என் மலர்
புதுக்கோட்டை
கொத்தமங்கலத்தில் மழை தண்ணீர் வீணாகாமல் பழைய ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீராக விவசாயி ஒருவர் சேமித்து வருகிறார்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிறையாமல் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நீர்நிலைக்கும் தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் மராமத்து இல்லாமலும் ஆக்கிரமிப்புகளாலும் காணாமல் போய்விட்டது. சில வருடங்களுக்கு முன்பு கொத்தமங்கலம் இளைஞர்கள் ஏரி, குளங்களையும் பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்து செய்துவிட்டு வரத்து வாரிகளை அதிகாரிகள் அடையாளம் காட்டினால் சீரமைப்பதாக பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பவில்லை.
இதே போல தான் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள நீர்நிலை வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இந்த நிலையில் கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் இணைந்து அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் கொண்டு போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த பல வருடங்களாக கொத்தமங்கலம் கிராமத்தில் வீரமணி என்ற இளைஞர் மழையின் போது, தன்வீட்டு கூரைத் தண்ணீரை பழைய கிணற்றில் சேமித்து குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகிறார். அதே போல சேந்தன்குடியில் ஒரு இளைஞர் மழைத்தண்ணீரை குழாய்கள் மூலம் தனது பழைய கிணற்றில் சேமித்து வருகிறார். இதே போல கீரமங்கலம் பகுதியில் பழைய பயன்படாத பல ஆழ்குழாய் கிணறுகளை விவசாயிகள் மழைநீர் சேமிப்பிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கனமழை பெய்து தண்ணீர் வீணாகி செல்வதைப் பார்த்த கொத்தமங்கலம் விவசாயி ரவி தனது பழுதான பழைய ஆழ்குழாய் கிணற்றில் சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தி வருகிறார். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பழைய ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேமிப்பிற்காக பயன்படுத்தினால் மழைத் தண்ணீர் வீணாகாமல் நிலத்தடி நீரை உயர்த்தலாம் என்று இளைஞர்கள் கூறினர்.
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி போலீசார் நேற்று ரெத்தினக்கோட்டை ரெயில்வே கேட், தினசரி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பழனிமுருகன் (வயது 24), சேக்தாவூத் (54), சிவஞானம் (40), அய்யாசாமி (41), மணிமாறன் (41) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதேபோல, அறந்தாங்கி பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக கவிபாரதி (20) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க 19 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் என 6 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் மொத்தம் 6 ஆயிரத்து 749 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 4 ஆயிரத்து 181 பேரும், பெயர் நீக்க 1,550 பேரும், திருத்தம் மேற்கொள்ள 632 பேரும், ஒரே தொகுதிக்குள் திருத்தம் மேற்கொள்ள 386 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
மாவட்டத்தில் 6 முகாம்களில் மொத்தம் 27 ஆயிரத்து 936 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக சேர்க்க 19 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் பெயர்களை நீக்க 4 ஆயிரத்து 424 பேரும், திருத்தம் மேற்கொள்ள 2,107 பேரும், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 1,524 பேரும் விண்ணப்பித்தனர்.
இனி விண்ணப்ப படிவங்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதன்பின் வருகிற ஜனவரி மாதம் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் என 6 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் மொத்தம் 6 ஆயிரத்து 749 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 4 ஆயிரத்து 181 பேரும், பெயர் நீக்க 1,550 பேரும், திருத்தம் மேற்கொள்ள 632 பேரும், ஒரே தொகுதிக்குள் திருத்தம் மேற்கொள்ள 386 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
மாவட்டத்தில் 6 முகாம்களில் மொத்தம் 27 ஆயிரத்து 936 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக சேர்க்க 19 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் பெயர்களை நீக்க 4 ஆயிரத்து 424 பேரும், திருத்தம் மேற்கொள்ள 2,107 பேரும், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 1,524 பேரும் விண்ணப்பித்தனர்.
இனி விண்ணப்ப படிவங்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதன்பின் வருகிற ஜனவரி மாதம் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை அருகே விபத்தில் படுகாயமடைந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் சம்பவத்தன்று வடக்கு ராஜவீதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிவக்குமார் இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் அருகே உள்ள இடையன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் முத்து (வயது 44). விவசாயியான இவர் நேற்று வீட்டில் டி.வி.யை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு, நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
சென்னை:
பா.ம.க.வுக்கு சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்து பா.ம.க. காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் பேசும்போது, அடுத்த தேர்தலில் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.
எம்.பி.யாக இருக்கும் அன்புமணி கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இருக்கிறார்.
அன்புமணியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அதிலும் குறிப்பாக அன்புமணி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மெஜாரிட்டியான நிர்வாகிகள் அன்புமணியின் இளைஞர் அணியை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நியமனம் செய்யப்பட்டபோது அன்புமணி முதல்வராக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதற்கு ஏற்றவாறு கட்சி தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது மாநில தலைவராக இருக்கும் ஜி.கே.மணி சட்டமன்ற பா.ம.க. குழு தலைவராக இருக்கிறார். அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஜி.கே.மணிக்கும் முக்கியமான பதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.
கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு, நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காற்றுடன் மழை பெய்வதால் மரங்களும் விழுந்தன.
கடந்த 25-ந் தேதி முதல் இன்று காலை வரை 46 இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தன. இது பற்றி பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினார்கள்.
33 இடங்களில் விழுந்த மரங்கள் நேற்றுடன் அகற்றப்பட்டு விட்டன. 13 இடங்களில் இன்று காலையில் மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காற்றுடன் மழை பெய்வதால் மரங்களும் விழுந்தன.
கடந்த 25-ந் தேதி முதல் இன்று காலை வரை 46 இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தன. இது பற்றி பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினார்கள்.
33 இடங்களில் விழுந்த மரங்கள் நேற்றுடன் அகற்றப்பட்டு விட்டன. 13 இடங்களில் இன்று காலையில் மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி, வடுகபட்டியை சேர்ந்தவர் தமிழன் மகன் சத்தியமூர்த்தி (வயது 21). இவர் கடந்த 21-ந் தேதி தனது பாட்டி பாப்பம்மாள் (70) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டன் என்ற இடத்தில் சென்றபோது திடீரென நாய் ஒன்று மோட்டார் சைக்கிளின் குறுக்கே சென்றது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். இது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.
இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு தலைமை மருத்துவமைகைளிலும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழை எளிய வெளிப்புற நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பயன் அடைந்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.

அம்மா உணவகம் என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு “கலைஞர் உணவகம்” என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்து இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, புதிதாக தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அ.தி.மு.க.வுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.
ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது அம்மாவின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே, இந்த திட்டம் “அம்மா உணவகம்” என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.
எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் “அம்மா உணவகம்” என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... சபாநாயகர் மாநாட்டில் அப்பாவுவின் தைரியமான பேச்சு பாராட்டுக்குரியது- கே.எஸ்.அழகிரி
ஆவூர் அருகே மூட்டுவலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து 6 கிராம் தாலி காசுகளை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). இவரது மனைவி செல்லம்மாள் (55). செல்லம்மாள் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முகவரி தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் லட்சுமணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பாராம். அப்போது அந்த நபரிடம் தம்பதியினர் இருவரும் தங்களுக்கு கை கால் மூட்டுவலி இருப்பதால் பெரும் சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட அந்த நபர் தான் ஒரு சித்த வைத்தியர் என்றும் உங்களுக்கு மூட்டுவலி சரியாவதற்கு மருந்து கொடுக்கிறேன் என்று நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமணன், செல்லம்மாள் ஆகிய இருவருக்கும் வேப்பிலை, எலுமிச்சம் பழம் கலந்த ஒரு கசாயத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த வயதான தம்பதியினர் இருவரும் மயக்கம் அடைந்துள்ளனர்.
இதை பயன்படுத்தி செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடை கொண்ட தங்க தாலி காசுகளை அந்த மர்ம நபர் திருடிக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 10 மணி ஆகியும் தம்பதியினர் வெளியில் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அப்போதும் அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மயக்கம் தெளிந்த தம்பதிகள் நடந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து தம்பதியிடம் மயக்கமருந்து கொடுத்து தங்கத் தாலி காசுகளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாநிலத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முதல் தவணை தடுப்பூசியில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு அதாவது 45 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.
இதுவரை 1,32,928 பேர் 2-வது தவணை கெரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சென்று முதல் மற்றும் நிலுவையில் உள்ள 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி ஒத்துழைப்பு நல்குங்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 370 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 21). இவர் சம்பவத்தன்று நண்பரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






