search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமுதி வட்டாரத்தில் 36,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டது
    X

    கமுதி வட்டாரத்தில் 36,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டது

    • கமுதி வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் 36,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • விடுப்பட்டவர்களுக்கு 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    மண்டபம்

    கமுதி வட்டாட்சியர் சேதுராமன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாய விலை கடைகளில் மொத்தமுள்ள 36,546 குடும்ப அட்டைதாரர்களில், முதல் கட்டமாக 51 நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள், தன்னார் வலர்கள் மூலம் கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை மகளிர் உரிமைத் தொகைக்கான 25,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2-ம் கட்டமாக ஆக.5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 35 நியாய விலை கடை களில் 11,519 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம், முதிர் கன்னி ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் பெறும் நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் உள்ள தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் துணை வட்டாட்சியர் மேகலா, முதுநிலை உதவியாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×