search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water problem"

    • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.
    • தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலை பேசி எண் 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.

    விரைவாகச் செயல்பட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னையில் மழை தொடர்பான புகார்களை 1913, 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207 ஆகிய எண்களிலும் 94454 72075 என்ற கைப்பேசி எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முல்லை பெரியாறு அணை மூலம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்.
    • கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கிணங்க ராமநாத புரம் கிழக்கு மாவட்ட பாட் டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கிம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலா ளர் வெங்கடேசன் வரவேற் றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், ராமநாதபுரம் ஒன் றிய செயலாளர் பொறியா ளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், திருப்புல்லா ணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், இளைஞர் சங்க செய லாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி

    ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்கர் செயலாளர் சந்தோ சம், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் மற்றும் நிர்வாகி கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல் லாமல் கடன் வாங்கிய நபர்களின் வாகனங்களை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வது குண்டர் களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்கள் அதி கமாகி வருகிறது. இவை அனைத்தையும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து கட்டுப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாரதி நகரில் இயங்கி வரும் தனியார் நிறு வனத்தின் முன்பு வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்,

    தினம் தினம் இலங்கை ராணுவத்தினரால் கட லுக்குச் சென்று வீட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறி யாக சென்று வரும் தமிழக மற்றும் குறிப்பாக ராமேசுவ ரம் மீனவர்களின் உயிருக் கும் உடைமைகளுக் கும் மத்திய அரசு பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவா தம் வழங்க வேண்டும் ஒரு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட நிர் வாகத்தின் சார்பாக போராட்டம் நடத்த வேண்டும்,

    அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய அனைத்து நிர்வாகி களுக்கும் செயற்குழு கூட்டம் பாராட்டு, நன்றி, வாழ்த்துக் களை தெரிவிப்பது, விரை வில் சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றி யத்தை உருவாக்க வேண்டும் அதற்காக கடலாடி ஒன்றி யத்தின் சார்பாக விரைவில் ஒரு உண்ணா நிலை போ ராட்டம் நடத்த வேண்டும்,

    முல்லைப் பெரியாற்றிலி ருந்து நேரடியாக ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து கொண்டு வந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழு மையாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா நன்றி கூறினார்.

    • வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
    • ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் அளித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசியதாவது:-

    வள்ளியூர் யூனியனில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி மன்றங்களில் உள்ள சிறிய கிராமங்கள், வார்டு பகுதிகள், ஒன்றிய வார்டு பகுதிகள், மாவட்ட ஊராட்சி வார்டு பகுதிகள் அனைத்திலும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாகத்தான் இந்த ஆலோசனைகூட்டம் நடத்தப்படுகிறது.

    குடிநீர் பிரச்சினை, ஆழ்துளை கிணறுகளின் தேவை, பைப்லைன் தேவை களை விரிவாக தெரிவி த்தனர். உங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றிய அதி காரிகள், பொறி யாளர்கள் ஆய்வு செய்து ஆழ்துளை கிணறுகளின் நீராதாரத்தை கணக்கிட்டு உடனடியாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் நடவடி க்கையை தொடங்குவார்கள்.

    மோட்டார் இல்லாத ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்துவது, பழுதான மோட்டார்களை சரிசெய்து மாற்றுவது, பைப் லைன்களை சரி செய்வது, பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டிகளை பழுபார்ப்பது இது போன்ற அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவைகள் தவிர முன்னீர்பள்ளம் அருகே தாமிரபணி ஆற்றில் இருந்து ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்க ளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடி நிதியை அளித்துள்ளார்.

    இது தவிர திசையன்விளை, மூலக்கரைப்பட்டி, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி, திருக்குறுங்குடி பேரூராட்சிகளுக்கும் மற்றும் களக்காடு நகராட்சிக்கும் சேர்ந்து தனியாக குடிநீர் திட்டம் ரூ.423.13 கோடியில் தனியாக ஒரு திட்டத்திற்கு நிதியை தந்துள்ளார்கள்.

    ஆக மொத்தம் ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை நமது முதல்-அமைச்சர் அளித்துள்ளார். இந்த திட்டங்கள் இன்னும் 18 மாதங்களில் நிறைவே ற்றப்பட்டு உங்கள் வீடு களுக்கு குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வடக்கன் குளம், தனக்கர்குளம், காவல்கிணறு, செட்டிகுளம், லெவஞ்சிபுரம், கருங்குளம், ஆவரைகுளம் உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும், மின்விநியோகம் சீரமைக்க ப்படவேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட தேவைகள் குறித்து பேசினர்.

    கூட்டத்திற்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், பேரூராட்சி உதவி இயக்குனர் அனிதா, பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் கனகராஜ், மின்சார வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் கென்னடி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • சாத்தான்குளம் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் புகாரி முன்னிலை வகித்தார். தாசில்தார் தங்கையா வரவேற்றார்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

    சாத்தான்குளம், ஸ்ரீவை குண்டம் பகுதிகளுக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

    சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி களும் அடுத்த 3 ஆண்டுக ளுக்குள் தன்னிறைவு பெறும் வகையில் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதில் மாவட்டஊராட்சித் தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், சாத்தான் குளம் ஒன்றியக்குழு தலைவி ஜெயபதி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், வடக்கு வட்டார தலைவர் பார்த்த சாரதி, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட காங்கி ரஸ் நிர்வாகிகள், அரசு அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லெனின் நன்றி கூறினார்.  

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணைக்கு போடி கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவை முக்கிய நீர்வழிப்பகுதிகளாக உள்ளன.
    • ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இப்பகுதி மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணைக்கு போடி கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவை முக்கிய நீர்வழிப்பகுதிகளாக உள்ளன.

    வருசநாடு பகுதியில் கூடம்பாறை, அரசரடி, வெள்ளிமலை, புலிக்காட்டு ஒடை, இந்திராநகர், பொம்முராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாைற, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மலைத்தொடர்களில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகளாக பெருகி மூலவைகையாக உருவெடுக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மூலவைகையில் நீர்வரத்து காணப்பட்டது. கோடைகாலம் தொடங்கியது முதல் மழை இல்லாததால் தற்போது மூலவைகையாறு முற்றிலும் வறண்டுவிட்டது. கடமலை, மயிலை ஒன்றியத்தில் ஆத்தங்கரைபட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்ெதாழு, மந்திச்சுனை, முருக்கோடை, நரியூத்து, பாலூத்து உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகள் உள்ளன.

    இதில் மேகமலையை தவிர்த்து 17 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவை மூலவைகை மூலமே கிடைத்து வருகிறது. இதற்காக ஆற்றில் ஏராளமான உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இப்பகுதி மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மூலவைகையில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதில்லை. மழைக்காலங்களில் மட்டுமே நீரோட்டம் இருக்கும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் இங்குள்ள ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும் நிலையில் இந்த மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மலைக்கிராமங்கள் வருடத்தின் பல மாதங்கள் வறட்சியாகவே உள்ளது. எனவே இதனை போக்க தடுப்பணை அமைத்து நீரை தேக்கி நிரந்தர தீர்வு காணவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
    • பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும்

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு முத்தூர் - கொடுமுடி - காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    சமீபத்தில் குடிநீர் பாதையில் ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு தொடர்ந்து 15 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.

    குடிநீருக்கு மாற்று ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் எதுவும் செய்ய–வில்லை எனக்கூறி நூற்றுக்கணக்கான பொது–மக்கள் காலி குடங்களுடன் கடந்த 23-ந் தேதி சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் ஆலமரம் என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், ஊராட்சி பகுதிக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் தெருவிளக்குள் எதுவும் எரிவதில்லை. அதனால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகள் குறித்து பேசி நல்ல முடிவு எடுத்து கொள்ளலாம் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பேச்சு–வார்த்தை நடத்துவதற்காக ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மாவட்ட ஊராட்சிகள் இயக்குநர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ கூறுகையில், பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்றும், அதுவரை மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோல் தெருவிளக்கு பிரச்சனைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

    அதேபோல் மாவட்ட ஊராட்சிகளின் இயக்குநர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் பேசுகையில், குடிநீர் பிரச்சனைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதேபோல் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, குணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கவேல் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மேல்மாம்பட்டு கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    ×