என் மலர்
ராமநாதபுரம்
- டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.
- கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சாலைத் தெரு ஸ்டேட் பாங்க் எதிரில் மின் வாரியத்தின் நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளன. இங்கு 1700 கே.வி உயரழுத்த மின்சாரம் இந்த மின் மாற்றிகள் வழியாக செல்கி றது.
இந்த பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீர் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கழிவு நீரை அகற்றி சீரமைக்கப்படவில்லை.
இந்தப் பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்வதால் பீஸ் போனால் கூட மின்வாரிய ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த டிரான்ஸ்பார்மர் பாதாள சாக்கடைக்குள் உள்ளதால் மின் விபத்து அச்சத்தில் பழுது ஏற்பட்டால் சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் சுற்றிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற் பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மட்டுமின்றி அந்தப்பகுதியில் பொது மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மின் வாரிய உதவிப் பொறியாளர் வெற்றிவேல் கூறியதாவது:-
பாதாள சாக்கடை கழிவு நீர் மேன் ஹோல் வழியாக வெளியேறி மின் மாற்றிப் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனால் டிரான்ஸ் பார்மரில் பழுது ஏற்பட் டால் கூட சீரமைக்க முடிவ தில்லை. மின் வாரிய ஊழியர்கள் அச்சப்படு கின்றனர். கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.
- ஆற்றுவாய் பகுதியில் நின்றிருந்த படகை போலீசார் சோதனையிட்டபோது அந்த படகு இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.
- இலங்கை மன்னார் பகுதி படகில் வந்திறங்கிய இருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பைபர் படகு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மரைன் மற்றும் மண்டபம் போலீசார், உளவு பிரிவினர் அங்கு விரைந்து வந்தனர். ஆற்றுவாய் பகுதியில் நின்றிருந்த படகை போலீசார் சோதனையிட்டபோது அந்த படகு இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.
இந்த படகு மூலம் கடத்தல்காரர்கள் அல்லது இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊடுருவியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் உளவுத்துறை போலீசார் படகில் வந்தவர்கள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் வேதாளை கிராம பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது
ராமநாதபுரம் அருகே பெருங்குளம் பகுதியில் நேற்று இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சி கொல்லி மருந்து பாட்டில்கள் பிடிப்பட்ட நிலையில், இலங்கை மன்னார் பகுதி படகில் வந்திறங்கிய இருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
- கிராம பகுதி மாணவ-மாணவிகள் விருப்பமான பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை பயில வேண்டும்.
- அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள கொம்பூதி கிராமத்தில் அரசின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களுடன் உரை யாடினார். அரசின் திட்டங்கள் கிடைக்கப் பெறுவது மற்றும் அடிப் படை வசதிகள் மேம்படுத்து வது குறித்து அவர் பொது மக்களிடம் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் 12-ம் வகுப்போடு நின்று விடுகிறார்கள். பெற் றோ ர்கள் பிள்ளை களை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.
பிள்ளைகளும் தொடர்ந்து ஆர்வமுடன் தங்கள் விருப்பமுள்ள பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை படிக்க வேண்டும். அதற்கேற்ப தற்பொழுது அரசு தொழிற் பயிற்சியுடன் வேலை வாய்ப்புகளும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது. இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரே ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்படுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ராமநாதபுரம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப் பேறு பிரிவில் மதுரை மாந கராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேரா சிரியர்களை மரியாதை குறைவாக நடத்தி, மருத்து வர்கள் மற்றும் பணியாளர் களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது.
அவரை பணியிடை நீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க கோரியும் தமிழகம் முழு வதும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம னையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. மாவட்ட தலை வர் மலையரசு தலைமை தாங்கினார்.
மாவட்ட இணைச்செயலா ளர் டாக்டர் அறிவழகன் முன்னிலை வகித்தார். மகப் பேறு துறைத்தலைவர் டாக்டர் ரமணீஸ்வரி, டாக் டர்கள் சிங்காரவேலன், சந்தானக் கண்ணன், பாண் டிச்செல்வம், நந்தினி, வஹிதா, ஜெகப்ரியா உட் பட 20-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி சுகா தார அலுவலரை உடனடி யாக பணி நீக்கம் செய்தல், மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்களை இரட்டிப் பாக்குதல், கூடுதல் மகப் பேறு மருத்துவர்களி உடன டியாக பணியில் அமர்த்து தல்,
மகப்பேறு இறப்பில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கான தணிக்கை மட்டுமே மாவட்ட அளவில் கலெக்டர், இணை இயக்குனர், துணை இயக்கு னர்களை கொண்டு நடத்தப் படுதல் தற்போது நடைமு றையில் உள்ள ஆறு வித மான தணிக்கைகளை மாற்றி ஒரே ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்படுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த அனைத்து போராட்டங்களுக்கு பிறகும் உரிய தீர்வு ஏற்படாவிடின் போராங்களை தீவிரப்ப டுத்துவது குறித்து வரும் 16-ந்தேதி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடி வெடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- உயிர் கொல்லி ஜெல்லி மீன்களை தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
- மீனவர்களுக்கு உடல்வேதனை, மூச்சு திணறல் ஏற்படும்.
ராமேசுவரம்
பாக்நீரினை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடும் விஷத் தன்மை கொண்டுள்ள நாலு மூலைச் சொறி, குத்துச் சொறி ஜெல்லி மீன்கள் அதிகளவில் கானப்படு கிறது. மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கிக்கொள்ளும் போது மீன்களுடன் கலந்திருக்கும் இதணை வெறும் கையில் தொடும்போது அது கடும் விஷத்தன்மையை பாய்ச்சி விடும்.
இதனால் மீனவர்களுக்கு உடல்வேதனை, மூச்சு திணறல் ஏற்படும். உடனே மருத்து வர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இல்லை யென்றால் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். இத னால் மீன வர்கள் வலை யில் சிக்கிக் கொள்ளும் ஜெல்லி மீனவர்களை கையால் தொடமால் விலகி இருக்க வேண்டும் என மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜெல்லி மீன் தாக்கி சில மீனவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.
- முல்லை பெரியாறு அணை மூலம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்.
- கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கிணங்க ராமநாத புரம் கிழக்கு மாவட்ட பாட் டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கிம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலா ளர் வெங்கடேசன் வரவேற் றார்.
பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், ராமநாதபுரம் ஒன் றிய செயலாளர் பொறியா ளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், திருப்புல்லா ணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், இளைஞர் சங்க செய லாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி
ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்கர் செயலாளர் சந்தோ சம், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் மற்றும் நிர்வாகி கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவே தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல் லாமல் கடன் வாங்கிய நபர்களின் வாகனங்களை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வது குண்டர் களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்கள் அதி கமாகி வருகிறது. இவை அனைத்தையும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து கட்டுப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாரதி நகரில் இயங்கி வரும் தனியார் நிறு வனத்தின் முன்பு வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்,
தினம் தினம் இலங்கை ராணுவத்தினரால் கட லுக்குச் சென்று வீட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறி யாக சென்று வரும் தமிழக மற்றும் குறிப்பாக ராமேசுவ ரம் மீனவர்களின் உயிருக் கும் உடைமைகளுக் கும் மத்திய அரசு பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவா தம் வழங்க வேண்டும் ஒரு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட நிர் வாகத்தின் சார்பாக போராட்டம் நடத்த வேண்டும்,
அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய அனைத்து நிர்வாகி களுக்கும் செயற்குழு கூட்டம் பாராட்டு, நன்றி, வாழ்த்துக் களை தெரிவிப்பது, விரை வில் சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றி யத்தை உருவாக்க வேண்டும் அதற்காக கடலாடி ஒன்றி யத்தின் சார்பாக விரைவில் ஒரு உண்ணா நிலை போ ராட்டம் நடத்த வேண்டும்,
முல்லைப் பெரியாற்றிலி ருந்து நேரடியாக ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து கொண்டு வந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழு மையாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா நன்றி கூறினார்.
- புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதே இடத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.
சுமார் 150 மீட்டர் நீளத்திலும், 120 மீட்டர் அகலத்திலும் பஸ் நிலையம் கட்டுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இதில் ஒவ்வொரு தூண்களும் சுமார் 4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 35 பஸ்கள் நிறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்பட உள்ளன. இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கும் தனியாக வாகன நிறுத்துமிடமும், 100-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளும் கட்டப்பட உள்ளன.இந்த கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாகவும், இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.
ராமநாதபுரம்
மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் ராமநாதபு ரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், வாள் வீச்சு ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.
ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 29 பேர் முதல் பரிசும், 9 மாணவர்கள் இரண்டாம் பரிசும் வென்று பரிசு கோப்பையினை அள்ளினர்.
வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாண வர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானு வேல் மற்றும் பயிற்சியா ளர்கள் திருமுருகன், ஜெய ஸ்ரீ ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்த நாளையொட்டி 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர்.
- முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம்
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கும் விழா நிகழ்ச்சி சத்திரக்குடியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயக்கூ டத்தில் போகலூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் தலைமையில் நடந்தது.
தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தலைவர் பரம்பை பாலா அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரர் மற்றும் சேம னூர் ராஜகோபால் ஆகி யோர் சிறப்பாக செய்திருந்த னர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.
- லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் பேட்டியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் தங்களுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இது குறித்து லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் "மாலைமலர்" நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் கடந்த 2022-23ம் ஆண்டு நெற்பயிர்களை விவசாயம் செய்தனர்.விளைந்த பயிர்கள் எல்லாம் மழை இல்லாமல் கருகி அவர்க ளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்குட்பட்ட கருங்குளம்,அச்சங்குடி,கண்ணனை, பெரிய தாம ரைக்குடி, சின்ன தாமரைக்குடி,நல்லிருக்கை மற்றும் வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தற்காலி மாக கைவிடுகிறோம். பயிர் காப்பீடு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டினால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.
- மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.
ராமேசுவரம்:
சென்னை திருவான்மியூரை சேர்ந்த சேர்ந்த பரத் மோகன்-நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரிஷ் (வயது 17). இவர் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இருந்தபோதிலும் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவராக வலம் வந்தார்.
அதேபோல் ஹரிஷ் சிறுவயது முதலே நீச்சலில் கூடுதல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனை அவரது பெற்றோர் சாதனை யாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கி னர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.
உள்ளூர் போட்டிகளில் மனதைரியத்துடன் பங்கேற்ற ஹரிஷ் ஏராளமான பரிசுகளை குவிக்க தொடங்கினார். இதையடுத்து கடலில் நீந்தி சாதனை படைக்க ஹரிஷை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தினர். அதற்கான ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் தொடர்ந்து ஹரிஷ் மேற்கொண்டார். சிறப்பு பயிற்சியாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
இதையடுத்து இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான அதிக கடல் நீரோட்டம் கொண்ட பாக்ஜலசந்தியை கடக்க முடிவு செய்த ஹரிஷ் தனது பெற்றோரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர் அரசிடம் உரிய அனுமதியும் பெற்றனர்.
அதன்படி கடந்த 6-ந் தேதி ஹரிஷ் தனது தந்தை பரத்மோகன் மற்றும் 24 நீச்சல் வீரர்களுடன் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை சென்றனர். பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கிய ஹரிஷ் மறு நாள் (7-ந்தேதி) காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.
28 கிலோமீட்டர் தொலைவை சுமார் 11 மணி நேரம் 52 வினாடிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். அரிச்சல் முனை வந்தடைந்த மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.
அப்போது சுங்கதுறை கண்காணிப்பாளர் சம்பத், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோரும் இயலாமை என்பதை இயலும் என்று மாற்றிக்காட்டி சாதனை படைத்த ஹரிசை கைதட்டி வரவேற்று பாராட்டினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.
- ஆர்.எஸ்.மங்கலத்தில் நாளை மின்தடை பகுதிகள்.
- இந்த தகவலை திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி வெளி யிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டிய மடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுக வயல், இந்திரா நகர், ஆவெ ரேந்தர், பாரனூர், கலங்காப் புலி, சனவேலி, சவரியார் பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்களம், ஆப்ராய், பெத்த னேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின் தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.






