என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி
- கறம்பக்குடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது
- பொதுமக்களிடமிருந்து 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் 1432 ம் பசலி ஆண்டுக்கான தீர்வாய கணக்கு ஜமாபந்தி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலராக புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) மாரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கோட்ட கலால் அலுவலர் ஜெயபாரதி, கலால் அலுவலக மேலாளர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் மலையூர் சரகத்திற்கு உட்பட்ட வட்டங்களுக்கும், இரண்டாம் நாள் கறம்பக்குடி சரகத்திற்கு உட்பட்ட வட்டங்களுக்கும் நடைபெற்றது.
அப்போது பொது மக்களிடமிருந்து 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜமாபந்தி அலுவலர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஜமாபந்தி நிறைவு நாளான குடிகள் மாநாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 72 பேருக்கு பட்டாக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 12 பேருக்கு இ பட்டா மற்றும் 2 பேருக்கு புலப்பட நகல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சிய ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ரவிக்குமார், துணை வட்டாட்சியர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






