என் மலர்
புதுக்கோட்டை
விரைவில் தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #Vijayabaskar #AirAmbulance
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தொற்று நோய் பாதிக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதேபோன்று கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் தொற்று நோய் பாதிக்காமல் இருப்பதற்கு கேரள அரசிற்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில்முதல் தவணையாக ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்களும் 2-வது தவணையாக ரூ.1.20 கோடி மதிப்பில் 1.5 லட்சம் குளோரின் மாத்திரைகள், பாம்பு கடி மருந்துகள், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இன்சுலின் மருந்துகள் 100 டன் கிரிமி நாசினிகள் அனுப்பப்பட்டுள்ளது.
3-வது தவணையாக தற்போது ரூ.1.5 கோடி மதிப்பில் 500 டன் பிளிச்சிங் பவுடர் உள்ளிட்ட கிரிமி நாசினிகள் அனுப்பப்பட உள்ளது.
மேலும் தமிழகத்திலிருந்து 10 பூச்சியியல் வல்லுனர்கள் கேரளாவிற்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இதே போன்று தமிழகத்தின் எல்லையோர கேரள பகுதிகளில் தமிழக அரசு சார்பில் 40 மருத்துவ குழுக்கள், 322 மருத்துவ முகாம்கள் அமைத்து இதுவரை 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

தமிழகத்தில் விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு 75 இடங்களில் விபத்து காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள தாய்ப்பால் வங்கி திட்டத்தை ஆஸ்திரேலியா நாட்டினர் வியந்து பாராட்டினர். மேலும் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் தங்களுடைய மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் புளூவேல் மற்றும் மோமோ சாலன்ஜ் ஆகிய விளையாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் மன மருத்துவ கொள்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு மற்றும் தாலுகா மருத்துவமனை ஆகியவற்றில் மனநல சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. அதற்கான புதிய மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #AirAmbulance
புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தொற்று நோய் பாதிக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதேபோன்று கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் தொற்று நோய் பாதிக்காமல் இருப்பதற்கு கேரள அரசிற்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில்முதல் தவணையாக ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்களும் 2-வது தவணையாக ரூ.1.20 கோடி மதிப்பில் 1.5 லட்சம் குளோரின் மாத்திரைகள், பாம்பு கடி மருந்துகள், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இன்சுலின் மருந்துகள் 100 டன் கிரிமி நாசினிகள் அனுப்பப்பட்டுள்ளது.
3-வது தவணையாக தற்போது ரூ.1.5 கோடி மதிப்பில் 500 டன் பிளிச்சிங் பவுடர் உள்ளிட்ட கிரிமி நாசினிகள் அனுப்பப்பட உள்ளது.
மேலும் தமிழகத்திலிருந்து 10 பூச்சியியல் வல்லுனர்கள் கேரளாவிற்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இதே போன்று தமிழகத்தின் எல்லையோர கேரள பகுதிகளில் தமிழக அரசு சார்பில் 40 மருத்துவ குழுக்கள், 322 மருத்துவ முகாம்கள் அமைத்து இதுவரை 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று அந்த அரசுடன் விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு, சிகிச்சை அளிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டிலிருந்து மருத்துவர்கள் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கும் நம்முடைய மருத்துவர்கள் அங்கே சென்று மருத்துவ முறை குறித்து கற்றுக்கொள்வதற்கும் உதவும்.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள தாய்ப்பால் வங்கி திட்டத்தை ஆஸ்திரேலியா நாட்டினர் வியந்து பாராட்டினர். மேலும் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் தங்களுடைய மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் புளூவேல் மற்றும் மோமோ சாலன்ஜ் ஆகிய விளையாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் மன மருத்துவ கொள்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு மற்றும் தாலுகா மருத்துவமனை ஆகியவற்றில் மனநல சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. அதற்கான புதிய மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #AirAmbulance
தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரை விலக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், புதுக்கோட்டை டி.வி.எஸ். ரவுண்டானா அருகே தகராறு நடப்பதாக கூறினார். உடனே முத்துகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு புதுக்கோட்டை கலிப்நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரிடம் முத்துகுமார் விசாரணை நடத்தினார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த புகாரி மற்றும் யூசப் ஆகியோர் எப்படி கண்ணனிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறி முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரத்தில் போலீஸ்காரர் முத்துகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்துகுமார் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரவாசு தேவன் வழக்குபதிவு செய்து புகாரி, யூசப்சை கைது செய்தனர்.
புதுகோட்டை மாவட்டம் கடைமடைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடிக்கு கல்லணை கால்வாயில் இருந்து விநாடிக்கு 300 கனஆடி வீதம் முறை வைக்காமல் காவிரி நீர் திறந்து விட கோரி நாகுடியில் உள்ள கல்லணை கால்வாய் பிரிவு அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில் அறந்தாங்கி எம்.எல்.ஏ.வும் தினகரன் ஆதரவாளருமான ரத்தினசபாபதி மற்றும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் கூட புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக கல்லணை கால்வாய் பிரிவு அலுவலர்கள் அளித்த வாக்குறுதியின் படியும் தண்ணீர் வராததால், கலெக்டர் கணேசை சந்தித்து முறையிட்டேன். அவர் கூறியும் தண்ணீர் வராததால் விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வரும் என உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை வந்து கொண்டிருந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. தண்ணீரை திறந்துவிடாமல் கீழ்நிலை அலுவலர்களை கொண்டு அரசு சமாதானம் செய்யும் முயற்சியை ஏற்கமாட்டோம். தமிழக அரசை ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை. போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.
விவசாயிகளின் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசுகின்றனர். #tamilnews

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்த பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், அவர்கள் பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 23-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இலங்கை கடற்படையினரால் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்து பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் கடற்படையினர் பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்களை பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி ஒன்றிய அவை தலைவர் குஞ்சப்பா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தீர்மானத்தை வாசித்தார். உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்து புகழஞ்சலி வாசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, சவுந்தர்ராஜன், இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் அர்சுணன், மதியழகன், நகரச் செயலாளர் ராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் கலையரசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதையும், தலைவருக்கு புகழஞ்சலியும் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் பேசியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கியாளர்களுக்கான நிதி பங்களிப்பு மற்றும் நிதிசார் கல்வி குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
மகளிர் திட்டத்தின் மூலம் சுயஉதவிக் குழுவினருக்கு முதல் வங்கி இணைப்பு, நேரடி கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கப்படும் கடன்களை எளிதாக வழங்குவது குறித்து வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 9 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கப் பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் முறைகள், செயல்படுத்தும் திட்டங்கள், பயனாளிகள் தேர்வு, கடன் தவணையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளது. மேலும் இதே போன்று நான்கு கட்டங்களாக பிற பயிற்சி வகுப்புகளும் வங்கியாளர்களுக்கு நடைபெறவுள்ளது.
எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள வங்கியாளர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விராலிமலை:
விராலிமலை ஆற்றுப்படுகைகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ராசநாயக்கன்பட்டியில் உள்ள டோல் பிளாசா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில், லாரியின் உரிமையாளரான கன்னியாகுமரி மாவட்டம் மருதகாட்டுவில்லையை சேர்ந்த ராஜசெல்வன்(வயது 29) மற்றும் லாரி டிரைவர் மார்த்தாண்டத்தை சேர்ந்த மணியன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல விராலிமலை தாசில்தார் பார்த்திபன், விராலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் பாரதிராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் குமரேசன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கந்தர்வக்கோட்டையை கலக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மங்களா கோவில், விராலிப்பட்டி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். போலீசிலும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம் ஆகியோர் உத்தரவின் பேரில் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கந்தர்வக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர்.
அன்னவாசல் அருகே தனியார் நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே ஆரீயூரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகைகள் மற்றும் தூசிகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு உருவாகிறது எனவும், சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அந்த நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த தனியார் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அந்த நிறுவன அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விராலிமலை அருகே நம்பம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் நம்பம்பட்டி, கவரப்பட்டி மற்றும் கோட்டைக்காரன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ளவர்களுக்கு இதுவரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீரை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக போதிய அளவு குடிநீர் வராததால் பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி பொதுமக்கள் நேற்று காலை விராலிமலை-மணப்பாறை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டி சின்னம்மாள்(60) என்பவர் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பதாக கூறி சாலைமறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் கோட்டைக்காரன்பட்டி, கவரப்பட்டி ஆகிய ஊர்களிலும் பொதுமக்கள் குடிதண்ணீர் கேட்டு கோட்டைக்காரன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக கூறியதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலைமறியலால் அப்பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விராலிமலை ஒன்றியம் நம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சின்னம்மாளுக்குஅருகில் இருப்பவர்கள் உதவியதை படத்தில் காணலாம்.