என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்புகள்.
பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல்
By
மாலை மலர்5 Jan 2022 6:47 AM GMT (Updated: 5 Jan 2022 6:47 AM GMT)

அறந்தாங்கி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் செங்கரும்புகளை கொள்முதல் செய்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர்.
ஓராண்டு பயிரான செங்கரும்புகளை, முதலாம் ஆண்டு தை மாத இறுதியில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு தை மாத தொடக்கத்தில் அறுவடை செய்யப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் மற்றும் விவசாய இடுபொருட்கள் கிடைத்ததால் செங்கரும்புகள் 7 அடி முதல் 9 அடிவரை வளர்ச்சி பெற்று நல்ல மகசூலை கண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு முக்கிய பங்காற்றுகிறது.
விஷேமான செங்கரும்பு ஏக்கர் ஒன்றிற்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கரும்புகள் வரை விளைகின்றன. விவசாயிகள் அதை விளைவிக்க ஏக்கர் ஒன்றிற்கு 80 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். ஆனால் செங்கரும்புகளுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. இந்தாண்டு சுமார் 7 லட் சம் கரும்புகள் வரை விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் சுற்றுச் சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கரும்பு விவசாயப்பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் நிலையைக் கேட் டறிந்து, இதுகுறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி செங்கரும்புகளுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது எங்கள் பகுதியில் 2 லட்சம் செங்கரும்புகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான உரிய விலையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். மேலும் மீதமுள்ள 5 லட்சம் கரும்புகளை வியாபாரிகள் தற்போது கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இருந்தபோதிலும் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர்சந்தை வாயிலாக விவசாயிகள் நாங்கள் விளைவித்த செங்கரும்புகளை நேரடியாக விற்பனை செய்ய அரசு வழிவகை செய்தால் எங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதோடு, இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் செங்கரும்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
