என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள் குருதி கொடை"

    • தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்த நாளையொட்டி 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர்.
    • முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கும் விழா நிகழ்ச்சி சத்திரக்குடியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயக்கூ டத்தில் போகலூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் தலைமையில் நடந்தது.

    தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தலைவர் பரம்பை பாலா அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரர் மற்றும் சேம னூர் ராஜகோபால் ஆகி யோர் சிறப்பாக செய்திருந்த னர்.

    ×