என் மலர்
நீங்கள் தேடியது "Elkai race"
- அறந்தாங்கி அருகே நடைபெற்ற எல்கை பந்தயத்தில் மாடுகள், குதிரைகள் சீறிபாய்ந்தன
- சிறந்த சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
அறந்தாங்கி:
அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூமாரியம்மன் கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.26-வது ஆண்டாக நடைபெற்ற இந்த பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.4 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 6 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், தேன்சிட்டு மாடு பிரிவில் 52 ஜோடிமாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 18 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை ரெத்தினக்கோட்டை கிராமத்தார்கள், இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- குளித்தலை அருகே மாடு, குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது
- பந்தயத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை முதல் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் மையிலாடி பகுதியில் ரேக்ளா சோக் காரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாடு மற்றும் குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளிலும், இரட்டை மாடு, பெரிய ஒத்தை மாடு, சிறிய ஒத்தை மாடு, தேன் சிட்டு மாடு என 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் இரட்டை மாடு வண்டி பந்தயத்தில் சென்ற வண்டியில் ஒரு பகுதி சக்கரம் முறிந்து விழுந்த நிலையிலும் தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிய மாட்டு வண்டியும் அதனை ஓட்டிச் சென்ற சாரதியின் முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த சம்பவத்தை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மற்றும் மூன்று பரிசு என 3 பரிசுகள் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது.
போட்டியில் கரூர், திருச்சி, தஞ்சை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. போட்டியை காண குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான ரேக்ளா ஷோக்தாரிகள், ஆர்வலர்கள் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். போட்டியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சோதனைச்சாவடி அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. 29-வது ஆண்டாக நடைபெறும் இப்பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 21 ஜோடி மாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 9 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு வீதி பொதுமக்கள், இளைஞர்கள்செய்திருந்தனர்.
- திருவரங்குளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
- மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வல்லத்திராகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். பந்தயத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்பேத்தி, அரிமளம், திருமயம், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் எல்லையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர்.
- மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
- இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை :
திருவரங்குளம் அருகே பூவரசகுடி செந்தலை அய்யனார் கருப்பர் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பூஞ்சிட்டு, பெரிய மாடு, ஒத்த மாடு என போட்டிகள் நடைபெற்றது. பந்தயத்தில் அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
- அறந்தாங்கி மணமேல்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது
- வீரன் அழகு முத்துகோன் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்றது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மணமேல்குடியில் ஆண்டுதோறும் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகளும், நடு மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். பந்தயம் நடைபெற்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






