என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சிறப்பு பிரிவினர் ரோந்து சென்றனர். அப்போது ரெயில்நிலையம் எதிரே காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் மண்டபம் மாரீஸ்வரன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    அவரது ெகாடுத்த தகவல்படி ேபாலீசார் மண்டபம் பிரதீப் (20), சதீஷ்குமார் (30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சதீஷ்குமார் என்பவர் இறால் ஏற்றுமதி நிறுவனம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வங்கி புதிய கிளை தொடக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சண்முகபிரியன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பெடரல் வங்கியின் புதிய கிளையை எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் மண்டல மேலாளர் ஸ்ரீ வருண், டாக்டர் அரவிந்தராஜ், மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் ஒரு லட்ச ரூபாய்க்கான டெபாசிட் தொகையை முதன் முதலில் வழங்கினார். வள்ளல் பாரி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வங்கியின் மூலமாக தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரம் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.

    மேலும் ராமநாதபுரம் குமரன் நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து வங்கியில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சண்முகபிரியன் செய்திருந்தார்.

    • மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது.
    • மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மற்றும் தொண்டி அஹ்லுஸ் ஸுன்னா மகளிர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய விடுதலைப் போரில் மறைக்கப்பட்ட முகங்கள் என்ற தலைப்பில் பேசினார். சச்சார் கமிட்டி அறிக்கை குறித்து பேராசிரியர் அருணன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உமரி, த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தொண்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.
    • ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

    தொண்டி

    தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பள்ளி சேர்க்கை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மேலும் மழலையர் பள்ளி துவக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சம் பழம், பென்சில் கொடுத்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் வரவேற்றனர். பின்னர் ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

    • இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
    • மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயர் பட்டணம் பகுதியில் மத்திய அரசின், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவா்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பச்சை வரி இறால்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் அலுவலர்கள் 16லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று மன்னாா் வளைகுடா கடலில் விட்டனர்.

    இதுவரை சுமார் 5.80 கோடி பச்சை வரி இறால்கள் கடலில் விடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞாடினி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

    • மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
    • ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 2-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

    மனுக்களை திரும்ப பெற 2-ந்தேதி கடைசி நாள். 3-ந்தேதி இரவு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 14-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவலை தேர்தல் ஆணையரும், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான முருகேசன், உதவி தேர்தல் ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பழந்தின்னி வவ்வால்கள் அழிந்து வருகிறது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மரங்கள் உள்ள இடங்களில் ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. இவற்றை சிலர் மருந்திற்காக வேட்டையாடுவதாக புகார் எழுந்துள்ளது. கூட்டமாக வாழும் மரங்களில் சிலர் கற்களை வீசி விரட்டுகின்றனர். எனவே குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேணடும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால்கள் கிராமப்பகுதி களில் காணப்படுகின்றன. வவ்வால்களால் யாருக்கும் பெரிய அளவில் தொல்லை கிடையாது. இரவில் மட்டுமே தங்களுக்குரிய இரையை தேடி செல்கின்றன. பழந்தின்னி வவ்வால்கள் இரவு நேரங்களில் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும். பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். பூக்களில் உள்ள தேனையும் குடிக்கும், என்கின்றனர்.

    வவ்வால்கள் பெரும்பாலும் பழைய கட்டிடங்கள், அடர்ந்த மரங்களில் வாழ்கின்றன. மருத்துவ குணமிக்கதாக கருதி சிலர் வவ்வால்களை வேட்டையாடு கின்றனர். இதன் விளைவாக ஆண்டு தோறும் பழந்தின்னி வவ்வால்க ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

    இவற்றை காண்பதே அரிதாகி வரும் நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பல ஆயிரம் பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் கல்வீசி தாக்குவது உள்ளிட்ட தொந்தரவுகளை செய்வதால் அச்சத்தில் மின் கம்பிகளில் அடிபட்டும் இறக்கின்றன.

    எனவே தற்காலத்தில் குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனிதிறன் போட்டிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறை, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த, படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், தொழிற்துறை பணியாளர்கள், தகுதி வாய்ந்த தனிநபர்கள் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் மாணவ, மாண விகள், இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் 2024-ம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவி லான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் naanmudhalvan.tn.gov.in>tnskills> என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக் கலாம். மேலும் விவரங்களை tnskills; naanmudhalvan.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.
    • நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.

    ஆனால் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22-ந்தேதி புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நெடுந் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை வலியுறுத்தி மண்டபம் பகுதியில் உள்ள கோவில்வாடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதன் காரணமாக மண்டபம் இறங்குபிடி தளத்தில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

    கடந்த 22-ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் பின்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவ டிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்பு களுடன் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் புறவழிச்சாலை அமைக்க கமுதி வருவாய் கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலம் வழங்கியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து இழப்பீட்டுத் தொகை பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமை யில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 12 பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். 12 பேருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், தலைமை நில அளவையர் நாகவள்ளி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் பா.ம.க. கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வருகை தந்துள்ளனர். அந்தக் குழுவில் உள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடம் ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கீம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.

    ராமநாதபுரம் நகர் வெளியே புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    ×