என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் தடைச்செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை- 3 பேர் கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன்லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேலதானியம் பேரூந்து நிலையம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த உசிலம்பட்டியை சேர்ந்த சரவணன்(33), கல்லுகுடியிருப்பு மாரியம்மன் கோவில் பின்புறம் ஆன்லைன் லாட்டரி விற்பனைசெய்த அதே பகுதியை சேர்ந்த கணேசன்(28), அரிமளத்தில் மாமரத்து பஸ் நிறுத்தத்தில் ஆன்லைன் லாட்டரிவிற்பனை செய்த மணமேல்குடியை சேர்ந்த லெட்சுமணன்(21), அய்யப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய அய்யப்பனை தவிர மற்ற 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அய்யப்பனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு செல்போன்கள், நோட் புக் 3, பில் புக் 19, ரொக்கம் ரூ.7,450 மற்றும் இருச்சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.






