என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவரங்குளத்தில் பயிற்சி பெறும் ஜல்லிக்கட்டு காளை.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். காலம் காலமாய் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அளவில் நடைபெறும் ஜல்லிக்கட்டி ல் அதிகமான காளைகள் கலந்து கொள்வது வழக்கம்.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதில் தடை ஏற்பட்ட காரணத்தினால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நம்பிக்கையோடு தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
திருவரங்குளம் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்த காளை வளர்பு உரிமையாளர் தங்கள் வீட்டில் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்யும் வகையில் தண்ணீரில் நீச்சல் அடிக்க வைத்தும, மண்ணில் முட்ட வைத்தும் பயிற்சி அளித்து வருகிறார்.
இதற்கான பயிற்சியை ஆனந்த், கண்ணன், சங்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் அளித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Next Story






