என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவம் அறந்தாங்கி அருகே மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினம் கிராமத்தில் 2 ஆரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 2&ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்திற்கு சம்மந்தப்பட்டத் துறை அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்து கலைந்து சென்றனர்.
மேலும் கிராமசபைக் கூட்டம் ரத்தான நாளிலிருந்து ஒரு மாதகால அவகாசத்திற்குள் மீண்டும் கிராமசபைக் கூட்டம் நடத்திட வேண்டும் என்ற நோக்கில், அப்பகுதி மக்கள் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையென கூறப்படுகிறது. எனவே தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, அப்பகுதி மக்களே சிறப்பு மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தில் எதிர் வருகிற 26&ந்தேதி நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டத்திற்காவது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரவேண்டும். அவ்வாறு வரவில்லையெனில் மீண்டும் கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பது, தற்போது நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மெத்தனப்போக்கில் செயல்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஊரில் உள்ள பல சாக்கடைகளை தூர்வாரி சுகாதாரத்தை மேம்படுத்தி தரவேண்டும். ரேஷன் கடைகளில் அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்ற அறிவிப்பால் வெளியூரில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களால் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பொதுநல இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சாகுல்ஹமீது தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் செங்கரும்புகளை கொள்முதல் செய்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர்.
ஓராண்டு பயிரான செங்கரும்புகளை, முதலாம் ஆண்டு தை மாத இறுதியில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு தை மாத தொடக்கத்தில் அறுவடை செய்யப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் மற்றும் விவசாய இடுபொருட்கள் கிடைத்ததால் செங்கரும்புகள் 7 அடி முதல் 9 அடிவரை வளர்ச்சி பெற்று நல்ல மகசூலை கண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு முக்கிய பங்காற்றுகிறது.
விஷேமான செங்கரும்பு ஏக்கர் ஒன்றிற்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கரும்புகள் வரை விளைகின்றன. விவசாயிகள் அதை விளைவிக்க ஏக்கர் ஒன்றிற்கு 80 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். ஆனால் செங்கரும்புகளுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. இந்தாண்டு சுமார் 7 லட் சம் கரும்புகள் வரை விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் சுற்றுச் சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கரும்பு விவசாயப்பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் நிலையைக் கேட் டறிந்து, இதுகுறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி செங்கரும்புகளுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது எங்கள் பகுதியில் 2 லட்சம் செங்கரும்புகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான உரிய விலையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். மேலும் மீதமுள்ள 5 லட்சம் கரும்புகளை வியாபாரிகள் தற்போது கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இருந்தபோதிலும் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர்சந்தை வாயிலாக விவசாயிகள் நாங்கள் விளைவித்த செங்கரும்புகளை நேரடியாக விற்பனை செய்ய அரசு வழிவகை செய்தால் எங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதோடு, இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் செங்கரும்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். காலம் காலமாய் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அளவில் நடைபெறும் ஜல்லிக்கட்டி ல் அதிகமான காளைகள் கலந்து கொள்வது வழக்கம்.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதில் தடை ஏற்பட்ட காரணத்தினால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நம்பிக்கையோடு தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
திருவரங்குளம் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்த காளை வளர்பு உரிமையாளர் தங்கள் வீட்டில் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்யும் வகையில் தண்ணீரில் நீச்சல் அடிக்க வைத்தும, மண்ணில் முட்ட வைத்தும் பயிற்சி அளித்து வருகிறார்.
இதற்கான பயிற்சியை ஆனந்த், கண்ணன், சங்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் அளித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி) தொடங்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று பரிசோதனை செய்துகொண்ட பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்...நாளை சட்டசபை தொடங்க உள்ள நிலையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
கீரனூர் அருகே ரெயில் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் யூசுப் (வயது 58). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து தாயகம் திரும்பிய அவர் வீட்டின் அருகாமையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு யூசுப் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் கொடுமையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கீரனூரில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு யூசுப் பரிதாபமாக இறந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தீராத மூட்டு வலியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை தொடர்ந்து, நகரில் பல பகுதிகளில் போலீசார், ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மேலாத்தூர் ஊராட்சி சூரன்விடுதி ராமையா மகன் முத்துக்குமார், வம்பன் 4 ரோடு ஆவுடையப்பன் மகன் ஆறுமுகம், சூரன்விடுதியை சேர்ந்த ராஜய்யா மகன் மணிக்கண்டன், கீழக்கு தம்பிரான்கோட்டை முத்துச்சாமி மகன் குமரேசன், பாத்தம்பட்டி வடக்கு ராமசாமி மகன் சக்திவேல், புதுக்கோட்டைவிடுதி வீரப்பன் மகன் சங்கர் ஆகிய 6 பேர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை பார்த்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராங்கியன்விடுதி ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பல்வேறு கிராமங்கள் உள்ள இப்பகுதியில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன்கருதி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியை தொடங்கியது. 1&ம் வகுப்பில் இருந்து 5&ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒரே ஒரு பள்ளி கட்டிடத்துடன் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடத்திற்கு மேலும் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், குறிப்பாக தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையின்படி அரசு, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்தது.
தொடக்கப்பள்ளியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால். அதன் எதிரே புதிய கட்டிடம் கட்டப்பட்டு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. முதலில் தொடக்க பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் தற்போது 5 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே பழுதடைந்தும், பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து கீழே விழுந்தும் எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளனர். எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே, பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என ராங்கியன் விடுதி கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படாமல் இருக்க துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகேயுள்ள கொத்தமங்கலத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன்-பழனியம்மாள் தம்பதியின் மகன் புகழேந்தி (வயது 11). நார்த்தாமலையில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி பசுமலைப்பட்டி யில் உள்ள துப்பாக்கி சுடும் பயற்சி மையத்தில் இருந்து பாய்ந்து வந்த தோட்டா சிறுவனின் தலையில் பாய்ந்தது. புதுக்கோட்டையில் முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
31-ந்தேதி மாலை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் குழுவினர் சிறுவன் தலையில் இருந்த குண்டை அகற்றினர். ஆனாலும் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணியை விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிடப்பட்டது.
அவர் கடந்த 4 நாட்களாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் தமிழக போலீசாரும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறினர்.
சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்ட கோட்டாட்சியர் தண்டாயுதபாணி இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்தார்.
அதில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியது இன்சார்ட் ரக துப்பாக்கியாகும். அதில் இருந்து வெளியாகும் தோட்டா 600 மீட்டர் வரை மட்டுமே செல்லும் திறன் கொண்டது.
தமிழக போலீசார் பயன்படுத்தியது சாதாரண ரக ரைபிள் துப்பாக்கியாகும். அதிலிருந்து அதிகபட்சமாக 30 மீட்டர் வரை மட்டுமே குண்டு பாய்ந்து செல்லும். ஆனால் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கும், குண்டு பாய்ந்த சிறுவன் இருந்த இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 2 கிலோ மீட்டர் ஆகும். அப்படியானால் சிறுவன் மீது பாய்ந்தது எப்படி?
மேலும் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அந்த குண்டை ஆய்வுக்கு அனுப்பி எந்த ரக துப்பாக்கியில் இருந்து வெளியானது என்று கண்டுபிடித்தால் மட்டுமே அடுத்தகட்ட விசாரணைக்கு செல்ல முடியும் என்று அந்த அறிக்கையில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை கலெக்டர் கவிதா ராமு மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நார்த்தாமலை பகுதி மக்கள் இனிமேலும் இப்படி ஒரு துயர சம்பவம் நடக்காமல் இருக்கவும், வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
அப்போது அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியான 2 தோட்டாக்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அதில் ஒரு குண்டு வீட்டின் சுவரிலும், மற்றொரு குண்டு சிறுவன் புகழேந்தியின் இடது தலையிலும் பாய்ந்தது.
அடுத்த விநாடி சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காரில் தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
உடனடியாக மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் தலைமை மருத்துவர்கள் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட சென்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எஸ்.குளவாய்பட்டி அஞ்சல் சேந்தான்குடி ஊராட்சி மாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் பாண்டிமுருகன் (வயது 19). இவர் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் புத்தாண்டு கொண்டாட செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாண்டிமுருகனின் தாயார் சோலையம்மாள், வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவர் பாண்டிமுருகனை தேடிவந்தனர்.
இந்நிலையில் மாயனூர் குளம் மற்றும் பெருமாள் குளம் இரண்டிற்கும் இடைப்பட்ட சாலையில் உள்ள பாலத்தின் கீழ் தண்ணீரில் பாண்டிமுருகன் பிணமாக கிடப்பதாக வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டிமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? யாரும் அவரை கொலை செய்து இங்கு வந்து வீசி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
அறந்தாங்கி அருகே பெய்த பலத்த மழைக்கு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட கருங்காடு, பாண்டிபத்திரம், குளத்துக் குடியிருப்பு, பெருநாவளூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் ஆற்று நீர் அல்லாமல், மழை நீரை நீர் நிலைகளில் சேமித்து வைத்து அதனை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு உரிய நேரத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து, பயிர்கள் செழித்தன.
நெற்பயிர்கள் முற்றி இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு பெய்த தொடர் கனமழையால் விவசாயத்தை முற்றிலும் இழந்த நாங்கள், அதற்கான பயிர்க்காப்பீடு தொகை இதுவரை கிடைக்கவில்லை, முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இந்தாண்டு, கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் போன்றவற்றில் நகைக்கடன் வாங்கி ஏக்கர் ஒன்றிற்கு 25 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்தோம்.
ஆனால் இந்த முறையும் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். மேலும் நீரில் மூழ்கி தப்பித்த ஒரு சில வயல் கதிர்களை, தண்ணீருக்குள் அறுக்கும் எந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ.3600 வரை செலவாகிறது.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையை சந்தித்து வருகிறோம். எனவே அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க கேட்டுக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
ஆலங்குடி:
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனறு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ஆலங்குடி அருகேயுள்ள குறுந்தடிமனை கிராமத்தில் குளம் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குளத்தின் பரப்பளவில் 15 ஏக்கரில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளான சுப்பையா, ராஜேந்திரன், முருகன், ராமச்சந்திரன், செல்வராஜ், பிரபு, நடராஜன், துரைராஜ் மற்றும் பல விவசாயிகளின் சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த பருவமழை மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பருவம் தவறிய மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஆண்டு 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில் இன்னும் 10, 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய சூழல் இருந்த போது கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கதிர் அறுக்கக்கூடிய சூழலில் தண்ணீருக்குள் நெற்பயிர்கள் மூழ்கி இருப்பது விவசாயிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. பல ஆண்டுகாலமாக புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் போதிய மழை இல்லாததால் சம்பா சாகுபடி பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. இந்த ஆண்டு பருவமழை பெய்தும் பலனற்று போனதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் அப்பகுதியில் தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் அந்த வழியாக மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் அந்த வழியாக போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.