தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி

கமுதி அருகே தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.
தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோவில் கடைசி ஆடித்திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பெருநாழி போஸ், சிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். தென் மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் குண்டுகுளம் அணியினர் முதல்பரிசும், 2-ம் பரிசை விஜய பாண்டியன் நினைவு கிளப் அணியும், பாளையம் பட்டி அணி 3-வது பரிசும், புதுக்கோட்டை அணி 4-வது பரிசும், சாமிபட்டி 5-வது பரிசும், கோவிலாங்குளம் அணி 6-வது பரிசும், கள்ளக்காரி 7-வது பரிசும், அரியமங்களம் 8-வது பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.

முன்னதாக சிவகாளியம்மன் கோவிலுக்கு பால்குடம், அக்னி சட்டி, எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தினர். அம்மனுக்கு 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com