என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-
10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. மணிக்கணக்கில், நாள் கணக்கில் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சரியாக வேலை வழங்குவதில்லை. முறையாக கூலி வழங்குவதும் இல்லை.
தமிழகம் சுயமரியாதையை இழந்து நிற்கிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை வரவேற்றுள்ள கட்சி அ.தி.மு.க., முதுகெலும்பு இல்லாத முதல்-அமைச்சர் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. பச்சை துண்டு போட்ட முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கின்றார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் டெல்லியில் இருந்து தமிழகத்தின் ஆட்சியை இயக்குகின்றனர். தமிழகத்தின் அடையாளங்கள், உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துள்ள இத்தகைய பயனற்ற ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஒரு விடியலை தமிழகத்தில் ஏற்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன், ஒன்றியச் செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகரச்செயலாளர் அழகப்பன், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணைச்செயலாளர் சின்னையா, பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (வயது 65), தொழிலாளி. அதே பகுதியில் நெல்லை மாவட்டம் இடையான் குடியைச் சேர்ந்த சாமுவேல், அவரது தங்கை ரபேக்காள் என்பவருடன் தங்கியிருந்து கூலிவேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் வேலாயுத பெருமாள், ரபேக்காளிடம் தகராறு செய்யவே, அதனை சாமுவேல் தட்டிக்கேட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வேலாயுத பெருமாள், சாமுவேலை கத்தியால் குத்திக்கொன்றார். இந்த சம்பவம் கடந்த 31.5.1990 அன்று நடைபெற்றது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக வேலாயுதபெருமாளை கோட்டைப்பட்டினம் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த வேலாயுதபெருமாள் அதன்பிறகு மாயமாகி விட்டார். அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இருப்பினும் வேலாயுத பெருமாள் கடந்த 30 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், வேலாயுதபெருமாள் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டைப்பட்டினம் போலீசார் நம்பியூர் சென்று வேலாயுத பெருமாளை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து இன்று நீதிபதி அப்துல் மாலிக் தீர்ப்பு வழங்கினார். இதில் வேலாயுத பெருமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.1,000 அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து வேலாயுதபெருமாளை போலீசார் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 345 பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் அடுத்து உடல்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெற எழுத்து தேர்வு எழுதியவர்கள் தயாராகி வருகின்றனர். புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வாலிபர்கள், இளம்பெண்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், பந்து எறிதல் உள்ளிட்ட பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, அவர்களுக்குள் போட்டியும் நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பகலில் கொளுத்தும் வெயிலில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றனர். இதில் இளம்பெண்கள், வாலிபர்கள் நீளம் தாண்டினர். குறிப்பிட்ட அளவு வரை நீளம் தாண்ட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியாளர்கள் முத்துராமலிங்கம், கந்தசாமி உள்ளிட்டோர் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். போலீஸ் தேர்வு எழுதிய புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை மதனிகாவும் (வயது21) இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறுகையில், 'நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளேன். கடந்த முறை நடந்த போலீஸ் தேர்வில் பங்கேற்றபோது எழுத்து தேர்வில் தோல்வியடைந்தேன். 2-வதாக தற்போது போலீஸ் தேர்வு எழுதி உள்ளேன். இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற பயிற்சி எடுக்கிறேன்' என்றார்.
எழுத்து தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன்பின் உடற்தகுதி தேர்வு நடைபெறும் நாள் அறிவிக்கப்படும். புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சி பெறும் வாலிபர்கள், இளம்பெண்கள் அனைவரும் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதில் பெரும்பாலானோர் ஷு அணியாமல் வெறும் காலில் பயிற்சி பெறுகின்றனர். போலீசாக வேண்டும் என்ற லட்சியத்தில் அவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் திருமணமான ஒரு சில பெண்களும் உள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான் கோட்டை பாண்டிக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்ததுடன், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வந்தார். அதனை சேமித்து வைப்பதற்காக கடை அருகே குடோன் அமைத்திருந்தார்.
முருகேசன் கடையையொட்டி குளமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். கடை அருகில் பட்டாசு விற்பனையும் செய்து வந்தார். இதற்காக கடையையொட்டி அமைந்துள்ள குடோனில் பட் டாசுகளை குவித்து வைத்திருந்தார். மளிகை, பேன்சி ஸ்டோர்கள் மற்றும் மளிகை, பட்டாசுகளை வைப்பதற்கான குடோன்கள் ஒரே கட்டிடத்தில் அருகருகே செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென கடைகள் மற்றும் குடோன்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. சிறிது நேரத்தில் 4 கடைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடு பட்டனர். 4 கடைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது டன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீயை அணைப் பதில் சிரமம் ஏற்பட்டது.
உடனே ஆவுடையார்கோவில், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டன. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 4 கடை களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பாதுகாப்பு கருதி கடைகள், குடோன்கள் செயல்பட்டு வந்த கட்டிடம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் தீ கட்டுக்குள் வந்தது டன், தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த தீ விபத்தில் மளிகை கடை, குடோனில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள் மற்றும் பேன்சி ஸ்டோரில் இருந்த பொருட்கள், பட்டாசுகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்தில் சேதமான பொருட் களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை அடுத்த ஒடவிமடம் அருகே நேற்று இரவு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, அங்கு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கிடந்தது. காரில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காரில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் காரில் பயணம் செய்த 8 பேர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து முதல்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்றும், அவர்கள் நாகை மாவட்டம், கோடியகரை பகுதிக்கு மீன்பிடி வலை வாங்க சென்று விட்டு ஊர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே கோட்டைப்பட்டினம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியாக 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், பலியானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமை சேர்ந்த கிளிட்டஸ் (வயது 39), தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரோக்கியம் (41), மண்டபம் முகாமை சேர்ந்த சேசு பிள்ளை (19) ஆகியோர் என்பது ெதரியவந்தது. மேலும் படுகாயமடைந்தவர்கள் யார்? அவர்களது முகவரி என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.






