என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பொன்னமராவதி:

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

  இதையடுத்து பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

  அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் கல்லங்கா லப்பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அழகு சாமி (வயது 54), பொன்னமராவதி பூங்குடி வீதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ரவிராஜன் (39), பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சிவகுமார் (37), பொன்னமராவதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் நாச்சியப்பன் (50),பொன்னமராவதி பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவரின் மகன் நிஜந்தன் (30) ஆகியோர் பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர்.

  மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த பரிசுச்சீட்டுடன் ரூ.81,340 ரொக்கம் பறிமுதல் செய்த போலீசார் திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  Next Story
  ×