search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் காப்பீடு தொகையை உடனடியாக  வழங்க வலியுறுத்தல்
    X

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு வழங்கக்கோரி லாந்தை ஊராட்சிமன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

    • கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.
    • லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் பேட்டியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் தங்களுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    இது குறித்து லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் "மாலைமலர்" நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் கடந்த 2022-23ம் ஆண்டு நெற்பயிர்களை விவசாயம் செய்தனர்.விளைந்த பயிர்கள் எல்லாம் மழை இல்லாமல் கருகி அவர்க ளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்குட்பட்ட கருங்குளம்,அச்சங்குடி,கண்ணனை, பெரிய தாம ரைக்குடி, சின்ன தாமரைக்குடி,நல்லிருக்கை மற்றும் வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தற்காலி மாக கைவிடுகிறோம். பயிர் காப்பீடு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டினால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×