search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்

    தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர். துணை செயலாளர் கருப்பையா வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசு கையில், ராமநாதபுரம் தொகுதியில் யார் யாரோ போட்டியிட போவதாக கூறுகிறார்கள். யார் போட்டியிட்டாலும் தி.மு.க. தான் வெற்றி பெரும். தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை தேர்தலில் நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த முறை இழந்த தேனி பாராளும ன்ற தொகுதியிலும் இந்த முறை வெற்றி பெற வேண்டும்.

    முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை கடந்த காலங்களில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முன்னேறிய தொகுதியாக உள்ள முதுகுளத்தூரில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம். கிராமங்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பாக முகவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசுகையில், ராமநாதபுரத்திற்கு வருகை தரஉள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 34 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. மாவட்டத்தில் 1371 பாக முகவர்கள் உள்ளனர். இதில் 385 பாகமுகவர்கள் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி களிலும் வெற்றி பெற பாகமுகவர்கள் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தூவல் லெட்சுமி, ஒன்றியெ லாளர்கள் சண்முகம் ,பூபதி மணி, கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×