என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலை அருகே மாடு, குதிரைகளுக்கான எல்கை பந்தயம்
    X

    குளித்தலை அருகே மாடு, குதிரைகளுக்கான எல்கை பந்தயம்

    • குளித்தலை அருகே மாடு, குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது
    • பந்தயத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை முதல் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் மையிலாடி பகுதியில் ரேக்ளா சோக் காரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாடு மற்றும் குதிரைகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளிலும், இரட்டை மாடு, பெரிய ஒத்தை மாடு, சிறிய ஒத்தை மாடு, தேன் சிட்டு மாடு என 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் இரட்டை மாடு வண்டி பந்தயத்தில் சென்ற வண்டியில் ஒரு பகுதி சக்கரம் முறிந்து விழுந்த நிலையிலும் தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிய மாட்டு வண்டியும் அதனை ஓட்டிச் சென்ற சாரதியின் முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த சம்பவத்தை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மற்றும் மூன்று பரிசு என 3 பரிசுகள் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது.

    போட்டியில் கரூர், திருச்சி, தஞ்சை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. போட்டியை காண குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான ரேக்ளா ஷோக்தாரிகள், ஆர்வலர்கள் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். போட்டியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×