என் மலர்
புதுக்கோட்டை
மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றியுள்ள செரியலூர், சேந்தன்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி,பெரியாளூர், நெய் வத்தளி, மேற்பனைக்காடு, கரம்பக்காடு, மாங்காடு, வடகாடு, வம்பன், மாஞ்சன் விடுதி, மழையூர், சம்மட்டி விடுதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பூக்களை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலம் கொத்தமங்கலம் பூ கமிஷன் மண்டிக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். கீரமங்கலம் பூ கமிஷன் மண்டிக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். பண்டிகை,திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு பூக்கள் விற்பனையாகும். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ஆங்கில புத்தாண்டு என்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
முல்லை பூ கிலோ ரூ.1,000- க்கும், மல்லிகை ரூ.700-க்கும், கனகாம்பரம், காட்டுமல்லி ரூ.600-க்கும் விற்பனையானது. தொடர் மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கிரைண்டர் மற்றும் பேன் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 82 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு மீதமிருந்த கிரைண்டர் மற்றும் பேன்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அம்மா கிரைண்டர், மின் விசிறி பெட்டி பெட்டியாக கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்து தற்போது துருப்பிடித்து கிடக்கின்றன. ஏழை, எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்படும் வகையில் உள்ள கிரைண்டர் மிக்சி, பேன் இவைகளை வழங்காத முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
மேலும் இதனால் பயனாளிகளுக்கு முறையாக வழங்காமல் கிரைண்டர் மற்றும் பேன்களை சேமித்து வைத்த மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாக காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிப கிடங்கில் உபயோக மற்றும் கிடக்கும் அரசின் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பயனாளிகளுக்கு வழங்கியது போக எஞ்சியுள்ள பொருட்கள் குறித்து முறையாக அரசுக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன்லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேலதானியம் பேரூந்து நிலையம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த உசிலம்பட்டியை சேர்ந்த சரவணன்(33), கல்லுகுடியிருப்பு மாரியம்மன் கோவில் பின்புறம் ஆன்லைன் லாட்டரி விற்பனைசெய்த அதே பகுதியை சேர்ந்த கணேசன்(28), அரிமளத்தில் மாமரத்து பஸ் நிறுத்தத்தில் ஆன்லைன் லாட்டரிவிற்பனை செய்த மணமேல்குடியை சேர்ந்த லெட்சுமணன்(21), அய்யப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய அய்யப்பனை தவிர மற்ற 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அய்யப்பனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு செல்போன்கள், நோட் புக் 3, பில் புக் 19, ரொக்கம் ரூ.7,450 மற்றும் இருச்சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கான (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மண்டலத்தை சேர்ந்த போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் தினமும் வருகை தந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
அப்போது அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியான 2 தோட்டாக்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அதில் ஒரு குண்டு வீட்டின் சுவரிலும், மற்றொரு குண்டு சிறுவன் புகழேந்தியின் இடது தலையிலும் பாய்ந்தது.
அடுத்த விநாடி சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காரில் தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
உடனடியாக மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் தலைமை மருத்துவர்கள் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக நார்த்தாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனாலும் ஆபத்தான நிலையில் சிறுவன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவனது தந்தை கலைச்செல்வன் கூறுகையில், எனது மகன் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை அவன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அருகிலுள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து பறந்து வந்த குண்டு மகனின் தலையில் பாய்ந்து விட்டது.
என்ன செய்வதென்று தெரியாமல் கதறிய நாங்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளோம். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம் கூறுகையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இடையில் சில மாதங்கள் கலெக்டர் தலையிட்டதன் பேரில் பயிற்சி மையம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இன்று ஒரு சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என்றார்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் கல்லங்கா லப்பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அழகு சாமி (வயது 54), பொன்னமராவதி பூங்குடி வீதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ரவிராஜன் (39), பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சிவகுமார் (37), பொன்னமராவதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் நாச்சியப்பன் (50),பொன்னமராவதி பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவரின் மகன் நிஜந்தன் (30) ஆகியோர் பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த பரிசுச்சீட்டுடன் ரூ.81,340 ரொக்கம் பறிமுதல் செய்த போலீசார் திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீமிசல் பகுதியை அடுத்த கோபாலன்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக புருனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
அவருக்கு மகாதீர்முகமது (20), நஜீர்முகமது (12) ஆகிய 2 மகன்களும், ஜாஹிரா பானு (15) என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகாதீர் முகமது, கோபாலன்பட்டினத்தில் உள்ள அவரது அத்தை சாதிக்காபீவி வீட்டில் வசித்து வருகிறார்.
கோபாலன்பட்டினத்தில் உள்ள ஜகுபர் சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்காபீவி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். சாதிக்கா பீவி, கடந்த 24-ந் தேதி ஜகுபர்சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி காலை 10.30 மணியளவில் சாதிக்காபீவியின் மகள் உம்மல்ஹமீலா (35), ஜகுபர் சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு ஓரம் மிளகாய் பொடி பரவி கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தனது தாய் சாதிக்காபீவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் உள் அறைகள் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ, அலமாரி மற்றும் பெட்டிகளை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றிருந்தது தெரிய வந்தது.
இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்கா பீவி, புருணையில் உள்ள ஜகுபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோபாலன்பட்டினம் ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த 27-ந்தேதி கொள்ளை போன 750 பவுன் நகைகளை இன்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி உள்ளே வீசப்பட்டு இருந்தது.
அதனை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். அந்த நகைகளை போலீசார் நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
உண்மையிலேயே நகை கொள்ளை போனதா அல்லது வேண்டுமென்றே நகைகளை பாலித்தீன் பையில் மறைத்து கிணற்றுக்குள் வீசிவிட்டு புகார் கொடுத்த ஜாபர் சாதிக் நாடகம் ஆடுகிறாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






