யர்க்கரசி, தனபாண்டி யம்மாள், ராஜாராம் பாண்டியன், கயல்விழி, செல்வராணி, நாகராஜன், காளிதாஸ், ராணி, கமலக்கண்ணன், வீரசேகர், விஜய லட்சுமி, காதர் பிச்சை, ஜெயராமன், ஜோதி புஷ்பம், மணி கண்டன், சபிக்கா பானு, குமார், ராமசுப்பிரமணியன், கனகவல்லி, இந்துமதி முத்துலட்சுமி, ரமேஷ், செல்வி, லட்சுமி, இந்திரா மேரி, ராமநாதன், காயத்ரி, முகமது ஜகாங்கீர், மெகர் பானு, பஞ்சவர்ணம் ஆகியோர் வரவேற்றனர்.
- 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.
- தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
மண்டபம்
ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது:-
நடைபெறவுள்ள நாடா–ளுமன்ற தேர்தலில் நாற்ப–தும் நமதே, நாடும் நமதே என்ற அளவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பயிற்சி பாசறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்த அனுமதி அளித்த முதல்-அமைச்சரும்,தி.மு.க. தலை வருமானமு.க.ஸ்டாலி னுக்கு நன்றி.
மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி நடைபெற்ற இந்த இடத்தில் முகவர்க–ளுக்கு தேர்தல் என்னும் போரிலர் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் போரில் தி.மு.க. வெல்வது உறுதி.
இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதி கள் உள்பட தமிழகம், புதுச் சேரி உள்பட 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் ஒப்படைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழக எம்.பி.க்களின் கொள்கை ரீதியான கருத் துக்களை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், பா.ஜனதாவினரும் தடுமாறி வருகின்றனர். இந்த தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசி–னார்.
விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வடிவிலான வெண்கல சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசாக வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
- பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது.
- கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973ல் கருணாநிதி வெளியிட்டார்.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
9 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க. அரசு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது இலங்கையின் வாடிக்கையாக உள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பாக வாழ, இந்தியாவில் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என பேசிய மோடி என்ன செய்தார்? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார் எனக்கூறிய பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது?
ஒவ்வொரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது.
இதுவரை 48 தாக்குதல் சம்பவங்கள் நடந்து, 619 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு வரும்போதெல்லாம் பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து கோரிக்கை வைத்தேன். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.
கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973ல் கருணாநிதி வெளியிட்டார்.
கச்சத்தீவுக்காக எந்த சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவும் இல்லை. அதை தி.மு.க. ஆதரிக்கவும் இல்லை.
எந்தக்காலத்திலும் கச்சத்தீவு இலங்கைக்கானது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
கச்சத்தீவுக்காக போடப்பட்டது வெறும் ஒப்பந்தம் தான்.
பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக ஆட்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 5,035 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.
- மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இனி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மீனவர்களுக்காக தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. மீனவர்களுக்கு மானிய விலையில் மண் எண்ணெய், கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார்.
மீன்வளத்துறையின் பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என மாற்றினோம்.
பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவர் சங்கங்களை இணைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதிகாரிகளையும், மீனவர்களையும் இணைத்துள்ளோம்.
நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டை உலகோடு இணைத்தது கடல். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.
* கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
* காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
* மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 5,035 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.
* கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது.
* நாட்டுப்படகு மீனவர்களுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு, டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
* மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இனி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.
* மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ராமேஸ்வரம் சென்றார்.
- அங்கு மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்
ராமநாதபுரம்:
தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது. .
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ராமேஸ்வரம் சென்றார்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார் அக்காள்மடம், சேதுபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
- மக்கன் நலனில் அக்கறை இல்லாத பிரதமரும், அமித்ஷானும் திமுக மீது விமர்சிக்கின்றனர்.
- தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டியாக பல ஆயிரம் கோடி வசூலிக்கும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.
தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
மக்களினம் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வருகிறோம். மக்களுக்கு நம் மீது நம்பிக்கை உள்ளது. ஒரு கோடிக்கும் மேலான பெண்கள் செப்டம்பர் மாதம் முதல் மாதம் தலா ரூ.1000 வாங்க உள்ளனர்.
13 லட்சம் குடும்பங்களின் நகை கடனை தள்ளுபடி செய்துள்ளோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.
எதிரிகளின் அவதூறுகளை முறியடிக்க சமூக ஊடகங்களில் கணக்கு துவங்குங்கள். டீக்கடை, சலூனில் பேசப்பட்ட அரசியல் தற்போது சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.
இந்தியாவின் கட்டமைப்பை பாஜக ஆட்சி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது.
பிரதமராக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டினாரா பிரதமர் மோடி? உலகளவில் ராமநாதபுரத்தை புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாற்றுவேன் என கூறினார். மாற்றினாரா ?
தனுஷ் கோடி ரெயில் பாதை உள்பட பல்வேறு வடைகளை சுட்டுள்ளார் பிரதமர் மோடி. கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.
தமிழக மீனவர்களின் கைது தொடர் கதையாக உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படாமல் தடுப்போம் என்று பிரதமர் வாக்குறுதி தந்தார், நிறைவேற்றினாரா?
மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிப்பது என அராஜகம் தொடர்கிறது.
இவற்றையெல்லாம் தட்டிக்கேட்காமல் பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. 2015ம் ஆண்டில் அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வந்தபாடில்லை.
தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டியாக பல ஆயிரம் கோடி வசூலிக்கும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.
இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றும் வகையிலேயே அமைச்சர் எ.வ.வேலு பேசினார். இதில் எங்கே பிரிவினை இருக்கிறது, இதை தான் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சரும் திரித்து பேசுகின்றனர்.
சொந்த கட்சியில் ஆள் இல்லாததால் மாற்று கட்சியில் இருந்து கடன் வாங்கி திமுகவை பிரதமர் மோடி விமர்சிக்கிறார்.
ஜெயலலிதா பற்றி பேசிய மத்திய நிதியமைச்சர், மணிப்பூர் பற்றி பேச மறந்தது ஏன்? மக்கன் நலனில் அக்கறை இல்லாத பிரதமரும், அமித்ஷாவும் திமுகவை விமர்சிக்கின்றனர்.
திமுக சரியான பாதையில் செல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜகவின் அடிமையாக அதிமுக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைக்காக திமுக மட்டுமே குரல் கொடுக்கும்.
திமுகவின் கொள்கையை மற்ற மாநில கட்சிகளும் பின்பற்ற தொடங்கி உள்ளது பாஜகவை உறுத்துகிறது. இந்தியாவில் இருக்கும் ஆன்டி இந்தியன்களாக பாஜகவினர் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சி காலத்தில்தான் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
- திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டர்களை பாராட்டுகிறேன்.
ராமநாதபுரத்தில் இன்று மாலை தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வீரம் மிகுந்த ராமநாதபுரம் மண்ணில் கூடி இருக்கிறோம். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு திமுக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது.
வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம் வளர்ச்சி மாவட்டமாக மாறியுள்ளது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம்.
நீண்ட காலமாக ஓடாமல் இருந்த ராமநாத சுவாமி கோயில் தேரை ஓட வைத்தோம். பின் தங்கிய ராமநாதபுர மாவட்ட திமுக ஆட்சியில் தான் வளர்ச்சி கண்டது.
திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டர்களை பாராட்டுகிறேன். தமிழகத்தை மீண்டும் ஆள வேண்டுமென கருணாநிதி கண்ட கனவை நிறைவேற்றிவிட்டோம்.
கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது. 68,036 பேர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டத்திற்கு உழைத்தவர்களுக்கு பாராட்டுக்கள். பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகே வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
5 முறை ஆட்சியை கைப்பற்றிய திமுக தற்போது 6 முறையாக ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சி காலத்தில்தான் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் பாராளுமன்ற வெற்றிக்கும் பொறுப்பாளர்கள். 40ம் நமதே என்ற லட்சியத்துடன் தொண்டர்கள் கம்பீரத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை கொண்டுவர வேண்டியது உங்கள் பணி.
வாக்குச்சாவடியில் உள்ள குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நீங்கம் ஒதுக்கினால் போதும்.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களின் தேவையை கண்டறிந்து நிறைவேற்றினால் வெற்றி நிச்சயம். தமிழ்நாட்டில் திமுகதான் நிரந்தரமாக ஆளும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கமுதி அருகே தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
- கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோவில் கடைசி ஆடித்திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பெருநாழி போஸ், சிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். தென் மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் குண்டுகுளம் அணியினர் முதல்பரிசும், 2-ம் பரிசை விஜய பாண்டியன் நினைவு கிளப் அணியும், பாளையம் பட்டி அணி 3-வது பரிசும், புதுக்கோட்டை அணி 4-வது பரிசும், சாமிபட்டி 5-வது பரிசும், கோவிலாங்குளம் அணி 6-வது பரிசும், கள்ளக்காரி 7-வது பரிசும், அரியமங்களம் 8-வது பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.
முன்னதாக சிவகாளியம்மன் கோவிலுக்கு பால்குடம், அக்னி சட்டி, எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தினர். அம்மனுக்கு 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.






