என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாலை ஓய்வூதியர்கள் உண்ணாவிர போராட்டம் நடத்தினர்.
- உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பஞ்சாலை ஓய்வூதியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். சிவசாமி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்றோர் நல சங்க பஞ்சாலை மாவட்ட செயலாளர்.வெங்கடசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில், குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த ெரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி துறை, மதுரை சர்வோதய பப்ளிக் குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் இரட்டை கம்பு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவி பர்ஹத் ஜபீன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றை கம்பு பிரிவில் 12 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் திவ்யதீக்க்ஷிதா, ஸ்டாண்லி ஆண்டர்சன் இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் மற்றும் பயிற்சியாளர்கள் திருமுருகன், செல்லபாண்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 256 மனுக்கள் பெறப்பட்டது.
- உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 256 மனுக்கள் பெறப்பட்டது. மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்க ளுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்க ளிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவு றுத்தினார்
தொடர்ந்து, அழகன்குளம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த சித்ராதேவி இயற்கை மரணம் அடைந்ததை யொட்டி ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை தாட்கோ தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வாரிசுதாரரிடம் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டி அருகே குருமிலாங்குடியில் தேவாலய சப்பரபவனி திருவிழா நடந்தது.
- மாலை சப்பரப்பவனி நிறைவு திருப்பலி கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகிலுள்ள குருமிலாங்குடி கிராமத்தில் புனித சுவக்கின் அன்னாள் தேவாலயம் உள்ளது. இங்கு 10 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி திருவிழா திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நிறைவு திருப்பலியும் நடைபெற்றது. திருவிழா நிறைவின் போது சப்பரப் பவனி நடைபெற்றது. முதல் சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதூதர், 2-ம் சப்பரத்தில் புனித பாத்திமா மாதா, 3-ம் சப்பரத்தில் புனித சுவக்கின் அன்னாள் ஆகியோரின் திரு உருவம் தாங்கிய சப்பரப்பவனி நடைபெற்றது. திருவிழா திருப்பலி ஆர்.எஸ். மங்களம் வட்டார அதிபர் அருட்பணி தேவசகாயம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா, அருட்தந்தை பிரபு, அருட்தந்தை குமார், கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் அருட்தந்தை இன்பென்ட் ராஜ், ஊடகப் பணிக்குழு செயலர் அருட்தந்தை அந்தோணி எட்வர்ட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி யை நிறைவேற்றினர். திருவிழா நிகழ்வுகளை அருட்சகோதரி மரிய கொரட்டி, கிரேசி, பிரிஸ்சில்லா, ரோசாரி ராணி மற்றும் பங்கு பேரவையினர் பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். மாலை சப்பரப்பவனி நிறைவு திருப்பலி கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.
- மணமகளின் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சீர்வரிசை பொருட்களும் சென்று இறங்கிவிட்டன.
- கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், மணப்பெண்ணே தாலியை பறித்து திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயதான பட்டதாரி வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயதான பட்டதாரி பெண்ணை பேசி முடித்து, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து இரு வீட்டாரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.
நேற்று காலை திருவாடானையில் ஒரு கோவிலில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமக்கள் வீட்டார், உறவினர்கள் முகூர்த்த நேரத்திற்கு கோவிலுக்கு வந்து விட்டனர்.
கோவிலில் உள்ள அலுவலகத்தில் இருதரப்பினரின் முன்னிலையில் மணமக்கள் திருமண பதிவேட்டில் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மணமகளும், மணமகனும் திருமணம் நடத்தப்படும் இடத்திற்கு வந்தனர்.
அங்கு உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த நிலையில் மணமகன், மணமகளின் கழுத்தில் தாலியை அணிவிக்க முயன்றார். அப்போது திடீரென்று மணப்பெண், மணமகனிடம் இருந்து தாலியை பறித்து கையில் வைத்துக் கொண்டார். மணப்பெண்ணின் இந்த செயலால் மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கிருந்த உறவினர்கள், அந்தப் பெண்ணிடம் தாலியை கொடுக்குமாறு கூறினர். ஆனால் அந்தப் பெண் விடாப்பிடியாக தாலியை தர மாட்டேன். உண்டியலில் தான் போடுவேன் எனக்கூறி போடச் சென்றதால் அனைவரும் திகைத்தனர். பின்னர் அந்த பெண், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன், "உனது சம்மதத்தோடு தானே எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். அப்போது எல்லாம் எதுவும் கூறாமல் முகூர்த்த நேரத்தில் திடீரென இப்படி செய்தால் எப்படி?" என்று கேட்டுள்ளார். அதற்கு மணப்பெண், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. எனது பெற்றோர்தான் இதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த பிரமுகர்கள், உறவினர்கள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. உடனே மணமகன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசாரும், கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
"திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் பணம் செலவாகி உள்ளது. எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே மணப்பெண், அவருடைய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மணமகன் புகார் செய்துள்ளார்.
மணப்பெண்ணோ, "தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயத்தினால் சம்மதம் தெரிவித்தேன்" என புகார் அளித்திருக்கிறார்.
இதற்கிடையே மணமகளின் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சீர்வரிசை பொருட்களும் சென்று இறங்கிவிட்டன.
மாப்பிள்ளை வீட்டில் திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றவர்கள், நடந்த நிகழ்வுகள் பற்றி அறியாமல் அங்கு சாப்பிட்டு விட்டு மொய் எழுதி சென்றதும் நடந்துள்ளது.
கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், மணப்பெண்ணே தாலியை பறித்து திருமணத்தை நிறுத்தியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
- மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்று மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடும்பம் குடும்பமாக அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டின் உரிமை களையும், தமிழ் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்கு இந்த மதுரை மாநாடு அடித்தளமாக அமையும்.
புனித ஜார்ஜ்கோட்டை யில் மக்கள் விரும்பும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். ஜெயலலிதாவிற்கு பிறகு அவரது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி கூறினர்.
- மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொண்டி
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக ராமநாதபுர மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று மண்டபத்தில் நடந்த மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மீனவர்கள் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை உயர்நீதி மன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியி னைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முனைவர் எஸ்டியார் சீனிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் ராமேஸ்வரம் வில்லாயுதம், துணை அமைப்பாளர் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் துணை தலைவர் பால் மாஸ், அமைப்பாளர் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார், ராமநாதபுரம் துணை அமைப்பாளர்கள் மலைச்சாமி, உப்பூர் துரை பாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோரப் பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
- தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் இணை ஆணைய சிவராம் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராமேசுவரம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்-மனோ ரஞ்சிதம் தம்பதியின் மகன் நவீன்சத்ரு (வயது 36). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருக்கோவில் பணிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட 66 பணியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பணியாளராக சேர்ந்தார்.
இவர் கடந்த பல மாதங்களாக கோவிலில் பணியாற்றி வந்தார். இவர் ராமேசுவரம் இரட்டை பிள்ளையார் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே உயர் அதிகாரிகள் கோவிலின் விதிமுறைக்கு மாறாக கூடுதல் நேரம் பணி வாங்கியதாகவும், அதற்காக தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார்.
தொடர்ந்து தனக்கு பணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரது குடும்பத்தினர் தைரியம் கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று இரவு தான் தங்கியிருந்த வீட்டில் நவீன்சத்ரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
இதுதொடர்பாக தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவில் ஆய்வாளர் பிரபாகரன் பணியாளர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதை கண்டித்தும் அவருடைய டார்ச்சரால் இன்று ஒரு பணியாளர் இறந்துவிட்டார் என்றும் கூறினர்.
மேலும் அவரை கைது செய்ய கோரி புதியதாக பணிக்கு சேர்ந்த பணியாளர்கள் ராமநாத சுவாமி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜபார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி ஆகியோர் விரைந்து வந்து பணியாளர்களிடம் சமரசம் பேசி நடத்தி அவர்களை கோவில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கோவில் இணை ஆணைய சிவராம் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பணியாளர்களின் பணிச்சுமைகளை ஆராய்ந்து சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன் பின்னர் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.
- கச்சத்தீவு நமக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார்.
- கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை காப்போம்.
ராமநாதபுரம்:
மண்டபத்தில் இன்று நடந்த மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வலியுறுத்தி வருகிறேன்.
ஏன் கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கூட கடந்த 19-ந்தேதி பிரதமருக்கு இதுதொடர்பாக நான் கடிதம் எழுதி இருந்தேன். ஆனால் இங்கு இருக்கக்கூடிய சிலர், இதற்கு தி.மு.க. தான் காரணம் என கூறி வருகிறார்கள்.
ஆனால் கச்சத்தீவை பொருத்தவரை முழு உரிமை தமிழ்நாட்டிற்கு தான் உண்டு என்பதற்கான ஆதாரங்களை 1973-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். அதையும் மீறி தான் 1974-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் இந்தியா-இலங்கை பிரதமர்களால் செய்து கொள்ளப்பட்டது.
இது ஒப்பந்தம் தானே தவிர, சட்டம் அல்ல. அப்படி எந்த சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதை தி.மு.க.வும் ஆதரிக்கவில்லை. ஒப்பந்தம் செய்தவுடன் உடனடியாக டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சந்தித்தார்.
கச்சத்தீவு நமக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைக்கு சட்ட அமைச்சராக இருந்த மாதவனும், கருணாநிதியுடன் சென்றார். சென்னையில் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் ஆதாரங்களை வெளியிட்டார். அதன்படி கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. போர்ச்சுகீசியர் மன்னர் காலத்து வரைபடங்கள் கூட அப்படித்தான் சொல்கின்றன.
1954-ம் ஆண்டு இலங்கை அரசு வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கரையோரத்தில் சங்கு எடுக்கக்கூடிய உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்த காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கூட கட்டியது கிடையாது.
கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தமானது என்பதற்கான முழு ஆதாரத்தையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் பாராளுமன்றத்திலேயே வழங்கினார். அதாவது 29.6.1974 அன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டினார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரித்த அந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். அன்று முதல் இன்று வரை கச்சத்தீவு விவகாரத்தில் அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தவர் கருணாநிதி. தி.மு.க. சார்பில் 1974-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூரில் கருணாநிதி, சென்னையில் அன்பழகன் பேசினார்கள். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். இந்த வரலாறு தெரியாமல் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாமல் சிலர் பேசி திரிவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கருணாநிதி கையெழுத்திடவில்லை.
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை மறுக்கப்படுவதால் இந்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்.
பா.ஜனதா அரசு இதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்றால் அடுத்து நடைபெறக்கூடிய பாராமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைய கூடிய புதிய அரசு இதனை நிறைவேற்ற கூடிய வகையில் நமது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.
ராமேசுவரம்:
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் நேற்று ராமநாதபுரம் அருகே தேவிபட்டிணம் சாலையில் பேராவூரில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வியூகங்கள் குறித்தும் அவர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
மேலும், தேர்லில் வெற்றி பெற்றால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் அக்காள்மடம் பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்புகளுக்கு சென்றார். அங்கு மீனவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து ராமேசுவரம் சென்ற அவர் இரவில் அங்கு தனியார் ஓட்டலில் தங்கினார். மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்காக ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கலோனியர் பங்களாவில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனியார் விடுதியில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட அவர் உற்சாகமாக கையசைத்தவாறு வந்தார்.
வரும் வழியில் ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கனிமொழி எம்.பி., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர்.
இதையடுத்து மீனவர் நல மாநாடு நடைபெறும் பகுதிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீனவர் நலம், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு முதலே மீனவர்கள் சாரை சாரையாக மண்டபத்திற்கு வருகை தந்தனர்.
அதேபோல், நலத்திட்ட உதவிகள் பெறும் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.
மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 4,184 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ரூ.24 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 315 மதிப்பீட்டிலும்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1,299 பயனாளிகளுக்கு மானியத்தில் சூரை மீன்படகு கட்டுதல் மற்றும் திட்டங்கள், கிசான் கடன் அட்டை, கடற்பாசி வளர்ப்பு, மீனவர் நல வாரிய அட்டை ரூ.9 கோடியே 92 லட்சத்து 80 ஆயிரத்து 294 மதிப்பீட்டிலும்,
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் 1 பயனாளிக்கு புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் மூலம் 1,152 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் கே.சி.சி. கடற்பாசி வளர்ப்பு கடன் ரூ.5 கோடியே 43 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும்,
மகளிர் திட்டம் துறையின் மூலம் 6,608 பயனாளிகளுக்கு கூட்டுப் பொறுப்பு குழுக்கடன் மகளிர் சுய உதவிக்குழு கடன், துயர் குறைப்பு நிதியாக ரூ.30 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.
அப்போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுதல், வாழ்வாதாரம் காத்தல், மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்குதல், அவர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தி விவாதித்தார்.
- மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதமர் மோடிஎன்று உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர்சிக்கின்றனர்.
- ராமநாதபுரம் பயிற்சி பாசறை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆேவசமாக பேசினார்.
மண்டபம்
ராமநாதபுரத்தை அடுத்த பேராவூரில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாக ரீதியிலான 19 மாவட்டங்களை சேர்ந்த 16,928 பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதா வது:-
வறட்சியான மாவட்டம் என்று கூறப்பட்ட ராமநாதபு ரத்திற்கு நாள் உள்ளாட் சித்துறை அமைச்சராக இருந்த போது போதிய தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அப் பேற்பட்ட ராமநாதபுரம் மண்ணில் இன்று கழக வீரர்களாக கூடியுள்ளோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், தேச வளர்ச் சிக்கும் ஆற்றிய பங்கு மறைக்க முடியாதது.
தாய் மண்ணை காக்கும் போரில் இருந்த மன்னர் ராமநாதசேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபடி மக்களை எழுச் சியை ஊட்டினார். மன்ன–ரின் கட்டளையை மனதில் வைத்து 42 நாட்கள் பெரும் போரை மக்கள் செய்தனர். சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை–யில் உள்ள தனிமை சிறை–யில் அவரை பிரிட்டீஷ் அரசு அடைத்தது. நாட்டுக் காக அவர் ஆற்றிய தியா கத்தை நினைவுகூர, ராமநா தபுரம் கலெக்டர் அலுவல கத்துக்கு சேதுபதி மன்னர் பெயரை வைத்தவர், தலை வர் கருணாநிதி.
அண்ணா அரசு என்ஜினீ யரிங் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள், மேல்மட்ட பாலங்கள் என திட்டங்களை தந்தோம். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. ராமநாதசுவாமி கோவிலின் தங்கத்தேரை ஓடவைத்தது இந்த ஆட்சிதான்.
தென்மண்டல முகவர் கூட்டம் என்றவுடன் ராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச் சியை மிகுந்த எழுச்சி யோடு ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சர் ராஜகண்ணப் பன், காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகி யோர் போட்டி போட்டு இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல் கின்றனர்.
தமிழகத்தை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற தலைவர் கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம். அதற்கான தளபதிகள்தான் நீங்கள். தென்மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி தற் போது வழங்கப்பட்டது. வாக்குச்சாவடியின் முகவர் கள்தான் வாக்காளர்களுக்கு முழுப்பொறுப்பு. நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் வெற்றி ஒன் றையே இலக்காக கொண்டு இன்று முதல் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களி டம் நமது சாதனைகளை தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு உள்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களாக நீங்கள் மாற வேண்டும். இதற்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண் டும். விடியல் பயணம் என பெண்களுக்கான இலவச பயணத்துக்கு பெயர் வைக் கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. நமக்கு எதிராக அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் சிறுநரிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகி றது.
அ.தி.மு.க., பா.ஜ.க. செய்வதை போல பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். நமது சாதனைகளை மட்டும் சொன்னால் போதும். நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆட்சி–யில் உள்ள பா.ஜ.க. நாட்டை சின்னாபின்னமாக்கி விட் டது. மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
பதவிக்கு வரும் முன் மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். ராமநாதபுரத் திலும் கூட்டம் நடத்தி வாக் குறுதிகள் கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கருப்பு பணத்தை ஒழித்து ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார் களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத் தாரா?
இதில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட போகி றார் என்கின்றனர். ராமேசு வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்று வோம் என்றார். பாதாள சாக்கடை பணிகளை தவிர எதுவும் நடக்கவில்லை. அதையும் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக செய்ய வில்லை. புயலால் அழிந்து போன ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வரு வோம் என்றார். இது வரை எதுவும் நடக்கவில்லை. மோடி சுட்ட பல வடைகளில் இந்த வடையும் ஒன்று.
மீனவர்களுக்கான வாக்கு றுதியையாவது நிறை வேற்றினாரா? இலங்கை கடற்படையின் அராஜ கத்தை போக்குவோம் என் றார். தற்போது அந்த நிலை மாறிவிட்டதா நாளை (இன்று) நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் இது குறித்து விரிவாக பேசப்படும்.
மத்திய அமைச்சராக அருண்ஜெட்லி இருந்த போது சொன்ன மதுரை எய்ம்ஸ் திட்டம் செங்கலுடன் நின்றுவிட்டது. 9 வருடங்கள் கழித்து தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என்பது தெரியவில்லை. பல ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியை தமிழகத்திடம் இருந்து பெறும் மத்திய அரசுக்கு தனது நிதியில் இருந்து, மதுரையில் எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.
இப்போதுதான் சகோதரி கனிமொழி கூறிய சிலப்பதி காரத்தின் முன்னுரையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் படிக்க தொடங்கி இருப்பார் என்று தெரிகிறது. ஒன்றும் அவச ரமில்லை. முழுமை யாக படிக்க கால அவகாசம் உண்டு. மத்திய நிதி மந்திரி யின் கணவர் எழுதிய புத்த கத்தை மத்திய மந்திரிகள் அனைவரும் படிக்க வேண் டும். அந்த புத்தகத்தில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப் பாற்ற முடியாது என கூறப்பட்டுள்ளது. ஜெயலலி தாவின் சட்டமன்ற நாட கத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் மத்திய நிதி மந்திரி, மணிப்பூர் சம்பவத்துக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்?
மக்கள் நலனில் அக்கறை யில்லாத பிரதமர், உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர் சிக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமையாக இருப்பது எடப்பாடி பழனி சாமிதான். நாங்கள் மாநில கட்சி தான். ஆனால் அனைத்து மாநில மக்களின் நலனுக்காக குரல் கொடுக் கும் ஒரே கட்சி தி.மு.க. தான். மக்கள் உரிமைகளை ஓங்கி ஒலித்து, நாடாளுமன் றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்ற–னர். நம்மை பின்பற்றி பிற மாநில எம்.பி.க்களும் தைரி–யமாக பேசுவது மத்திய அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. மக்களாட் சிக்கு தமிழகம் முன்னோடி யாக இருந்து 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறும்.
இதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட் டுள்ளது. பா.ஜ.க.வின் அடக்கு முறைகளை பார்த்து பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. தேர்தல் வெற்றிக் கான களப்பணியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். உங்களை நம்பி நாடாளு மன்ற தேர்தல் களத்தை ஒப்படைத்துள் ளேன். உங்களது உழைப்புக் கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்று கலைஞரின் வழித் தோன்றலாக, உங்க ளில் ஒருவனாக நான் உறுதி கூறு கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. நன்றி.
இவ்வாறு அவர் பேசி னார்.
- கமுதி வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் 36,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
- விடுப்பட்டவர்களுக்கு 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மண்டபம்
கமுதி வட்டாட்சியர் சேதுராமன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாய விலை கடைகளில் மொத்தமுள்ள 36,546 குடும்ப அட்டைதாரர்களில், முதல் கட்டமாக 51 நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள், தன்னார் வலர்கள் மூலம் கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை மகளிர் உரிமைத் தொகைக்கான 25,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2-ம் கட்டமாக ஆக.5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 35 நியாய விலை கடை களில் 11,519 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம், முதிர் கன்னி ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் பெறும் நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் உள்ள தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் துணை வட்டாட்சியர் மேகலா, முதுநிலை உதவியாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் ஆகியோர் உள்ளனர்.






