என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கறம்பக்குடியில் தி.மு.க. தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
    • தலைமை கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தார்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் மற்றும் நகரக் கழக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார். கறம்பக்குடி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, நகர இளைஞரணி அமைப்பாளர் ராசி பரூக் ஆகியோர் கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா குழு தலைவருமான மணமடை முத்துகிருஷ்ணன், கறம்பக்குடி பேரூராட்சி தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தார். இதில் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது உள்ளிட்ட ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர். தெருமுனைப் பிரச்சாரம் கறம்பக்குடி சீனி கடை முக்கம், கோவில் கடைவீதி, ரகுநாதபுரம் புது விடுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    • ஆலங்குடி அருகே சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
    • பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைத்திட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்குறிச்சி, சூரக்காடு, கோட்டைக்காடு, கருப்பகோன்தெரு, வடதெரு, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றில் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா நேரில் சென்று சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைத்திட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இதில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பஞ்சாலன், அரசு ஒப்பந்தக்காரர் பரிமளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘ஸ்மார்ட் வாட்ச்'கள் ‘போர்ட்டபிள் மீடியா பிளேயர்’களாக செயல்படுகின்றன.
    • எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன.

    புதுக்கோட்டை:

    ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின்போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:-

    தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன.

    எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிறபோது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    அறந்தாங்கி,

    தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர செயலாளர் ராஜேந்திரன், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன், உதவிப் பொறியாளர் சுபாஷினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    • எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
    • சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் ராமசாமி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 டாக்டர்களில் ஒருவர் மகப்பேறு விடுதியில் இருக்கிறார். மற்ற டாக்டர்களை உடனடியாக பணியில் சேர அறிவுறுத்துவது, மாற்றுப் பணிகளில் கூடுதல் டாக்டர்களை நியமிப்பது, வருகிற 23-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க செய்வது, மேலும் 2 டாக்டர்களை நியமிக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்புவது, டயாலிசிஸ் எக்ஸ்ரே போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுப்பது, வாரம் ஒரு முறை மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராமு உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெருவதாக எம்.எல்.ஏ. சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

    • மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் காரையூர் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையம் இலுப்பூர் சப்-டிவிசன்களுக்கு உட்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி பெண்கள் தங்களது பிரச்சினை குறித்து மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டுமானால் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் நிலை இருப்பாக கூறிவந்தனர். எனவே இந்த இலுப்பூரிலேயே அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு, நகர செயலாளர் மணிகன்டன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது
    • மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் சாலை, சிட்கோ எதிரில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சா லைத்துறை கோட்டத்தி ற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்



    • சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்
    • இப்பகுதி விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் இப்பகுதியில் உள்ள20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கு மேலான வாழை, 200 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான சோழம், இதே போல் நெல், எள் உள்ளிட்ட பயிர்களும் காற்றில் சாய்ந்து கடுமையான பாதிப்படைந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.

    இந்தப் பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் வேளாண் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணியை தொடங்கவும் அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை, சோளம், நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்று தரப்படும். வாழை விவசாயிகள் வருங்காலத்தில் முறையான காப்பீடு செய்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கி வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
    • கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். தி.மு.க. பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அத்துடன் பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருடன் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்.

    அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியை கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

    இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது. போலீசாரை தாக்க முயன்றும், அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வந்த மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ்காரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பேருந்துகள் வந்து செல்லாததால் ஆலங்குடி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது
    • பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டது வீண்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆலங்குடி பேருந்து நிலையத்தில் கடைகள், பயணிகள் இருக்கை வசதி, தண்ணீர் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. ஆனால் அதிகமான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. கறம்பக்குடி, வெட்டன் விடுதி, மழையூர் போன்ற பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக பேருந்து நிலையத்திற்கு செல்வதில்லை.

    அதே போல் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, பேராவூரணி, கொத்தமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பல பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் பேருந்தில் ஏற முடியாது என்று பயணிகள் அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம் பஸ்ஸ்டாப் என கடும் வெயிலில் காத்திருந்து , அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

    இவ்வாறு பயணிகள் வேறு பகுதிகளுக்கு சென்று பேருந்துக்காக காத்திருப்பதால், ஆலங்குடி பேருந்து நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களை அழைத்து இரவு பகல் எந்த நேரமும் அனைத்து பேருந்துகளும் ஆலங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலங்குடியில் பகுதியில் 5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்
    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஆலங்குடி:

    ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வந்தது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென கடும் சூறாவளி காற்று வீசியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து திடீரென மழை பெய்தது. சூறாவளி காற்றால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு 7 மணி அளவில் ஆலங்குடி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்தில் மழை நின்று விட்ட நிலையில் 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதனை தொடர்ந்து சுமார் 12 மணி அளவில் மின்சாரம் மீண்டும் வந்தது.

    • புதுக்கோட்டையில் 45 நாட்கள் பசுமை பூமிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
    • இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை,

    இளையோர் அமைப்பை சார்ந்த இளைஞர்கள், சூழலியல்உரிமைக்கான இளையோர் அமைப்பு, புதுக்கோட்டை ரோஸ் நிறுவனம், டி.டி.எச், ஆர்.எல்.ஹச்.பி சார்பில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு 45 நாட்கள் பசுமை பூமிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மரம் நடுதல், விதைப்பந்து தூவுதல், நீராதாரங்களில் உள்ள பிளாஸ்டி கழிவுகளை அப்புறப்படுத்துதல், ஓவிய ங்கள் வரைதல், துணி பைகள் வழங்கதல், விழிப்பு ணர்வு பிரச்சாரம், கையெ ழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தன.

    குண்ணன்டா ர்கோவில், அன்னவாசல் போன்ற ஒன்றியங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களில் 700க்கும் மேற்பட்ட இளையோர் மற்றும் குழந்தைகள் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஓனாங்கு டியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அப்போது ஊராட்சி முழுவதும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையை அடுத்த அரிமளத்தில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார். ரோஸ் நிறுவன இயக்குனர் ஆதப்பன், அரிமளம் நர்சரி உழவர் உற்பத்தியாளர் நிறுவன வேலாயுதம், ரோஸ் பணியாளர்அகிலா விஜயா, சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய அலுவலர் விமலா, சூழலியல்உ ரிமைக்கான இளையோர் அமைப்பின் சத்யா, சங்கீதா, பத்மினி உள்ளிட்ட ஏராளமானவ ர்கள் கலந்து கொண்டனர்.

    ×