என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் வருகிற 24-ந் தேதி சிறப்பு மருத்துவ முகாம்
- புதுக்கோட்டையில் வருகிற 24-ந் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது
- இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 24-ந் தேதி புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.
இம்முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ பிரிவுகளும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரி க்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் கலந்து கொள்ள திட்டமிடபட்டுள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் வழங்கப்படவுள்ளது. எனவே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






