என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கூட்டுறவுத்துறை மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது
    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடனுதவி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி தலைமையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அறந்தாங்கி கிளையில் உள்ள காவேரி மகளிர் சுய உதவி குழுவிற்கு உயர்ந்தபட்சமாக ரூ.20 லட்சம் குழுக்கடன் வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ சுய உதவி குழு கடனாக தேக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர்கள், வங்கியின் துணை பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர், வங்கியின் பொது மேலாளர் மற்றும் வங்கியின் உதவி ெபாது மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு மரக்கன்று நடும விழா நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை - திருமயம் சாலையில், வெள்ளாற்றின் அருகில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட 15,000 மரக்க ன்றுகள் நெடுஞ்சாலைத்து றையின் மூலம் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதனடிப்படையில் திருச்சி - ராமநாதபுரம் சாலையில், புதுக்கோட்டையிலிருந்து திருமயம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் அருகில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படவுள்ள சுமார் 75 மரக்கன்றுகளுக்கு இணையாக 750 மரக்கன்றுகள் நடும்விதமாக, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவார் பொன். ராமலிங்கம், உதவி கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரபூபதி, உதவிப் பொறியாளர்கள் கார்த்திகேயன், செந்தில்குமரன், ரவீந்திரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

    • புதுக்கோட்டை மாவட்டம் மாதிரி பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது
    • மாணவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக் கூடத்தில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 11 -ம் வகுப்பு சேர்க்கைக்கு தேர்வாகியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அவர் பேசும் போது, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிக ளுக்கு பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்கால கல்வி சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 2021-2022-ம் கல்வியாண்டில் 10 மாவட்டங்களில் 10 அரசு மாதிரிப்பள்ளிகள் அரசால் ஏற்படுத்தப்பட்டது. 2022-2023 -ம் கல்வியாண்டில் 2-ம் கட்டமாக 16 மாதிரிப்பள்ளிகள் ஏற்படு த்தப்ப ட்டது. இப்பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2023-2024-ம் கல்விரண்டில் 13 மாவட்டங்களில் 13 மாதிரிப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு 9 முதல் 11 -ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.அரசு மாதிரிப்ப ள்ளிகளில் பயிலும் மாணவ ர்களுக்கு உண்டு உறைவிட முறையில் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது.அரசு மாதிரிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வாய்ப்பை பெறுகின்றனர் என மாவட்ட வருவாய் அலுவலா; மா.செல்வி பேசினார்.இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆர்.முருகேசன், ரமேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜு, உதவித் திட்ட அலுவலர்கள் சுதந்திரன், தங்கமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், உதவி இயக்குநர் (தேர்வுகள்) தமிழரசன், பள்ளித் துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, இளையராஜா, அரசு மாதிரி ப்பள்ளி தலைமையாசிரியர் பெ.பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டனர்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மைலன்கோன்படி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மினி. விவசாயியான இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சம்பவத்தன்று ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது அருகில் இருந்த கிணற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை கண்ட பத்மினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கறம்பக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரி மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

    • பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
    • இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர்.

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நாள்தோரும் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தில் உள்ள கிள்ளிடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஒரே நேரத்தில் கிராமமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்க தொடங்கினர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.

    • புதுக்ேகாட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • விழாவில் அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை - திருமயம் சாலையில், வெள்ளாற்றின் அருகில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட 15,000 மரக்க ன்றுகள் நெடுஞ்சாலைத்து றையின் மூலம் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருச்சி - ராமநாதபுரம் சாலையில், புதுக்கோட்டையிலிருந்து திருமயம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் அருகில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படவுள்ள சுமார் 75 மரக்கன்றுகளுக்கு இணையாக 750 மரக்கன்றுகள் நடும்விதமாக, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவார் பொன். ராமலிங்கம், உதவி கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரபூபதி, உதவிப் பொறியாளர்கள் கார்த்திகேயன், செந்தில்குமரன், ரவீந்திரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

    • 61- நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவால் உற்சாகத்துடன் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
    • வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அறந்தாங்கி,


    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து 520க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களை பொறுத்தவரையில் வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதும், வெள்ளிக்கிழமையில் விடுமுறையில் இருப்பதும் வழக்கம்.இந்நிலையில் கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக ஏப்ரல் மாதத்திலிருந்து ஜீன் மாதம் வரை தமிழக மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தை அனுசரித்து வருகின்றனர்.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி தடைக்காலத்திற்கு முன்பே 13ம் தேதி வெள்ளிக்கிழமையிலிருந்தே தடைக்காலத்தை அனுசரிக்க தொடங்கினர். அது முதல் கடந்த 2 மாதகாலமாக மீனவர்கள் தங்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் விசைப்படகுகளை பழுது பார்த்து தயார் நிலையில் வைத்தனர். இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் நேற்றோடு முடிவடைந்ததையடுத்து இன்று மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்
    • ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவ லகத்தில், 1432 ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராம கணக்குகள் ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோன்று, நடப்பு பசலி (1432) வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளுர் உள்வட்ட கிராமக்கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தி ல் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொடும்பாளுர் வருவாய் கிராம சரகத்திற்கு ட்பட்ட கிராமங்களான ராஜாளிபட்டி, நம்பம்பட்டி, மீனவலி, அகரப்பட்டி, பொய்யாமணி, தேராவூர், இராஜகிரி, கொடும்பா ர், தென்னம்பாடி, கசவனூர், தேங்காய் தின்னிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

    மேலும் நீர்பழனி உள்வட்டத்திற்கும், வரும் 20-ந் தேதி அன்று விராலிமலை உள்வட்ட த்திற்கும் வருவாய்த்தீர் வாயம் நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் முருகப்பன், திருச்சி மண்டல துணை இயக்குநர் ராஜாமணி, கோட்ட ஆய்வாளர் சண்முகராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காலை உணவுத்திட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக, கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் காலை உணவுத்திட்டத்தினை பல கட்டங்களாக நகராட்சி, மாநகராட்சி, ஊரக பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் செயல்படுத்தும் வகையில், தற்பொழுது கடந்த நிதிநிலை அறிக்கையின்போது அனைத்து பள்ளிகளுக்கும் 'முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்" விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

    அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்" செயல்படுத்திட ஏதுவாக தொடர்புடைய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலர்களுக்கு முதல் கண்காணிப்புக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி நடத்தப்பட்டது. மேலும், கடந்த 12-ந் தேதி அன்று மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு மெர்சி ரம்யா, தலைமையில் மே 2023 மாதத்திற்கான கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் எம்.பி.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்எல்ஏக்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும்; அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் எம்பி செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • விராலிமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்
    • சாதனை மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் அறிவுநிதி (வயது 17). இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் தங்கமணி ஆகிய இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவார்கள். மிகவும் ஏழ்மை நிலையிலும் நன்கு படித்து நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்று முடிவெடுத்து நீட் தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்ததன் பயனாக நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதுகுறித்து அறிவுநிதி கூறியதாவது:- எனது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தனர். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வந்த நிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் நீட் தேர்வுக்கு படித்தேன். இருப்பினும் இன்னும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது என உணர்ந்த நான் சமூக வலைதளத்தில் தேடும்போது உயிரியல் பாடத்திற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்தினால் இது போன்ற வெற்றிகளும் கிடைக்கும் என்பதை தற்போது உணர்கிறேன்.

    இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு என அரசாங்கமே இதுபோன்ற செயலியை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    • 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் விராலிமலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது.

    விராலிமலை,

    விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் தனிப்பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அதில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 75 ஆக இருந்தது. அதனை வருகிற கல்வி ஆண்டில் இது 100 சதவீதமாக உயர வேண்டும் என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், தனி பாடப்பிரிவுகளில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாய் இருந்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் மாரிக்கண்ணன், சமூக ஆர்வலரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான பூபாலன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×