என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விராலிமலை அருகே கிரேன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    விராலிமலை தாலுகா, ஆவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் லெனின் இன்பராஜ் (வயது 21). ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவர், விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். லெனின் இன்பராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதேபோல நேற்று முன்தினம் இரவும் அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரை, வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில், லெனின் இன்பராஜ் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். வெளியில் சென்றிருந்த சகாயராஜ் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை கீழே இறக்கி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு லெனின் இன்பராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 750 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    ஆவுடையார்கோவில் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் அருகே துரையரசபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பொன்னுசாமி (வயது 47), குண்டகவயல் மருதங்குடி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (21) ஆகிய 2 பேரையும் ஆவுடையார் கோவில் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 4 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்' ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனவுக்கு இறப்பு எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
    அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி சித்தி விநாயகர் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய அறந்தாங்கி எல்.என்.புரத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.1,860 பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள் எரிந்து நாசமானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகத்தில் ஒரு அறையில் கணினிகள் மற்றும் அறிவியல் உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் பக்கத்து அறையில் அவ்வப்போது வகுப்புகள் நடைபெறும். இந்த நிலையில் கணினிகள் இருந்த அறையில் நேற்று முன்தினம் மாலை திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் 3 கணினிகள் எரிந்து நாசமானது. அந்த அறையில் கரும்புகை படர்ந்திருந்தது. மேலும் சில பொருட்கள் கருகியிருந்தன.

    மின்கசிவு காரணமாக கணினியில் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. பள்ளி நேரம் முடிந்த பின் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்த அறை தற்போது பூட்டப்பட்டன. இந்த தீ விபத்து தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் லதா, வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவ-மாணவிகள் நடமாடும் வளாகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் ஒருபகுதி தீ விபத்தில் சேதமடைந்ததால் இதனை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    திருவரங்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவரங்குளம்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), தொழிலாளி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள கொட்டன் காடு பகுதியை சேர்ந்த தனது சித்தி ஜெயலட்சுமி (68) வீட்டுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தார். நேற்று அருகே உள்ள புது குளத்தில் குளிக்க சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் கரையில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி குளத்தின் ஆழமான பகுதியில் விழுந்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 421 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    கறம்பக்குடியில் சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஆலங்குடி:

    கறம்பக்குடி தென்னகர் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்தநிலையில், அந்த சிறுமியை தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சந்தோஷ் அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா போக்சோ சட்டத்தில் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,267 குடியிருப்பு பகுதிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளோடு பள்ளித் தகவல் மேலாண்மை முறைமையில் இணைக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் `இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பாக மாவட்ட குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி கூறியதாவது:-

    மாவட்டத்தில் `இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பாக 24 கலைக்குழுக்கள்
    வாயிலாக இதுவரை 1,728 குடியிருப்புகளில் விழிப்புணர்வு கலைப்பயணங்கள் நிகழ்த்தி 8,489 தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர். பதிவு செய்துள்ள தன்னார்வலர்களில் 1,209 பேர் தேர்வு எழுதி 549 தன்னார்வலர்கள் 20-ந் தேதி வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், கண்காணிப்பதற்கும், பதிவு செய்வதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் மாவட்ட அளவில் 5 ஆசிரியர்களும், ஒன்றிய அளவில் 26 ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றிய அளவிலான குழு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர், குறுவளமைய தலைமையாசிரியர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளில் அனுபவமிக்க தனிநபர், பஞ்சாயத்து நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,267 குடியிருப்பு பகுதிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளோடு பள்ளித் தகவல் மேலாண்மை முறைமையில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் வாசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் செலுத்திக் கொள்ளாதவர்கள் கணக்கெடுக்கும் பணி சுகாதாரத்துறை சார்பில் நடந்தது. குறிப்பாக மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த பணியில், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், உத்தமன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
    இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 40). இவரது வீட்டு முன்பு சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் பையில் வைத்திருந்த 10½ பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×