கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சிறப்பு பிரிவினர் ரோந்து சென்றனர். அப்போது ரெயில்நிலையம் எதிரே காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் மண்டபம் மாரீஸ்வரன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

அவரது ெகாடுத்த தகவல்படி ேபாலீசார் மண்டபம் பிரதீப் (20), சதீஷ்குமார் (30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சதீஷ்குமார் என்பவர் இறால் ஏற்றுமதி நிறுவனம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com