search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Senthil Raj"

    • வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
    • கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுகள்

    தமிழக அரசு மாவட்டக் கலைமன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வயது மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருது கள் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளனர். 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

    விண்ணப்பம்

    எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான்கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதிகள்

    அதன்படி 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைவளர் மணி, 36 முதல் 50 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்குகலைச்சுடர்மணி, 51 முதல் 65 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைநன்மணி, 66 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைமுதுமணி ஆகிய விருது கள் வழங்கப்பட உள்ளன.

    வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை யும் வழங்கப்படும். ஏற்கனவே தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலைமன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது.

    கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

    எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய கலைஞர்கள் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கள அளவில் 304 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 15 இயன்முறை மருத்துவர்கள், 15 நோய் ஆதரவு செவிலியர்கள், 180 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 78 மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள் தொற்றா நோய்க்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் தொற்றா நோய்களுக்கான தொடர் மருத்துவ சேவைகளை வழங்குகின்றனர்.

    அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது நாள் வரை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 6,259 பேரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5,024 பேரும், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் 4,574 பேரும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6,484 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7,062 பேரும், புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5,763, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4,837, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,908, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 5,249, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4,076, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 4,414, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,832 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர் நகராட்சியில் 2,489பேர், கோவில்பட்டி நகராட்சியில் 5,902 பேர், காயல்பட்டிணம் நகராட்சியில் 2,792 பேர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் 14,765 பேர் என 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் பொதுமக்கள் 93 ஆயிரத்து 430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். மேலும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • சாத்தான்குளம் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் புகாரி முன்னிலை வகித்தார். தாசில்தார் தங்கையா வரவேற்றார்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

    சாத்தான்குளம், ஸ்ரீவை குண்டம் பகுதிகளுக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

    சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி களும் அடுத்த 3 ஆண்டுக ளுக்குள் தன்னிறைவு பெறும் வகையில் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதில் மாவட்டஊராட்சித் தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், சாத்தான் குளம் ஒன்றியக்குழு தலைவி ஜெயபதி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், வடக்கு வட்டார தலைவர் பார்த்த சாரதி, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட காங்கி ரஸ் நிர்வாகிகள், அரசு அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லெனின் நன்றி கூறினார்.  

    • தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது.
    • தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில் ராஜ் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு, வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வடை கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போன்டா, பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    வணிகர்களின் இதுபோன்ற பாதுகாப்பற்ற பழக்க வழக்கங்களால் பொது சுகாதார நலனிற்கு கேடு ஏற்படுகிறது.

    எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும்.

    அதன் அடிப்படையில் அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவை பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து அருந்ததி அரசு என்பவர் இயக்கி உள்ள 'கருப்பு மை' என்ற விழிப்புணர்வு குறும்படத்தை கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில் ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது.

    தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×