என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  அறந்தாங்கி அருகே இன்று அதிகாலை மளிகை-பட்டாசு குடோனில் பயங்கர தீ: ரூ.1 கோடி பொருட்கள் எரிந்து சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அறந்தாங்கி அருகே இன்று அதிகாலை மளிகை மற்றும் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

  அறந்தாங்கி:

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான் கோட்டை பாண்டிக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்ததுடன், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வந்தார். அதனை சேமித்து வைப்பதற்காக கடை அருகே குடோன் அமைத்திருந்தார்.

  முருகேசன் கடையையொட்டி குளமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். கடை அருகில் பட்டாசு விற்பனையும் செய்து வந்தார். இதற்காக கடையையொட்டி அமைந்துள்ள குடோனில் பட் டாசுகளை குவித்து வைத்திருந்தார். மளிகை, பேன்சி ஸ்டோர்கள் மற்றும் மளிகை, பட்டாசுகளை வைப்பதற்கான குடோன்கள் ஒரே கட்டிடத்தில் அருகருகே செயல்பட்டு வந்தன.

  இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென கடைகள் மற்றும் குடோன்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. சிறிது நேரத்தில் 4 கடைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

  இதுகுறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடு பட்டனர். 4 கடைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது டன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீயை அணைப் பதில் சிரமம் ஏற்பட்டது.

  உடனே ஆவுடையார்கோவில், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டன. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 4 கடை களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பாதுகாப்பு கருதி கடைகள், குடோன்கள் செயல்பட்டு வந்த கட்டிடம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் தீ கட்டுக்குள் வந்தது டன், தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

  இருப்பினும் இந்த தீ விபத்தில் மளிகை கடை, குடோனில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள் மற்றும் பேன்சி ஸ்டோரில் இருந்த பொருட்கள், பட்டாசுகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்தில் சேதமான பொருட் களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

  Next Story
  ×